யெசெ சனாகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யெசெ சனாகன்
Jesse Shanahan
கல்விவர்ஜீனியா பல்கலைக்கழகம், வெசுலியன் பல்கலைக்கழகம்
அமைப்பு(கள்)அமெரிக்க வானியல் கழகம்
அறியப்படுவதுஊனமுற்றநிலைச் செயல்முனைவு, எகிலர்சு-தானிலோசு நோய்த்தொகை

யெசெ சனாகன் (Jesse Shanahan) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் ஊனமுற்றோருக்கான செயல்முனைவாளரும் ஆவார். இவர் அமெரிக்க வானியல் கழகத்தின் அணுகுதிறம், ஊனமுற்றநிலைப் பணிக்குழுவினை உருவாக்கிய இணைநிறுவனர் ஆவார்.[1]

கல்வியும் ஆராய்ச்சியும்[தொகு]

இவர் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் தன் இளவல் பட்டப்படிப்பின்போது அரபு மொழியியலும் மெய்யியலும் படித்துள்ளார்.[2] இவர் தன் இளவல் படிப்பின் இறுதியில் வானியற்பியலுக்கு மாறி அதில் முதுவர் பட்டம் பெற முடிவெடுத்துள்ளார். இவர் வெசுலியன் பல்கலைக்கழகத்தில் தன் கல்வியை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்துள்ளார். பிறகு தான் நோய்வாய்பட்டதாலும் தொடர்ந்து சந்தித்த வன்கொடுமையாலும் படிப்பை இடைவிட நேர்ந்துள்ளது.[2][3][4] என்றாலும் இவர் சாந்தீகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் புரூக் சிம்மசுடன் இணைந்தும்ழோனிவர்சு நிறுவன இலிண்ட்oட்டுடன் இணைந்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார்.[5] இவருடைய முதன்மையான ஆராய்ச்சி செயல்முனைவான பால்வெளியாக்கக் கருவிலும் அது உருவாக்கும் ஓம்பல் பால்வெளிகளிலும் குறிப்பாக அவற்றின் கதிர்நிரல் பதிவுகளில் கவனம் குவிக்கிறது.[6] இவர் பூசூ ஆல்லன் ஆமில்டன் நிறுவனத்தில் தரவு அறிவியலாளராகப் பணிபுரிவதோடு அங்கே அறவில்லையும் செயற்கை அறிதிறனையும் மாந்தப்பண்பு வெறெடுக்கும் பயன்பாடுகளில் புலமை பெற்றுவருகிறார்.[7]

ஊனமுற்றநிலை[தொகு]

வலியை உருவாக்கி இயங்குதிறனைக் குறைக்கும் மரபியல் இணப்பிழைய நோயான எகிலர்சு- தானிலோசு நோய்த்தொகையால் இவர் பீடிக்கப்பட்டார்[2]

ஊனமுற்ற அறிவியலாளருக்கான தங்கள் வாய்மொழி வரலாற்றுத் திட்டத்தின்கீழ் இவரை அறிவியல் வரலாற்று நிறுவனம் நேர்காணல் பேட்டி எடுத்துள்ளது.[8]

எழுத்துப்பணி[தொகு]

சனாகன் போர்பேசு இதழில் மொழியியல், வானியற்பியல் பற்றி போர்பேசு இதழிலும்,[6][8] தன் சொந்த ஊடகப் பக்கத்திலும் தொடர்ந்து பதிவு செய்கிறார்.[9]> இவரது சமூக ஊடகப் பதிவுகள் சிலவேளைகலில் ஊனமுற்றநிலை, திறன் மேம்பாடு பற்றிய கட்டுரைகளில் உள்ளடக்கமாகின்றன.[10][11] இவர் ஊனமுற்றாநிலையும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் புலங்களும் எனும் பெயரில் ஒரு வலைப்பதிவையும் உருவாக்கி அதில் அறிவியலில் ஊனமுற்றநிலை சார்ந்த பட்டறிவுகளைப் பகிர்கிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Meet the Creator of #DisabledandSTEM". 500 Women Scientists (in அமெரிக்க ஆங்கிலம்). May 7, 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
  2. 2.0 2.1 2.2 Alaina G. Levine (May 2018). "Profiles in Versatility". APS News. ISSN 1058-8132.
  3. Pain, Elisabeth (2016). "How to (seriously) read a scientific paper". Science. doi:10.1126/science.caredit.a1600047. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. 
  4. Institute, Science History (2018-09-19). "When we interviewed @Enceladosaurus for our Scientists with Disabilities #OralHistory project, she described some of the microaggressions she encountered while working on her PhD. #MarginSci #DisabledandSTEMpic.twitter.com/9WBPFvEQCw". @SciHistoryOrg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
  5. "Jesse Shanahan". Jesse Shanahan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
  6. 6.0 6.1 "Jesse Shanahan". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
  7. "Jesse Shanahan". LinkedIn.{{cite web}}: CS1 maint: url-status (link)
  8. 8.0 8.1 Torres, Roberto (2018-09-06). "This project is tracking the oral history of STEM researchers with disabilities". Technical.ly Philly (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.{{cite web}}: CS1 maint: url-status (link)
  9. "Jesse Shanahan". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
  10. Romano, Andrea (2015-11-11). "Target's on the Naughty List this year for insensitive 'OCD' Christmas sweater". Mashable (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
  11. Barasch, Alex (2018-03-14). "Stephen Hawking's Disability Activism Was As Invaluable As his Science". Slate Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யெசெ_சனாகன்&oldid=3387421" இலிருந்து மீள்விக்கப்பட்டது