யேர்மனியில் தமிழ் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிப்பதிலும், தமிழ்மொழியைக் கற்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர்களாக யேர்மனியத் தமிழர்கள் விளங்குகிறார்கள்.

வரலாறு[தொகு]

தமிழர்கள் அதிகமாகப் புலம்பெயரத் தொடங்கிய 1980 காலப் பகுதியிலேயே தமிழ் ஆர்வலர்களால் இதையொட்டிய செயற்பாடுகள் முன்னெடுக்கப் பெற்றன. ஆனாலும் அவர்களின் செயற்பாடுகள் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனக்கட்டுப்பாட்டின் கீழ் இயங்காத காரணத்தால், குறித்த இலக்கை அடைய முடியாமலே இருந்தன. காலப்போக்கில் யேர்மன் வாழ் தமிழ்க்குழந்தைகளுக்கான தமிழ்மொழியின் அவசியம் பற்றிய சிந்தனை பல தமிழ் ஆர்வலர்களிடையே அலசப்பெற்றும், ஆராயப்பெற்றும் ஓர் ஆக்கபூர்வமான தீர்மானம் எடுக்கப்பெற்றது. இதன் பலனாக அனைத்துலக, யேர்மனியப் பொறுப்பாளர்களின் ஆலோசனைகளுடன் 1990இல் உலகத் தமிழர் இயக்கம் போன் நகரில் தொடங்கப் பெற்றது. உலகத் தமிழர் இயக்கத்தின் முக்கிய அங்கமாக தமிழ்க்கல்விப் பணி தொடங்கியது.

அன்றைய காலப்பகுதியில் அமைப்பின் யேர்மனியப் பொறுப்பாளராகத் திகழ்ந்த மாவீரர் மேஜர் சுரேந்திரகுமார் அவர்களின் ஆலோசனைப்படி யேர்மனி, யூச்சன் நகரில் முதன்முதலில் தமிழ்ப்பாடசாலை, தமிழாலயம் என்ற பெயரில் தொடங்கப் பெற்றது. யூச்சன் நகரில் தமிழாலயம் ஆரம்பிக்கப் பெற்றதைத் தொடர்ந்து யேர்மனியின் பல நகரங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு பல தமிழ்ப்பாடசாலைகள், தமிழாலயம் என்ற பெயரில் உருவாகின. 10 ஆண்டுகளில் யேர்மனியில் 103 தமிழாலயங்கள் உருவெடுத்திருந்தன.

கட்டமைப்பு[தொகு]

15 வருடங்களில் 130 தமிழாலயங்கள் 6000 மாணவர்களுடன் வளர்ந்து நின்றது. ஒவ்வொரு தமிழாலயமும் நிர்வாகி, உதவி நிர்வாகி, பெற்றோர் பிரதிநிதி (சார்பாளர்) என்ற கட்டமைப்புடன், ஓர் ஒழுங்குமுறையுடனேயே நடாத்தப்பெறுகிறது. தமிழாலயத்தில் முதலாம் வகுப்பிலிருந்து 11ம் வகுப்பு வரையான பிரிவுகளில் அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப தமிழ்மொழியும், சமூக/சுற்றாடற் கல்வியும், தமிழர்களின் கலை, பண்பாடுகளும் கற்பிக்கப் பெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் பரீட்சைகளும் நடாத்தப்பெற்று சான்றிதழ்களும் வளங்கப்படுகின்றன. இதனோடு தமிழ்த்திறன் போட்டியும் ஆண்டுதோறும் நடாத்தப்பெற்று சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பெறுகின்றன. தமிழ்த்திறன் போட்டியில் கட்டுரை எழுதுதல், மேடைப்பேச்சு என்பன நடைபெறுகின்றன.

தமிழாலயங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எந்தவித ஊதியத்தையும் எதிர்பார்க்காமலேயே இந்தப் பணியைச் செய்கிறார்கள். அவர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளும் உலகத் தமிழர் இயக்கக் கல்விப்பணியகத்தினால் ஒழுங்கு செய்யப்பெற்று முறைக்கு முறை பயிற்சிகள் கொடுக்கப்பெறுகின்றன.

தமிழ்ப் பள்ளிகள்[தொகு]

யேர்மனியில் முதன்முதலாக 1990 இல் தமிழ்க்கோயில் தொடங்கப் பெற்றது. தற்சமயம் யேர்மனியில் 133 தமிழ்க்கோயில்கள் இயங்குகின்றன.

  • தமிழாலயம் ஆஃகன் (Aachen) (நவம்பர் 14, 2003 தொடங்கப் பெற்றது)
  • தமிழாலயம் ஆலன் (Aalen) (மே 6, 2001 இல் தொடங்கப் பெற்றது)
  • தமிழாலயம் ஆர்ன்சுபெர்கு (Arnsberg) (ஜனவரி 1, 1994 இல் தொடங்கப் பெற்றது)
  • தமிழாலயம் ஔகிசுபெர்கு (Augsberg) (நவம்பர் 29, 1993 இல் தொடங்கப் பெற்றது)
  • தமிழாலயம் பாக்னாங்கு (Backnang) (செப்டெம்பர் 21, 2002 இல் தொடங்கப் பெற்றது)
  • தமிழாலயம் பெர்லின் (Berlin) (ஏப்ரல் 14, 1993 தொடங்கப் பெற்றது)
  • தமிழாலயம் பிரேமன் (Bremen) (நவம்பர் 30, 1991 இல் தொடங்கப் பெற்றது)
  • தமிழாலயம மன்ஃகைம் (Mannheim) (ஜனவரி 1, 1997 தொடங்கப் பெற்றது)
  • தமிழாலயம் இசுட்டுட்கர்ட் (Stuttgart) (ஜனவரி 20, 1992 இல் தொடங்கப் பெற்றது)


தமிழாலயக் கலைநிகழ்வுகள்[தொகு]

1990ம் ஆண்டுக் காலப்பகுதியில் ஸ்ருட்கார்ட் தமிழாலயத்தினால் நடாத்தப்பெற்ற கலைநிகழ்வுகளில் சில

பல்கலைக்கழகத்தில் தமிழ்[தொகு]

  • தமிழியல் மற்றும் இந்தியவியல் துறை - University of Cologne, Germany

பேராசிரியர்கள்/ஆய்வாளர்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யேர்மனியில்_தமிழ்_கல்வி&oldid=3371775" இலிருந்து மீள்விக்கப்பட்டது