யோகன் போதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோகன் போதா
Johan Botha.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்யோகன் போதா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குபந்து வீச்சுசாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்சனவரி 2 2006 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுநவம்பர் 20 2010 எ பாக்கிஸ்தான்
ஒநாப அறிமுகம்நவம்பர் 16 2005 எ இந்தியா
கடைசி ஒநாபசனவரி 23 2011 எ இந்தியா
ஒநாப சட்டை எண்22
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 78 81 181
ஓட்டங்கள் 83 609 3,659 2,203
மட்டையாட்ட சராசரி 20.75 19.03 31.54 23.18
100கள்/50கள் 0/0 0/0 1/25 0/7
அதியுயர் ஓட்டம் 25 46 109 57*
வீசிய பந்துகள் 1017 3,823 12,453 8,617
வீழ்த்தல்கள் 17 72 192 167
பந்துவீச்சு சராசரி 33.70 40.50 31.91 38.05
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 4/56 4/19 6/42 4/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 36/– 54/– 68/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 6 2013

யோகன் போதா (Johan Botha, பிறப்பு: மே 2, 1982),[1] தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1]

தேர்வுத் துடுப்பாட்டங்கள்[தொகு]

2006 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . சனவரி 2 , இல் சிட்னியில் நடைபெற்ற ஆத்திரேலியாத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 62 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைஎடுத்தார். பின் பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசினார். இதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசி 26ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியின் பந்துவீச்சில் 12 ஓவர்களை வீசி 77 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப்-போட்டியில் ஆத்திரேலிய அணி 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]

2010 ஆம் ஆண்டில் தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .[1] நவம்பர் 26 , இல் அபுதாபியில் [1] நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 37 பந்துகளில் 12 ஓட்டங்களை எடுத்து அப்துர் ரகுமான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்டுவீச்சில் 14 ஓவர்கள் வீசி 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். 54 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார்.பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 14 பந்துகளில் 7 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.பின் பந்துவீச்ச்சில் 17 ஓவர்கள்வீசி 4 ஓவர்களை மெய்டனாக வீசினார். இதில் 40 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[3]

ஒருநாள் போட்டிகள்[தொகு]

2005 ஆம் ஆண்டில் 2003 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.[1] அக்டோபர் 12 , ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார் இந்தப் போட்டியில் 6 ஓவர்கள் வீசி 31 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2012 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.[1] மார்ச் 3 இல் , ஓக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப்போட்டியில் 7 ஓவர்கள் வீசி 28 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 1 இலக்கினைக் கைப்பற்றினார். மேலும் 10பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Johan Botha", Cricinfo, 2018-05-30 அன்று பார்க்கப்பட்டது
  2. "3rd Test, South Africa tour of Australia at Sydney, Jan 2-6 2006 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, 2018-05-30 அன்று பார்க்கப்பட்டது
  3. "2nd Test, South Africa tour of United Arab Emirates at Abu Dhabi, Nov 20-24 2010 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, 2018-05-30 அன்று பார்க்கப்பட்டது

வெளியிணைப்புகள்[தொகு]

  • Johan Botha at ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ
  • Johan Botha at CricketArchive (subscription required)
  • Johan Botha on டுவிட்டர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகன்_போதா&oldid=3006643" இருந்து மீள்விக்கப்பட்டது