உள்ளடக்கத்துக்குச் செல்

யூலிமார் ரோஜாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூலிமார் ரோஜஸ்
2019 ஆம் ஆண்டில் ரோஜாஸட
தனிநபர் தகவல்
தேசியம்வெனிசுலாக்காரர்
பிறப்பு21 அக்டோபர் 1995 (1995-10-21) (அகவை 28)
கரகஸ், வெனிசுலா
உயரம்1.92 மீ
எடை72 கிகி
விளையாட்டு
நாடுவெனிசுலா
விளையாட்டுதடகள விளையாட்டு
நிகழ்வு(கள்)மும்முறை தாண்டுதல், நீளம் தாண்டுதல்
அணிஎப் சி பார்சிலோனா தடகள அணி
பயிற்றுவித்ததுஇவான் பெட்ரோசோ
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)மும்முறை தாண்டுதல்: 15.67 மீ உலக சாதனை (தோக்கியோ, 2021)
நீளம் தாண்டுதல்: 6.88 மீ வெனிசுலாவியர்களின் தேசிய சாதனை (லா நூசியா, 2021)

யூலிமர் ரோஜாஸ் ரோட்ரிக்ஸ் (Yulimar Rojas) ( Spanish pronunciation: [ˈuliˈmaɾ xroxah] ; யோலிமர் ரோஜாஸ் என்றும் அழைக்கப்படுகிறார்; பிறப்பு 21 அக்டோபர் 1995) வெனிசுலா தடகள வீராங்கனை ஆவார். இவர் பெண்கள் மும்முறை தாண்டுதல் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார். இவர் 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மும்முறைத் தாண்டுதலில் வெற்றியாளர் ஆவார். முன்னதாக இவர் இரண்டு முறை (20117 இலண்டன் மற்றும் 2019 தோஹா) உலகளாவிய வெற்றியாளர் ஆவார். மேலும், உள்ளரங்க தடகள விளையாட்டுப் போட்டிகளான 2016 போர்ட்லேண்டு மற்றும் 2018 பர்மிங்காம் தடகளப் போட்டிகளின் வெற்றியாளரும் ஆவார். வெனிசுலாவின் பின்தங்கிய பகுதியில் வளர்க்கப்பட்ட இவர், இளம் வயதிலேயே மற்ற விளையாட்டுகளில் வெற்றி பெற்றார், ஆனால் வசதி இல்லாததால் தொடர்ந்து பயிற்சி செய்ய முடியவில்லை. இவர் தனது தடகளப் பயிற்சியைத் தொடர 2015 ஆம் ஆண்டில் இசுபெயினின் லஜாரா சென்றார்.

சர்வதேச போட்டிகள்

[தொகு]
ஆண்டு போட்டி இடம் நிலை நிகழ்வு குறிப்புகள்
2011 2011 தெற்கு அமெரிக்க இளையோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் மெதெயின், கொலம்பியா முதலிடம் உயரம் தாண்டுதல் 1.78 மீ
2012 2012 இபெரோ-அமெரிக்க தடகள விளையாட்டுப் போட்டிகள் பா்குயிசிமீடோ, வெனிசுவேலா 6வது இடம் உயரம் தாண்டுதல் 1.75 மீ
2012 தென் அமெரிக்க 23-வயதுக்குட்பட்டோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் சாவோ பாவுலோ, பிரேசில் 3 ஆம் இடம் உயரம் தாண்டுதல் 1.73 மீ
2012 தென் அமெரிக்க இளையோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் மென்டோசா, அர்ஜென்டினா 4ஆம் இடம் உயரம் தாண்டுதல் 1.68 மீ
2013 2013 பான் அமெரிக்க இளையோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் லிமா, பெரு 2ஆம் இடம் உயரம் தாண்டுதல் 1.76 மீ
2013 பொலிவேரியன் தடகள விளையாட்டுப் போட்டிகள் துருகியோ, பெரு 2 ஆம் இடம் உயரம் தாண்டுதல் 1.76 மீ
6ஆம் இடம் நீளம் தாண்டுதல் 5.87 மீ
2014 2014 தென் அமெரிக்கத் தடகள விளையாட்டுப் போட்டிகள் சான் டியேகோ (சிலி) முதலிடம் உயரம் தாண்டுதல் 1.79 மீ
2014 உலக இளையோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் யூகீன், ஐக்கிய அமெரிக்கா 11ஆம் இடம் நீளம் தாண்டுதலி 5.81 மீ
17ஆம் இடம் மும்முறை தாண்டுதல் 12.99 மீ
2014 பான் அமெரிக்கத் தடகள விளையாட்டுத் திருவிழா மெக்சிக்கோ நகரம், மெக்சிகோ முதல் இடம் நீளம் தாண்டுதல் 6.53 மீ
2014 தென் அமெரிக்கத் தடகள விளையாட்டுப் போட்டிகள் (23 வயதுக்குட்பட்டோர்) மொண்டேவீடியோ, உருகுவே முதலிடம் நீளம் தாண்டுதல் 6.36 மீ
முதலிடம் மும்முறை தாண்டுதல் 13.35 மீ
2014 மத்திய அமெரிக்க மற்றும் கரீபிய விளையாட்டுகளில் தடகளப் போட்டிகள் வேராகுரூசு, மெக்சிகோ 4ஆம் இடம் நீளம் தாண்டுதல் 6.24 மீ
4ஆம் இடம் மும்முறை தாண்டுதல் 13.54 மீ
2015 2015 தென் ஆப்பிரிக்க தடகள விளையாட்டுப் போட்டிகள் லிமா, பெரு 4 ஆம் இடம் நீளம் தாண்டுதல் 6.20 மீ
முதல் இடம் மும்முறை தாண்டுதல் 14.14 மீ
2016 2016 ஐஏஏஎப் உலக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் போர்ட்லன்ட், ஐக்கிய அமெரிக்க நாடுகள் முதல் இடம் மும்முறை தாண்டுதல் 14.41 மீ
2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டுப் போட்டிகள் இரியோ டி செனீரோ 2 ஆம் இடம் மும்முறை தாண்டுதல் 14.98 மீ
2017 2017 தென் அமெரிக்கத் தடகள விளையாட்டுப் போட்டிகள் அசுன்சியோன் 2ஆம் இடம் மும்முறை தாண்டுதல் 14.36 மீ
2017 உலக தடகள விளையாட்டுப் போட்டிகள் இலண்டன் முதல் இடம் மும்முறை தாண்டுதல் 14.91 மீ
2018 2018 ஐஏஏஎப் உலக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்) முதல் இடம் மும்முறை தாண்டுதல் 14.63 மீ
2019 2019 பான் அமெரிக்கத் தடகள விளையாட்டுப் போட்டிகள் லிமா முதல் இடம் மும்முறை தாண்டுதல் 15.11 மீ
2019 உலகத் தடகள விளையாட்டுப் போட்டிகள் தோகா முதல் இடம் மும்முறை தாண்டுதல் 15.37 மீ
2021 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தோக்கியோ முதல் இடம் மும்முறை தாண்டுதல் 15.67 மீ

மேற்கோள்கள்

[தொகு]

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூலிமார்_ரோஜாஸ்&oldid=3212741" இலிருந்து மீள்விக்கப்பட்டது