உள்ளடக்கத்துக்குச் செல்

யோகான்னசு பிரான்சு ஆர்ட்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகான்னசு பிரான்சு ஆர்ட்மேன்
Johannes Franz Hartman
பிறப்பு(1865-01-11)சனவரி 11, 1865
எர்புர்ட், சாக்சனி செருமனி
இறப்புசெப்டம்பர் 13, 1936(1936-09-13) (அகவை 71)
கோட்டிஞ்சன்
குடியுரிமைசெருமனியர்
தேசியம்செருமனியர்
துறைகனிமவியலாளர்
பணியிடங்கள்பொட்சுடாம் வானியற்பியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள்லீப்சிக் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவிண்மீன்களிடை ஊடகம்.கண்டுபிடித்தமை

யோகான்னசு பிரான்சு ஆர்ட்மேன் (ஜனவரி 11, 1865 – செப்டம்பர் 13, 1936) ஒரு செருமானிய இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் 1904இல் டெல்ட்டா ஓரியானிசின் நிறமாலையை ஆராய்ந்த போது கால்சியம் வரிகளைத் தவிர மற்ற அனைத்து வரிகளும் இடம்பெயர்வதைக் கண்டார். இது விண்மீன்களிடை ஊடகம் ஒன்று நிலவுவதைக் குறிக்கிறது எனக் கூறினார்.[1][2]

இவர் தெ லா பிலாத்தா வான்காணகத்தின் இயக்குநராக நவம்பர் 1922 முதல் மே 1934வரை இருந்தார். அப்போது இவர் வானியற்பியலில் வான்காணகப் பணிகளை வழிநடத்தினார். இவர் மூன்று சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.

சிறுகோள்கள் கண்டறியப்பட்டவை: 3
965 ஆஞ்செலிகா நவம்பர் 4, 1921
1029 லா பிலாத்தா ஏப்பிரல் 28, 1924
1254 எர்ஃபோர்டியா மே 10, 1932

இவர் இலீப்சிக் பல்கலைக்கழகத்தில் நிலா மறைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து 1891இல் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

தகைமைகள்

[தொகு]
  • நிலாவின் அப்புறம் உள்ள குழிப்பள்ளம் ஒன்று ஆர்ட்மேன் குழிப்பள்ளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • தொலைநோக்கியைக் குவியவிக்கும் கருவி ஒன்று ஆர்ட்மேன் மறை என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஐசாக் அசிமோவ், Asimov's Biographical Encyclopedia of Science and Technology 2nd Revised edition
  2. Hartmann, J. (1904). "Investigations on the spectrum and orbit of delta Orionis". Astrophysical Journal 19: 268–286. doi:10.1086/141112. Bibcode: 1904ApJ....19..268H. http://articles.adsabs.harvard.edu/full/1904ApJ....19..268H. 
  3. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]