யேசண்-எல்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யேசண்-எல்டி (JSON-LD, or JavaScript Object Notation for Linked Data) என்பது யேசண் ஐப் பயன்படுத்தி இணைப்புத் தரவுகளைக் குறியேற்றுவதற்கான ஒரு வழிமுறை ஆகும். இது ஒரு உலகளாவிய வலைச் சேர்த்தியத்தின் ஒரு பரிந்துரை ஆகும்.[1] கட்டமைப்புள்ள தரவுகளை குறியேற்ற யேசண்-எல்டி ஐ கூகிளும் பரிந்துரை செய்கிறது.[2]

பின்புலம்[தொகு]

யேசண் நிரலாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தரவுக் கட்டமைப்பு, குறியேற்ற, பரிமாற்ற முறை ஆகும். இணைப்புத் தரவுகளை இலகுவாக நிரல் மொழிகளில் கையழவும், ஏற்கனவே யேசண் ஆக உள்ள தரவுகள இணைப்புத் தரவாக விபரிக்கவும் உதவும் வண்ணம் யேசண்-எல்டி உருவாக்கப்பட்டது.

வடிவமைப்பு[தொகு]

யேசண்-எல்டி கட்டம் (context) என்ற கருத்துருவை அடிப்படையாகக் கொண்டது. கட்டத்தைப் பயன்படுத்தி ஒரு யேசண் ஆவணத்தில் உள்ள பண்புகளை (properties) ஆர்.டி.எப் அல்லது இணைப்புத் தரவு மெய்ப்பொருளியத்தோடு இணைக்க முடியும். கட்டம் (context) யேசண் ஆவணத்துக்கு ஒரு schema வை வழங்குகிறது.

எடுத்துக்காட்டு[தொகு]

{
 "@context": {
  "name": "http://xmlns.com/foaf/0.1/name",
  "homepage": {
   "@id": "http://xmlns.com/foaf/0.1/workplaceHomepage",
   "@type": "@id"
  },
  "Person": "http://xmlns.com/foaf/0.1/Person"
 },
 "@id": "http://me.example.com",
 "@type": "Person",
 "name": "John Smith",
 "homepage": "http://www.example.com/"
}

மேலே உள்ல எடுத்துக்காட்டு Friend of a friend - FOAF மெய்ப்பொருளியத்தைப் பயன்படுத்தி ஒரு நபரை விபரிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "A JSON-based Serialization for Linked Data". w3.org. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 2. "Introduction to Structured Data". பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யேசண்-எல்டி&oldid=2208268" இலிருந்து மீள்விக்கப்பட்டது