உள்ளடக்கத்துக்குச் செல்

யொஹான் வில்கெம் ரிட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யொஹான் வில்கெம் ரிட்டர்
1804 ஆம் ஆண்டில் ரிட்டர்
1804 ஆம் ஆண்டில் ரிட்டர்
பிறப்பு (1776-12-16)16 திசம்பர் 1776
சாமித்சு, பிரான்டென்பர்க்கைச் சேர்ந்த மார்க்ரவியேட்டு, புனித உரோமைப் பேரரசு
இறப்பு23 சனவரி 1810(1810-01-23) (அகவை 33)
மியூனிக், பிரேவியா பேரரசு
தேசியம்செருமானியர்
துறைவேதியியல்,இயற்பியல்
அறியப்பட்டதுபுற ஊதாக் கதிர்
மின்னாற்பகுப்பு
மின்முலாம் பூசுதல்

யொஹான் வில்கெம் ரிட்டர் (16 திசம்பர் 1776-23 சனவரி 1810) ஒரு செருமானிய வேதியியலாளர், இயற்பியலாளர் மற்றும் தத்துவஞானி ஆவார்.[1] இவர் செருமானிய வியன்புனைவியக்குத்துடன் தொடர்புடையவர். மின்காந்த நிறமாலையில் புற ஊதாக் கதிர் பகுதியை கண்டுபிடித்ததற்காகவும் இவர் அறியப்படுகிறார். முதன்முதலில் நீடித்து நிலைத்த நீர் மின்னாற்பகுப்பு, மின் முலாம் கண்டுபிடிப்பிற்காகவும் இவர் பெருமைக்குரியவராகிறார்.

செருமானிய வியன்புனைவியக்கம்

[தொகு]

ரிட்டர் செருமானிய வியன்புனைவியக்கத்தைச் சேர்ந்தவர். இவர் தனிப்பட்ட முறையில் யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட், யொஹான் கோட்ஃபிரைட் எர்டர், கிளெமென்சு பிரெண்டானோ ஆகியோரை நன்கு அறிந்திருந்தார். நேச்சர்ஃபிலோசாபி இயக்கத்தின் முக்கிய தத்துவஞானியான பிரெட்ரிக் வில்ஹெல்ம் ஜோசப் ஷெல்லிங் என்பவரால் இவர் கடுமையாக ஈர்க்கப்பட்டார். 1801 ஆம் ஆண்டில், ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் ஜெனாவைப் பார்வையிட்டார், மேலும் அவரது நண்பரானார். ரிட்டரின் பல ஆராய்ச்சிகள் பின்னர் ஆர்ஸ்டெட்டால் தெரிவிக்கப்பட்டன, இவர் நேச்சர்ஃபிலோசோபியின் தத்துவ கண்ணோட்டத்தால் வலுவாக பாதிக்கப்பட்டார்.[2]

அறிவியல் ஆராய்ச்சி

[தொகு]

யொஹான் வில்கெம் ரிட்டரின் முதல் அறிவியல் ஈடுபாடு அவருக்கு 14 வயதாக இருந்தபோது தொடங்கியது. அவர் லிக்னிட்சில் (லெக்னிகா) ஒரு மருந்தகத்தில் பயிற்சி பெற்றார். வேதியியலில் ஆழ்ந்த ஆர்வத்தைப் பெற்றார். 1796 ஆம் ஆண்டில் ஜெனா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பைத் தொடங்கினார். ஒரு சுயமாகக் கற்றுக்கொண்ட அறிவியலாளரான இவர் வேதியியல், மின்சாரம் மற்றும் பிற துறைகளில் பல சோதனை ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

ரிட்டரின் முதல் அறிவியல் ஆய்வுகள் சில கால்வானிக் நிகழ்வுகளை பற்றியவை. லூய்கி கால்வானி மற்றும் பிற ஆய்வாளர்களால் கவனிக்கப்பட்ட உடலியல் விளைவுகளை இவர் வேதியியல் வினைகளால் உருவாக்கப்படும் மின்சாரத்தின் காரணமாக விளக்கினார். அவரது விளக்கம் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் விளக்கத்திற்கு கால்வானி ("விலங்கு மின்சாரம்") மற்றும் அலெஸாண்ட்ரோ வோல்டா (உலோகத் தொடர்பால் உருவாக்கப்படும் மின்சாரம்) முன்மொழிந்த விளக்கங்களை விட நெருக்கமானது, ஆனால் அது அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

1800 ஆம் ஆண்டு ரிட்டர் எழுதிய மின்னாற்பகுப்பு கருவியின் விளக்கப்படம்

1800 ஆம் ஆண்டில், வோல்ட்டிக் குவியல் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, வில்லியம் நிக்கல்சன் மற்றும் அந்தோனி கார்லிஸ்லே ஆகியோர் மின்சாரத்தால் தண்ணீரை சிதைக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு, ரிட்டர் சுயாதீனமாக அதே விளைவைக் கண்டுபிடித்தார். அதுமட்டுமின்றி, இவர் தனித்தனியாக சேகரித்து, வேதிவினையில் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனின் அளவை அளந்தார். மின்முலாம் செயல்முறையையும் இவர் கண்டுபிடித்தார்.[3] 1802 ஆம் ஆண்டில் இவர் தனது முதல் மின் வேதியியல் கலத்தை உருவாக்கினார், இதில் 50 செப்பு வட்டுகள் ஒரு உப்பு கரைசலால் ஈரப்படுத்தப்பட்ட அட்டை வட்டுகளால் பிரிக்கப்பட்டன.

தனிப்பட்ட வாழ்க்கையும் இறப்பும்

[தொகு]

இவர் 1804 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார் இவருக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். ஆனால், இவரால் தனது குடும்பத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மோசமான உடல்நலக் குறைவின் காரணமாகவும் நிதி நெருக்கடியாலும் சிரமப்பட்ட இவர் 1810 ஆம் ஆண்டில் ஒரு இளைஞராக இருந்த போதே ஏழையாகவே இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Büttner, Stefan (2003), "Ritter, Johann Wilhelm", Neue Deutsche Biographie (NDB) (in ஜெர்மன்), vol. 21, Berlin: Duncker & Humblot, pp. 664–665{{citation}}: CS1 maint: postscript (link) CS1 maint: ref duplicates default (link); (full text online).
  2. Roberto de Andrade Martins (2007), "Ørsted, Ritter and magnetochemistry", in Hans Christian Ørsted and the Romantic Legacy in Science: Ideas, Disciplines, Practices, eds. R.M. Brain, R. S. Cohen & O. Knudsen (Boston Studies in the Philosophy of Science, vol. 241), New York: Springer, pp. 339-385. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-2979-0).
  3. Walter D. Wetzels (1990), "Johann Wilhelm Ritter: Romantic Physics in Germany", in Romanticism and the Sciences, eds. Andrew Cunningham and Nicholas Jardine. Cambridge: Cambridge University Press, pp. 199-212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-35602-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யொஹான்_வில்கெம்_ரிட்டர்&oldid=4423736" இலிருந்து மீள்விக்கப்பட்டது