யூலி சௌத்ரி
யூலி சௌத்ரி | |
---|---|
![]() | |
பிறப்பு | ஊர்மிளா யூலி சௌத்ரி 4 அக்டோபர் 1923 [1] ஷாஜகான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 20 செப்டம்பர் 1995 சண்டிகர், இந்தியா | (அகவை 71)
தேசியம் | ![]() |
ஊர்மிளா யூலி சௌத்ரி (Urmila Eulie Chowdhury, 4 அக்டோபர் 1923-20 செப்டம்பர் 1995) 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை பணியாற்றிய ஒரு இந்தியக் கட்டடக் கலைஞர் ஆவார். பொதுக் கட்டிடக்கலை, நிலப்பரப்பு கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு துறைகளில் பணியாற்றினார். மேலும் ஒரு ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். இந்தியாவில் பணிபுரிந்த ஒரு முன்னோடி பெண் கட்டிடக் கலைஞராக இருந்த இவர், ஆசியாவின் முதல் பெண் கட்டிடக் கலைஞராக இருந்ததாகவும் சில ஆதாரங்கள் கூறுகின்றன.[2][3] தனது கல்விக்குப் பிறகு சண்டிகர் நகரத்தின் திட்டமிடல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் லெ கொபூசியேவுடன் இணைந்து பணியாற்றினார்.[4]
இளமை வாழ்க்கை
[தொகு]ஊர்மிளா சௌத்ரி 1923 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் பிறந்தார். பின்னர்,யப்பானின் ஜப்பானின் கோபேயில் கேம்பிரிட்ஜ் பள்ளி சான்றிதழைப் பெற்றார். சிட்னி பல்கலைக்கழகத்திலும், சிட்னியின் யூலியன் ஆஷ்போர்ன் கலைப்பள்ளியிலும் கட்டடக்கலையைப் பயின்றார். மேலும் நியூ செர்சியின் எங்கிள்வூட்டில் சுட்டாங்கல் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.[5] இவரது தந்தை ஒரு இராஜதந்திரி, எனவே ஊர்மிளாவும் உலகம் முழுவதும் பயணம் செய்து வளர்ந்தார். பஞ்சாப் அரசாங்கத்தில் ஆலோசனைக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றிய யுகல் கிசோர் சௌத்ரி என்பவரை மணந்தார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]
ஊர்மிளா தனது தொழில் வாழ்க்கையில் ஆசியாவில் பணிபுரிந்த பெண் கட்டடக் கலைஞர்களின் ஒரு சிறிய குழுவில் ஒருவர். ஆசியாவின் முதல் பெண் கட்டடக் கலைஞர் என்று சில ஆதாரங்கள் இவரைப் பாராட்டினாலும், ஐடா-குரூஸ், டெல் ரொசாரியோ போன்ற மற்றவர்கள் இந்த சமயத்தில் பணிபுரிந்தனர். மேலும், பெரின் ஜம்செட்ஜி மிஸ்திரி மற்றும் டோரா காட் போன்ற பெண்கள் இவருக்கு ஒரு தசாப்தம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு முன்பே இப்பணியில் இருந்தனர்.[3]
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, 1951 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பிய ஊர்மிளா, சண்டிகரின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்காக லெ கொபூசியே தலைமையிலான குழுவில் உறுப்பினரானார். லெ கொபூசியே, பியர் ஜெனெரெட் மற்றும் இந்திய கட்டடக் கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையேயான தொடர்பு இவர்தான்.[6] இவரது பணிகளில் மனையியல் அறிவியல் கல்லூரி, மகளிர் பல்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அமைச்சர்களின் பல குடியிருப்பு வளாகங்கள் ஆகியன அடங்கும். 1971 முதல் 1976 வரை சண்டிகர் நகர திட்டமிடலின் இரண்டாவது கட்டத்தின் தலைமைக் கட்டடக் கலைஞராக இருந்தார்.[7]


பிற்கால வாழ்க்கை
[தொகு]1981 ஆம் ஆண்டில் பொது சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சண்டிகரில் தனியாக பணியாற்றினார்.[3] லெ கொபூசியேவின் திரீ ஹியூமன் எஸ்டாபிளிஷ்மென்ட்ஸ் என்ற புத்தகம்பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது உட்பட பல வெளியீடுகளில் இவர் ஈடுபட்டிருந்தார். இது பஞ்சாப் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடாக மாறியது.[8][9] முற்போக்கான கட்டிடக்கலை, கட்டிடக்கலை வடிவமைப்பு மற்றும் காசபெல்லா உள்ளிட்ட பத்திரிகைகளுக்கும் இவர் கட்டுரைகளை எழுதினார்.[3]
இறப்பு
[தொகு]ஊர்மிளா யூலி சௌத்ரி செப்டம்பர் 20,1995 அன்று இந்தியாவின் சண்டிகரில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Women Scientists in India
- ↑ International Archive of Women in Architecture Newsletter. International Archive of Women in Architecture, Virginia Polytechnic Institute and State University. 1989.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Urmila Eulie Chowdhury 1923–1995" (in Spanish). Un Día / Una Arquitecta. 8 June 2015. Retrieved 15 October 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 4.0 4.1 "House that was Eulie's home". Roopinder Singh journalist, author & photographer. 1 September 2009. Retrieved 15 October 2015.
- ↑ "The Tribune, Chandigarh, India – Opinions". www.tribuneindia.com. Retrieved 15 October 2015.
- ↑ Gandhi, Deepika (20 September 2019). "Eulie Chowdhury's architecture reflected her multicultural outlook | Chandigarh News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 18 March 2022.
- ↑ "Chowdhury, Eulie (1923–)." Dictionary of Women Worldwide: 25,000 Women Through the Ages, edited by Anne Commire and Deborah Klezmer, vol. 1, Yorkin Publications, 2007, pp. 381-382.
- ↑ Saran 2013, ப. 64.
- ↑ Corbusier & Cohen 2007, ப. 332.
நூல்பட்டியல்
[தொகு]- Corbusier, Le; Cohen, Jean-Louis (2007). Toward an Architecture. Los Angeles, California: Getty Publications. ISBN 978-0-89236-822-8.
- Saran, Gursaran Singh (2013). The Wheel Eternal. Pittsburgh, Pennsylvania: Dorrance Publishing. ISBN 978-1-4349-6900-2.