யெஹுலிங் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யெஹுலிங் போர்
மங்கோலிய-சின் போர் பகுதி
நாள் ஆகத்து – அக்டோபர் 1211
இடம் வங்சுவான் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி, ஜங்ஜியாகோ, ஹீபே மாகாணம், சீனா.
தீர்க்கமான மங்கோலிய வெற்றி
பிரிவினர்
மங்கோலியப் பேரரசு சின் வம்சம் (1115-1234)
தளபதிகள், தலைவர்கள்
செங்கிஸ் கான்
முகலி
செபே
ஒகோடி
யெலு டுஹுவா
வன்யன் யோங்ஜி
வன்யன் செங்யு
ஜுஹு கவோசி
ஹெஷிலியே ஜிஜோங் (ஹுஷாஹு)
வன்யன் ஜியுஜின் 
டுஷன் யி
ஷிமோ மிங்கன் கைதி
பலம்
90,000–110,000 குதிரைப்படை[1] 30,000–50,000[2]

ஏகாதிபத்திய இராணுவம் முழுவதும் 800,000 காலாட்படை மற்றும் நன்றாகப் பயிற்சி பெற்ற 150,000 குதிரைப்படையை சீனப் பெருஞ்சுவர் முழுவது‌ம் பரவலாகப் பெற்றிருந்தது.

இழப்புகள்
அதிகம் அதிகம்
யெஹுலிங் போர்
சீன எழுத்துமுறை 野狐嶺戰役
எளிய சீனம் 野狐岭战役

யெஹுலிங் போர் என்பது மங்கோலியப் பேரரசுக்கும் சுரசன்கள் தலைமையிலான சின் அரசமரபிற்கும் நடைபெற்ற முக்கியமான போர் ஆகும். இலக்கிய ரீதியாக இதன் பொருள் காட்டு நரி மலைத்தொடர் போர் என்பதாகும். மங்கோலியர்கள் சின் அரசமரபை வென்றதன் முதல் கட்டமாக இந்த போர் நடைபெற்றது. இது ஆகத்து மற்றும் அக்டோபர் 1211 இடையில் யெஹுலிங் (野狐嶺; பொருள். "காட்டு நரி மலைத்தொடர்") என்கிற இடத்தில் நடைபெ‌ற்றது. இது தற்போது வங்சுவான் மாவட்டத்தின் வடமேற்கில் ஜங்ஜியாகோ, ஹீபே மாகாணத்தில் உள்ளது. இப்போரில் மங்கோலியப் பேரரசு தீர்க்கமான வெற்றியைப் பெற்றது. போருக்குப் பிறகு சின் பேரரசர் வன்யன் யோங்ஜி தன் தளபதிகளில் ஒருவராலேயே கொல்லப்பட்டார். இப்போரின் விளைவாக சின் பேரரசு பலவீனமடைந்து சீக்கிரமே அழிந்து போனது.

உசாத்துணை[தொகு]

  1. Mongol Warrior 1200–1350 Publisher: Osprey Publishing
  2. Sverdrup, Carl (2010). "Numbers in Mongol Warfare". Journal of Medieval Military History (Boydell Press) 8: 109–17 [p. 116]. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84383-596-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யெஹுலிங்_போர்&oldid=2588425" இருந்து மீள்விக்கப்பட்டது