யெரெவான் விலங்குக் காட்சிச்சாலை

ஆள்கூறுகள்: 40°11′45.47″N 44°33′1.85″E / 40.1959639°N 44.5505139°E / 40.1959639; 44.5505139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யெரெவான் விலங்குக் காட்சிச்சாலை
ஆர்மீனியம்: Երևանի կենդաբանական այգի
(Yerevani kendabanakan aygi)
Yerevan Zoo
திறக்கப்பட்ட தேதி1941 [1]
இடம்யெரெவான், ஆர்மீனியா
பரப்பளவு35 எக்டேர்கள் (86 ஏக்கர்கள்)
அமைவு40°11′45.47″N 44°33′1.85″E / 40.1959639°N 44.5505139°E / 40.1959639; 44.5505139
விலங்குகளின் எண்ணிக்கை2749[2]
உயிரினங்களின் எண்ணிக்கை204[2]
இணையத்தளம்www.yerevanzoo.am

யெரெவான் விலங்குக் காட்சிச்சாலை(Yerevan Zoo), ஆர்மீனியாவில் உள்ள யெரெவானில் உள்ளது. 35-எக்டேர் (86-ஏக்கர்) பரப்பளவைக் கொண்டுள்ள இந்த விலங்குக் காட்சிச்சாலை 1941ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]

விலங்குகள்[தொகு]

இங்கு 204 இனங்களைச் சேர்ந்த 2749 விலங்குகள் உள்ளன. இவற்றில் ஆர்மீனியாவின் பாரம்பரிய விலங்குகளான கருஞ்சிவப்புக் கரடி, ஆடுகள், வைப்பர், மஃப்லான், கருங்கழு ஆகியவையும் அடக்கம். இங்கு உலகின் மற்ற நிலப்பரப்புகளில் வாழும் விலங்குகளான சிங்கம், புலி, கழுதைப்புலி, ஆசிய யானை ஆகியவையும் உள்ளன.[2][3]

பாதுகாப்பு[தொகு]

ஆர்மீனியாவில் பலதரப்பட்ட உயிரினங்கள் வசிக்கின்றன. காட்டுவிலங்குகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாக்கும்பொருட்டு ஓர் அமைப்பு நிறுவப்பட்டது. இது கோஸ்ரோவ் உயிரிக் காப்பகத்தை ஒட்டிய, 839 எக்டேர்கள் (2,070 ஏக்கர்கள்) பரப்பளவை உடைய நிலப்பரப்பை கையகப்படுத்தியுள்ளது. அந்த அமைப்புடன் யெரெவான் காட்டுவிலங்குக் காட்சிச்சாலையின் நிர்வாகத்தினர் இணைந்து பணியாற்றி, காட்டுவிலங்குகளின் மறுவாழ்வுக்கும், அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை பாதுகாத்தும் உதவுகின்றனர்.

கல்வி[தொகு]

வாயில்
இங்குள்ள யானையின் பத்தாவது பிறந்தநாள்

இந்த விலங்குக் காட்சிச்சாலையின் நிர்வாகம், யெரெவான் நகராட்சி, காட்டுவிலங்குகளை பாதுகாக்கும் அமைப்பு, ஆம்ஸ்டர்டாமில் உள்ள விலங்குக் காட்சிச்சாலை ஆகியவற்றுடன் ஆலோசித்து, 2012ஆம் ஆண்டில் ஒரு பள்ளியைத் திறந்தது. இந்தப் பள்ளியில் ஆர்மீனியாவின் உயிரிப் பல்வகைமையை பற்றிய பாடங்கள் எடுக்கப்படுகின்றன. காட்டு உயிர்களைத் பாதுகாக்க வேண்டிய அவசியம் மாணவர்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.[4] சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளிக் குழந்தைகள் அழைத்து வரப்படுகின்றனர்.

சீரமைப்பு[தொகு]

இது 2011ஆம் ஆண்டில் காட்டுவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளையின் கைக்கு மாறியது. மற்ற விலங்குக் காட்சிச்சாலைகளுடன் இணைந்து செயலாற்றி, இந்த விலங்குக் காட்சிச்சாலை மேம்படுத்தப்பட்டது.[5] இதன் நிலப்பரப்பை அதிகப்படுத்தும் திட்டமும் உள்ளது.[6][7]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.yerevanzoo.am/index.php?id=134&L=0 Yerevan Zoo Official Website. "History" subsection.
  2. 2.0 2.1 2.2 "Our Animals". yerevanzoo.am. Yerevan Zoo. 30 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Erevan Zoo (Yerevan) in Armenia". elephant.se. Elephant Encyclopedia. 4 செப்டம்பர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Zoo School". yerevanzoo.am. Yerevan Zoo. 30 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. "New Beginnings". yerevanzoo.am. Yerevan Zoo. 30 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Will Yerevan Zoo be Transformed?". mediamax.am. MediaMax. 19 மார்ச் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Ruben Khachatrian appointed new director of Yerevan zoo". arka.am. ARKA News Agency. 31 மே 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 June 2011 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]