யெரெவான் அரசு மொழியியல் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யெரெவான் அரசு மொழியியல் பல்கலைக்கழகம்
Yerevan State Linguistic University
Երևանի պետական լեզվաբանական համալսարան
பல்கலைக்கழகத்தின் சின்னம்

நிறுவல்:1935
வகை:பொது
பீடங்கள்:389 [1]
மாணவர்கள்:3,954[2]
இளநிலை மாணவர்:3,728
முதுநிலை மாணவர்:226
அமைவிடம்:ஆர்மீனியா யெரெவான், ஆர்மீனியா
(40°11′14.77″N 44°30′38.62″E / 40.1874361°N 44.5107278°E / 40.1874361; 44.5107278)
இணையத்தளம்:www.brusov.am/en

யெரெவான் அரசு மொழியியல் பல்கலைக்கழகம் ஆர்மீனியாவின் யெரெவான் நகரில் அமைந்துள்ளது. இங்கு ரஷ்ய மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, கிரீக் மொழி, ஸ்பானிய மொழி ஆகியவற்றிற்கான சிறப்பு பயிற்சி அளிக்கிறார்கள். இவற்றுடன் பிற மாந்தவியல் படிப்புகளுக்கும் கல்வி கற்பிக்கின்றனர்.

துறைகள்[தொகு]

 • வெளி நாட்டு மொழிக்கான துறை
  • மொழியியல்
  • வெளிநாட்டு மொழிகள்
 • மொழியியல், பண்பாட்டுத் தொடர்புகள் துறை
 • ரஷ்ய மொழி, இலக்கியம் மற்றும் வெளிநாட்டு மொழித் துறை

முதுநிலை படிப்புகள்[தொகு]

 • வெளி நாட்டு மொழியைக் கற்பிக்கும் முறை
 • ஜெமானிய மொழிகள் (ஆங்கிலம், ஜெர்மன்)
 • ரோமானிய மொழிகள் (பிரெஞ்சு)
 • சுலாவோனிய மொழிகள
 • வேற்று நாட்டு இலக்கியம்
 • ரஷ்ய இலக்கியம்
 • மொழியியல்
 • ஒப்பீட்டு மொழியியல்
 • ஆர்மீனிய மொழி
 • மெய்யியல்
 • ஆங்கிலத்தில் செய்முறைத் திறன்
 • பிரெஞ்சு மொழியில் செய்முறைத் திறன்
 • ஜெர்மன் மொழியில் செய்முறைத் திறன்
 • கணினித் திறன்

உலகளாவிய தொடர்புகள்[தொகு]

இந்த பல்கலைக்கழகம் கீழ்க்காணும் அமைப்புகளில் உறுப்பினராகி உள்ளது.

 • மொழிக் கொள்கைப் பிரிவு
 • நவீன மொழிகளுக்கான ஐரோப்பிய நடுவம்
 • உலகப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
 • பிரெஞ்சு மொழிப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
 • கருங்கடல் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
 • ஐரோப்பிய மொழி மன்றம்
 • ரஷ்ய மொழி மற்றும் இலக்கியத்திற்கான ஆசிரியர்களின் கூட்டமைப்பு

இந்த பல்கலைக்கழகம் கீழ்க்காணும் நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

 • உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் பரிமாற்றங்களுக்கான வாரியம், ஆர்மீனியா
 • யூரேசிய பங்குதாரர் அறக்கட்டளை
 • கொரிய அறக்கட்டளை

இது கீழ்க்காணும் பல்கலைக்கழ

நூலகம்[தொகு]

நூலகத்தில் 400,000 நூல்கள் உள்ளன. அரசியல், கல்வி தொடர்பான நூல்களும், ஆர்மீனிய மொழி, ரஷ்ய மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய மொழி, பாரசீகம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட கதைப் புத்தகங்களும் உள்ளன. இந்த நூலகத்தைத் தவிர, துறைகளுக்கென தனி நூலகங்கள் உள்ளன.

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "YSLU: About the university". Yerevan State Linguistic University. பார்த்த நாள் 2011-08-21.
 2. "YSLU: Statistics 2008". Yerevan State Linguistic University. பார்த்த நாள் 2011-08-21.

ஆள்கூறுகள்: 40°11′14.77″N 44°30′38.62″E / 40.1874361°N 44.5107278°E / 40.1874361; 44.5107278