யேம்சு மோரிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யேம்சு மோரிசன்
James Morrison
பிறப்பு(1924-11-09)9 நவம்பர் 1924 [1]
இறப்பு2013
துறைபகுப்பாய்வு வேதியியல், பொருண்மை நிறமாலையியல்
பணியிடங்கள்லா ட்ரோப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கிளாசுகோவ் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்யே.எம். இராபர்ட்சன்
அறியப்படுவதுபொருண்மை நிறமாலையியல்

யேம்சு டக்ளசு மோரிசன் (James Douglas Morrison) இசுக்காட்லாந்து நாட்டில் பிறந்த ஆத்திரேலிய இயற்பியல் வேதியியலாளர் ஆவார். ஆத்திரேலிய அரசாங்க கௌரவ விருது, ஆத்திரேலிய அறிவியல் கல்விக் கழக உறுப்பினர், எடின்பரோ இராயல் கழக உறுப்பினர், இராயல் ஆத்திரேலிய வேதியியல் நிறுவன உறுப்பினர் என்ற பல சிறப்புகள் மோரிசனுக்கு உண்டு. கிளாசுகோவில் பிறந்து அங்கேயே மோரிசன் கல்வி கற்றார். 1945 ஆம் ஆண்டில் இளம் அறிவியல் பட்டமும் 1948 ஆம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார். பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்காக 1949 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவிற்குச் சென்றார். அங்கு இவர் எக்சுகதிர் படிகவியல் ஆய்விலிருந்து பொருண்மை நிறமாலையியல் ஆராய்ச்சி தலைப்புக்கு மாறினார். 1967 ஆம் ஆண்டு மெல்போர்னிலுள்ள லா டிரோப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் வேதியியலின் அடித்தளத் தலைவராக நியமிக்கப்பட்டார். [1] அங்கு இவர் 1989 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை வேதியியல் பேராசிரியராக பணியில் இருந்தார். [2][3][4][5]

பொருண்மை நிறமாலையியல் ஆய்வுகளுக்காக மோரிசன் நன்கு அறியப்பட்டார். முச்சேர்க்கை நான்மடங்கு பொருண்மை நிறமாலைமானியின் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Professor Jim Morrison, Physical chemist". Interviews with Australian scientists. Australian Academy of Science.
  2. Morrison, James Douglas (1924 - 2013), Encyclopaedia of Australian Science
  3. Morrison, James Douglas, AO, FAA, FRSE, FRACI (1924-2013), trove.nla.gov.au
  4. "Centenary Medal". It's an Honour. 1 January 2001. Archived from the original on 27 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 மே 2020. For service to Australian society and science in mass spectrometry {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Officer of the Order of Australia". It's an Honour. 11 June 1990. AO QB 1990. For service to science, particularly in the field of physical chem., and to education
  6. "Tandem quadrupole mass spectrometer for selected ion fragmentation studies and low energy collision induced dissociator". Google Patents. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யேம்சு_மோரிசன்&oldid=3575804" இலிருந்து மீள்விக்கப்பட்டது