யோகா கற்றுக் கொள்ளுங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோகா கற்றுக் கொள்ளுங்கள் (நூல்)
வகை:மருத்துவம்
துறை:யோகாசனங்கள்
இடம்:நலம்,
நியூ ஹாரிஜன் மீடியா பி.லிட்.,
எண்33/15, இரண்டாவது மாடி,
எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார் பேட்டை,
சென்னை - 600 018.
மொழி:தமிழ்
பக்கங்கள்:120
பதிப்பகர்:நலம் பதிப்பகம்
பதிப்பு:டிசம்பர்2007

யோகாவின் அடிப்படைத் தத்துவம் முதல் ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா உதவும் முறைகள் என அனைத்தையும் இந்த “யோகா கற்றுக் கொள்ளுங்கள்” நூல்(ISBN 978-81-8368-612-9) விளக்குகிறது. 120 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 60 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

நூலாசிரியர் கணபதி ராம்கிருஷ்ணன் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கும் இவர் பத்திரிகைகளில் இசை, நடனம் குறித்த விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.

பொருளடக்கம்[தொகு]

  1. யோகா -ஓர் அறிமுகம்
  2. மனநலமே உடல் நலம்
  3. யோகா- மூன்று அம்சங்கள்
  4. ஆசனங்கள்
  5. பிராணாயாமம்

எனும் 5 தலைப்புகளில் எளிமையான நடையில் யோகா குறித்து இந்த நூலில் முழுமையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

யோகா -ஓர் அறிமுகம்[தொகு]

முதல் பகுதியான இதில் யோகா என்றால் என்ன என்பது குறித்து முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.

மனநலமே உடல் நலம்[தொகு]

இத்தலைப்பில் மனநலம் குறித்து விளக்கப்பட்டு அதுவே உடல் நலத்திற்கு உதவுகிறது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

யோகா- மூன்று அம்சங்கள்[தொகு]

யோகாவில் இருக்கும் மூன்று நிலைகளான ஆசனம், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

ஆசனங்கள்[தொகு]

உடலுக்கு வலிமையும், உள்ளத்துக்குத் தெளிவையும் அளிக்கும் நூற்றுக்கணக்கான ஆசனங்கள் இருக்கின்றன போதும் 69 ஆசனங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஆசனங்களில் மிக முக்கியமான ஆசனங்கள் செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதுடன் அதற்கான பலன்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பிராணாயாமம்[தொகு]

பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சியில் 12 முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமான சில மூச்சுப் பயிற்சிகள் குறித்து விளக்கமளித்து அதனால் ஏற்படும் பயன்களும் சொல்லப்பட்டுள்ளன.

- இன்று உலகம் முழுவது பரவி வரும் யோகாசனப் பயிற்சி முறை குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ள இந்நூலில் உள்ள பயிற்சிப் படங்களில் இருப்பவர் நூலாசிரியர் கணபதி ராமகிருஷ்ணன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]