யோக் ராஜ் சர்மா
யோக் ராஜ் சர்மா | |
|---|---|
2015-இல் யோக் ராஜ் சர்மாவுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் பத்மசிறீ விருதை வழங்குகிறார் | |
| பிறப்பு | 16 டிசம்பர் 1950 சம்மு, சம்மு காசுமீர், இந்தியா |
| பணி | கண் மருத்துவர் |
| செயற்பாட்டுக் காலம் | 1979 முதல் |
| அறியப்படுவது | விழித்திரை அறுவை சிகிச்சை |
| விருதுகள் | பத்மஸ்ரீ அமெரிக்கக் கண்மருத்துவக் கழகத்தின் கல்விசார் சாதனை விருது அமெரிக்கக் கண்மருத்துவக் கழகத்தின் அறுவை சிகிச்சை காணொளி விருது |
யோக் ராஜ் சர்மா (Yog Raj Sharma) ஓர் இந்தியக் கண் மருத்துவர் ஆவார்[1]. இவர் புது தில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கீழ் இயங்கும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கண் மருத்துவ அறிவியல் மையத்தின்' முன்னாள் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[2] இம்மையம், இந்தியாவில் பார்வையின்மையின் பரவலைக் குறைப்பதற்கான இந்திய அரசின் முன்னெடுப்பான 'பார்வையின்மை கட்டுப்பாட்டிற்கான தேசியத் திட்டத்தின்' முதன்மை அமைப்பாகும்.[3] இவர் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ், 'நீரிழிவு விழித்திரை பாதிப்பு தடுப்பு, கட்டுப்பாட்டுக் குழுவின்' தலைவராகவும், 'முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கான விழித்திரை பாதிப்பால் ஏற்படும் பார்வையின்மை தடுப்புக்கான தேசியக் குழுவின்' இணைத் தலைவராகவும் உள்ளார்.[4] மேலும், இவர் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் ஆலோசகராகவும் செயல்படுகிறார். 2015-ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கி இந்திய அரசு இவரை கௌரவித்தது. [5] 2005-ஆம் ஆண்டில் விழித்திரை விலகல் சிகிச்சைக்கான, ஆகிய முறைகளை ஒப்பிட்டு யோக் ராஜ் சர்மா வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை, கடந்த சுமார் 121 ஆண்டுகளில் விழித்திரை விலகல் சிகிச்சை குறித்த சிறந்த 100 வெளியீடுகளில் ஒன்றாக 'அமெரிக்க விழித்திரை நிபுணர்கள் சங்கம்' நவம்பர் 2021-இல் குறிப்பிட்டது. இந்தச் சிறந்த நூறு வெளியீடுகளில் மொத்தம் பத்தொன்பது நாடுகளின் பங்களிப்பு மட்டுமே இருந்தது; அவற்றில் மூன்று ஆசிய நாடுகள் அடங்கும். இந்தியாவிலிருந்து இந்த ஆய்வு மட்டுமே அதில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2021-இல் சம்முவில் இருந்து வெளியாகும் 'டெய்லி எக்செல்சியர்' நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், டாக்டர் சர்மா இதனைத் தனது "தொழில் வாழ்க்கையின் மிகச்சிறந்த சாதனை" என்று குறிப்பிட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]யோக் ராஜ் சர்மா வட இந்திய மாநிலமான சம்மு காசுமீரின் சம்முவில் பிறந்தார்.[6] தனது ஆரம்பக் கல்வியை சம்முவில் உள்ள அரசு ஸ்ரீ ரன்பீர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.[7] 1974-இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த இவர், 1978-இல் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை பட்டத்தை பெற்றார்.[2][8][6]அங்கு இவர் ஓராண்டு காலம் அங்கேயே தங்கி மருத்துவராகப் பணியாற்றினார். உயர்கல்விக்காக 1979-இல் அமெரிக்கா சென்ற இவர், அதே ஆண்டில் 'வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான கல்வி ஆணையத்திடமிருந்து' சான்றிதழைப் பெற்றார்.[2][8][6]பின்னர் 1982 வரை யேல் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் கண் மருத்துவம் பார்வை அறிவியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[2][8][9]அதனைத் தொடர்ந்து பால்டிமோரில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[9] அங்கு 1984 வரை இருந்தார்.[2][8]இந்தியா திரும்பிய இவர், 1985-இல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையில் உதவி இயக்குநராகப் பொறுப்பேற்றார்.[2][8] 1986-இல் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் உள்ள மருத்துவர் ஆர். பி. மையத்தின் விழித்திரை அறுவைச் பிரிவில் இணைந்த இவர், 2002-இல் அதன் அறுவை சிகிச்சைத் துறைப் பேராசிரியரானார்.[2][8]
சர்மா 2012 முதல் மருத்துவர் ஆர். பி. கண் மருத்துவ அறிவியல் மையத்தின் தலைவராக இருந்து வருகிறார்.[8][6] மேலும் 1992 முதல் ஐக்கிய அரபு அமீரகப் பல்கலைக்கழகத்தின் மருத்துவம் சுகாதார அறிவியல் புலத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்; அப்பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட முதல் கண் மருத்துவர் இவரே என்று கூறப்படுகிறது.[2][7]வ்இவர் இந்திய அரசின் இரண்டு முக்கியத் திட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார்: 'நீரிழிவு விழித்திரை பாதிப்பு தடுப்பு கட்டுப்பாட்டுக் குழுவின்' தலைவராகவும், 'முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கான விழித்திரை பாதிப்பால் ஏற்படும் பார்வையிழப்பைத் தடுப்பதற்கான தேசியக் குழுவின்' இணைத் தலைவராகவும் செயல்படுகிறார்.[2][6] மேலும் இவர் அத்திட்டங்களின் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.[10] இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய கண் மருத்துவ மையத்தின் இயக்குனராகவும் உள்ளார்.[2][11][6][7]
மரபு மற்றும் சாதனைகள்
[தொகு]விழித்திரை அறுவை சிகிச்சையில் பல புதிய உத்திகளை அறிமுகப்படுத்தியதற்காக அறியப்படும் சர்மா, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல நிபுணர்களுக்கு இம்முறையில் பயிற்சி அளித்துள்ளார்.[2] [8] மேலும் 20,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இவர் தேசிய சர்வதேச அளவில் சக நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படும் ஆய்விதழ்களில் 193 மருத்துவக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[9][12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sunlight Health". Sunlight Health. 2015. Retrieved 4 March 2015.
- 1 2 3 4 5 6 7 8 9 10 11
- "AIIMS". AIIMS. 2015. Retrieved 4 March 2015.
- "Web Med". Web Med. 2015. Archived from the original on 16 July 2020. Retrieved 4 March 2015.
- "Edubilla". Edubilla. 2015. Retrieved 4 March 2015.
- ↑ "National Programme for the Control of Blindness". National Programme for the Control of Blindness. 2015. Archived from the original on 21 May 2021. Retrieved 4 March 2015.
- ↑ "NPCB". NPCB. 2015. Archived from the original on 7 October 2019. Retrieved 4 March 2015.
- ↑
- "Padma Awards". Padma Awards. 2015. Archived from the original on 28 January 2015. Retrieved 16 February 2015.
- "India Medical Times". India Medical Times. 26 January 2015. Retrieved 4 March 2015.
- 1 2 3 4 5 6 "Daily Excelsior". Daily Excelsior. 28 January 2015. Retrieved 4 March 2015.
- 1 2 3 "Greater Kashmir". Greater Kashmir. 30 April 2014. Retrieved 4 March 2015.
- 1 2 3 4 5 6 7 8 "Web Med". Web Med. 2015. Archived from the original on 16 July 2020. Retrieved 4 March 2015.
- 1 2 3 Sharma (2015). Concise Textbook of Ophthalmology. Elsevier India. ISBN 9788181478535. Retrieved 4 March 2015.
- ↑ "SEARO". SEARO WHO. 2015. Archived from the original on 12 October 2014. Retrieved 4 March 2015.
- ↑ "Edubilla". Edubilla. 2015. Retrieved 4 March 2015.
- ↑ "PubFacts Profile". PubFacts. 2015. Retrieved 4 March 2015.
மேலும் வாசிக்க ==
- Yog Raj Sharma; Rajeev Sudan (2006). Concise Textbook Of Ophthalmology. Elsevier. ISBN 9788181478535.
- H V Nema, Nitin Nema (authors), Y R Sharma (contributor) (2014). Diagnostic Procedures in Ophthalmology. Jaypeee Medical. p. 462. ISBN 9789350908525.
{{cite book}}:|author=has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- "ResearchGate". 2015. Retrieved 4 March 2015.
- "PubFacts Profile". PubFacts. 2015. Retrieved 4 March 2015.