யோகேசு சாம்சி
யோகேசு சாம்சி | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
இசைக்கருவி(கள்) | கைம்முரசு இணை |
இசைத்துறையில் | 1991 முதல் தற்போது வரை |
யோகேசு சாம்சி (Yogesh Samsi) (பிறப்பு 17 நவம்பர் 1968) [1] இவர் ஓர் இந்தியாவைச் சேர்ந்த கைம்முரசு இணைக் கலைஞராவார். [2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர், தில்லியில் புகழ்பெற்ற பாடகர் பண்டிட் தின்கர் கைகினிக்கு பிறந்தார். [3] யோகேசின் தந்தை இவரை நான்கு வயதில் இசைக்கு அறிமுகப்படுத்தினார். [4] தனது நான்கு வயதில் பண்டிட் எச். தாரநாத் ராவிடம் கைம்முரசுவைக் கற்கத் தொடங்கினார். பின்னர், இவர் மிகச்சிறந்த தாளவாதிகளில் ஒருவரும், புகழ்பெற்ற கைம்முரசுக் கலைஞருமான சாகீர் உசைனின் தந்தையான உஸ்தாத் அல்லா ரக்கா கானின் வழிகாட்டுதலை நாடினார். இவர் அல்லா ரக்காவின் உதவியுடன் 23 ஆண்டுகள் கழித்தார்.
தொழில்
[தொகு]விலாயத் கான், அஜய் சக்ரவர்த்தி, தின்கர் கைகினி, பீம்சென் ஜோஷி, சிவக்குமார் சர்மா, ஹரிபிரசாத் சவுராசியா, கென் ஜுக்கர்மன், பிர்ஜு மகராஜ் மற்றும் உஸ்தாத் இரசீத் கான் உள்ளிட்ட இந்தியாவின் உயர்தர இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுடன் இவர் பணியாற்றி வந்துள்ளார். கைம்முரசு இணையில் தனித் திறமை நிகழ்ச்சியில் பாரம்பரியத்தை பாதுகாக்கும் தனது மதிப்பிற்குரிய குருவின் வார்த்தையைத் தொடர இவர் பாடுபடுகிறார்.
விருதுகள்
[தொகு]- 2017இல் இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. [5] [6] [7]
குறிப்புகள்
[தொகு]- ↑ http://www.sudeepaudio.com/viewProfiles.php?act=detailProfile&pid=119
- ↑ "Archived copy". Archived from the original on October 17, 2012. Retrieved November 30, 2009.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-10. Retrieved 2021-01-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-02-01. Retrieved 2021-01-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2021-01-19. Retrieved 2021-01-18.
- ↑ https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsangeetnatakakademinewdelhi%2Fposts%2F1942933472384008
- ↑ https://www.business-standard.com/article/news-ians/42-artistes-selected-for-sangeet-natak-akademi-awards-118061901308_1.html