யோக நரேந்திர மல்லர்
Yoga Narendra Malla | |
---|---|
![]() பதான் அரண்மனை சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள யோக நரேந்திர மல்லரின் சிலை | |
இலலித்பூரின் அரசன் | |
ஆட்சிக்காலம் | 1685–1705 |
முன்னையவர் | சிறீநிவாச மல்லர் |
பின்னையவர் | லோக பிரகாஷ் மல்லர் |
பிறப்பு | 1667 நேபாளம் |
இறப்பு | 1705 |
குழந்தைகளின் பெயர்கள் | யோகமதி |
அரசமரபு | Malla |
தந்தை | சிறீநிவாச மல்லர் |
யோக நரேந்திரர் என்றும் அழைக்கப்படும் யோக நரேந்திர மல்லர் (Yoga Narendra Malla) மல்லர் வம்ச மன்னர். இவர் இலலித்பூரை ஆட்சி செய்தார். இவர் சிறீநிவாச மல்லரின் மகனாவார். 1685 முதல் 1705 இல் தான் இறக்கும் வரை இலலித்பூரை ஆட்சி செய்தார்.[1][2]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]யோக நரேந்திரனின் தந்தை சிறீநிவாச மல்லர் இவருக்கு இராச்சியத்தை நிர்வகிப்பதில் சிறுவயதிலேயே கற்றுத் தந்தார். இருப்பினும், உள்ளூர் நிலப்பிரபுக்களுடனான இவரது உறவுகள் விரைவில் மோசமடையத் தொடங்கின. குறிப்பாக பாகீரத் பையா என்ற நபருக்கு எதிராக. யோக நரேந்திரனும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதனால் இவரது தந்தை பதவி விலக நேரிட்டது.[2]
ஆட்சி
[தொகு]1685இல் சிறீநிவாச மல்லர் பதவி விலகினார். அதே ஆண்டு டிசம்பரில் யோக நரேந்திரன் மன்னராக முடிசூட்டப்பட்டார். இவர் தனது எதிரிகளை அகற்றத் தொடங்கினார். மேலும் 1690இல் பாகீரத் பையாவைக் கொன்றார். இவருக்கு வம்சிதாரா என்ற அமைச்சர் இருந்தார். அவர் இலலித்பூரை ஆட்சி செய்த நிலப்பிரபுக்களில் ஒருவர்.[2]
காந்திபூர் மற்றும் இலத்பூருடனான மோதல்கள்
[தொகு]யோக நரேந்திர மல்லரின் ஆட்சியின் போது, அண்டை இராச்சியங்களான காந்திபூர் மற்றும் பக்தபூர் ஆகியவற்றுடன் ஏராளமான மோதல்கள் நிகழ்ந்தன. 1688 ஆம் ஆண்டில், இலட்சுமி நாராயணன் என்ற அமைச்சரின் செல்வாக்கின் காரணமாக, இலலித்பூர் காந்திபூருடன் சேர்ந்து பக்தபூரின் மீதான முற்றுகையை வலுப்படுத்தினார். 1689இல் இலலித்பூர் பக்கபலமாக மாறி காந்திபூரை பக்தபூருடன் இணைந்து தாக்கியது.போரில் இலட்சுமி நாராயணன் 1690இல் படுகொலை செய்யப்பட்டார். இதனால் போர் சிறிது காலம் நிறுத்தப்பட்டன. 1696 மற்றும் 1697 ஆம் ஆண்டுகளில் மூன்று இராச்சியங்களுக்கு இடையே சிறிய போர்களும் நடந்தன.[2]
வாரிசு
[தொகு]யோக நரேந்திரன் இறந்தபோது இவருக்கு முறையான வாரிசுகள் இல்லை. இதனால் இலலித்பூரில் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் போனது. இது பத்து ஆண்டுகள் நீடித்தது. இலலித்பூரின் நிலப்பிரபுக்கள் முதலில் யோக நரேந்திரனின் மகள் வயிற்றுப் பேரனான லோகபிரகாஷ் மல்லனை மன்னராக நியமித்தனர். பதினொரு மாத ஆட்சி பிறகு லோக பிரகாஷ் பெரியம்மை நோயால் இறந்தார். அவருக்குப் பிறகு யோக நரேந்திரனின் சகோதரி மணிமதியின் மகன் இந்திர மல்லர் ஆட்சிக்கு வந்தார்.[2]
சொந்த வாழ்க்கை
[தொகு]தனது மூதாதையர்களைப் போலவே, யோக நரேந்திரனும் ஒரு மத மன்னராக இருந்தார். இவர் பல மத நடவடிக்கைகளை சீர்திருத்தியதோடு, வீமன் துச்சாதனனைக் கொல்லும் உருவத்தையும் அமைத்தார்.[3] 1705 ஆம் ஆண்டில் இவர் பக்தபூரின் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டார்.[2] யோக நரேந்திரனின் இராணிகள் மற்றும் மறுமனையாட்டிகளில் குறைந்தது 21 பேர் உடன்கட்டை ஏறியதாகத் தெரிகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Collections Online | British Museum". www.britishmuseum.org. Retrieved 2023-02-16.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Shaha, Rishikesh. Ancient and Medieval Nepal (PDF) (in English). Kathmandu, Nepal: University of Cambridge. pp. 74–76.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Shrestha, D.B.; Singh, C.B. (1972). The History of Ancient and Medieval Nepal (PDF) (in English) (1st ed.). Kathmandu: கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம். pp. 57–59.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Regmi, Mahesh C.. "Regmi Research Series". German Oriental Society 5: 200–202. https://studylib.net/doc/8525992/regmi_05.