யோகேசு குமார் சாவ்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகேசு குமார் சாவ்லா
Yogesh Kumar Chawla
பிறப்புஇந்தியா
பணிகல்லீரல் நிபுணர்
விருதுகள்பத்மசிறீ
பிதான் சந்திரா ராய் விருது

யோகேசு குமார் சாவ்லா (Yogesh Kumar Chawla) என்பவர் ஓர் இந்திய மருத்துவர் மற்றும் கல்லீரலியலில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். சண்டிகார் நகரிலுள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார்[1][2]. சபல்பூரிலுள்ள நேதாஜி சுபாசு சந்திரபோசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்ற இவர் அதே கல்லுரியில் இரைப்பை நோய்களைப் பற்றிய ஆய்வுப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றார்[2]. 1983 ஆம் ஆண்டு சண்டிகார் நகரிலுள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்லீரல் இயல் துறையில் ஆசிரிய உறுப்பினராக இருந்த இவர் 1999 ஆம் ஆண்டு அத்துறையின் தலைவராக உயர்ந்தார்[1]. இதே ஆண்டு இந்தியாவில் மருத்துவ பிரிவுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பிதான் சந்திரா ராய் விருதை இந்திய மருத்துவக் கழகம் சாவ்லாவுக்கு வழங்கியது[1]. தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் கௌரவ உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்[3]. 2015 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "India Medical Times". India Medical Times. 15 October 2011. Archived from the original on 20 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் February 20, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Day and Night News". Day and Night News. 2015. Archived from the original on பிப்ரவரி 20, 2015. பார்க்கப்பட்ட நாள் February 20, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் March 19, 2016.
  4. "Padma Awards". Padma Awards. 2015. Archived from the original on ஜனவரி 26, 2015. பார்க்கப்பட்ட நாள் February 16, 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help)CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகேசு_குமார்_சாவ்லா&oldid=3569373" இலிருந்து மீள்விக்கப்பட்டது