யூரோப்பியம்(II) தைட்டனேட்டு
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம்(II) தைட்டனேட்டு
| |
வேறு பெயர்கள்
யூரோப்பியம் தைட்டனேட்டு
யூரோப்பியம் தைட்டானியம் ஆக்சைடு | |
இனங்காட்டிகள் | |
12020-61-0 | |
ChemSpider | 64878787 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
EuTiO3 | |
வாய்ப்பாட்டு எடை | 247.829கிராம் |
தோற்றம் | கருப்பு திண்மம் |
தீங்குகள் | |
GHS signal word | எச்சரிக்கை |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | யூரோப்பியம் ஐதரைடு யூரோப்பியம்(II) சல்பேட்டு யூரோப்பியம்(II) சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யூரோப்பியம்(II) தைட்டனேட்டு (Europium(II) titanate) என்பது EuTiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியம் மற்றும் தைட்டானியம் ஆகிய தனிமங்களின் கலப்பு ஆக்சைடான இச்சேர்மம் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. பெரோவ்சிகைட்டு கட்டமைப்பில் யூரோப்பியம்(II) தைட்டனேட்டு படிகமாகிறது.[1]
வரலாறு
[தொகு]EuTiO3 முதன்முதலில் 1966ஆம் ஆண்டு மெக்கியூர், சாஃபர், இயோயெங்கு, ஆல்பெரின் மற்றும் பிக்கார்ட்டு ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டது. காந்த அமைப்பை இவர்கள் ஆய்வு செய்தனர்.[2] இந்த சேர்மம் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (2001 முதல் 2015 வரை) அதிக கவனத்தைப் பெற்றது, ஏனெனில் TN = 5.5 கெல்வின் வெப்பநிலையில் குறைந்த வெப்பநிலை நிலை எதிர்ஃபெரோ காந்த நடத்தைக்கு மாறுகிறது. இது மின்கடத்தா மாறிலியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது.[3][4][5]
தயாரிப்பு
[தொகு]உலர்ந்த Eu2O3 சேர்மத்துடன் Ti2O3 சேர்மத்தை 1:1 என்ற விகிதத்தில் கலந்து 1400 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆர்கான் வாயுச் சூழலில் வினைபுரியச் செய்தால் யூரோப்பியம்(II) தைட்டனேட்டு உருவாகும்:[3]
- Eu2O3 + Ti2O3 -> 2 EuTiO3
இவ்வினையில் யூரோப்பியம் ஒடுக்கப்படுகிறது, தைட்டானியம் ஆக்சிசனேற்றப்படுகிறது.
பண்புகள்
[தொகு]யூரோபியம்(II) தைட்டனேட்டு வெப்பநிலையைப் பொறுத்து இரண்டு வெவ்வேறு படிக வடிவங்களைக் கொண்டுள்ளது. கட்ட மாற்றம் 282 கெல்வின் வெப்பநிலையில் நிகழ்கிறது.[3][6] குறைந்த வெப்பநிலை வடிவம் நாற்கோணப் படிக அமைப்பில் I4/mcm (இடைவெளி குழு எண். 140) என்ற இடக்குழுவில் a = 551.92(2) பைக்கோமீட்டர், c = 781.64(8) பைக்கோமீட்டர் (90 கெல்வின் வெப்பநிலையில் அளவிடப்படுகிறது) என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் படிகமாகிறது. உயர் வெப்பநிலை வடிவம் Pm3m (இடைவெளி குழு எண். 221) என்ற இடக்குழுவுடன் a = 390.82(2) பைக்கோமீட்டர் (300 கெல்வின் வெப்பநிலையில் அளவிடப்படுகிறது) ஒரு கனசதுர வடிவத்தில் படிகமாகிறது.[3][7] குறைந்த வெப்பநிலை வடிவத்திலிருந்து உயர் வெப்பநிலை கட்டத்திற்கு மாறும் படிக அமைப்பின் நிலைமாற்ற வெப்பநிலை அதிகரிக்கும் அழுத்தத்துடன் அதிகரிக்கிறது.[8] யூரோப்பியம்(II) தைட்டனேட்டு 5.5 கெல்வின் வெப்பநிலைக்கு கீழே எதிர்ஃபெரோ காந்தமாக மாறுகிறது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1. Muta, Hiroaki (2005). "Thermoelectric Properties of Lanthanum-Doped Europium Titanate". Materials Transactions 46 (7): 1466–1469. doi:10.2320/matertrans.46.1466.
- ↑ T. R. McGuire, M. W. Shafer, R. J. Joenk, H. A. Halperin, and S. J. Pickart (1966). "Magnetic structure of EuTiO3". Journal of Applied Physics 37 (3): 981. doi:10.1063/1.1708549. Bibcode: 1966JAP....37..981M.
- ↑ 3.0 3.1 3.2 3.3 J. Köhler, R. Dinnebier, A. Bussmann-Holder (2012). "Structural instability of EuTiO3 from X-ray powder diffraction". Phase Transitions 85 (11): 949–955. doi:10.1080/01411594.2012.709634. Bibcode: 2012PhaTr..85..949K.
- ↑ S. Kamba, D. Nuzhnyy, P. Vaněk, M. Savinov, K. Knížek, Z. Shen, E. Šantavá, K. Maca, M. Sadowski, J. Petzelt (2007). "Magnetodielectric effect and optic soft mode behaviour in quantum paraelectric EuTiO3 ceramics". Europhysics Letters 80 (2): 27002. doi:10.1209/0295-5075/80/27002. Bibcode: 2007EL.....8027002K.
- ↑ T. Katsufuji and H. Takagi (2001). "Coupling between magnetism and dielectric properties in quantum paraelectric EuTiO3". Physical Review B 64 (5): 054415-1–054415-4. doi:10.1103/PhysRevB.64.054415. Bibcode: 2001PhRvB..64e4415K.
- ↑ Bussmann-Holder, J. Köhler, R. K. Kremer, J. M. Law (2011). "Relation between structural instabilities in EuTiO3 and SrTiO3". Physical Review B 83 (21): 212102. doi:10.1103/PhysRevB.83.212102. Bibcode: 2011PhRvB..83u2102B.
- ↑ A. Bussmann-Holder, Z. Guguchia, J. Köhler, H. Keller, A. Shengelaya, A. R. Bishop (2012). "Hybrid paramagnon phonon modes at elevated temperatures in EuTiO3". New Journal of Physics 14 (9): 093013. doi:10.1088/1367-2630/14/9/093013. Bibcode: 2012NJPh...14i3013B.
- ↑ P. Parisiades, E. Liarokapis, J. Köhler, A. Bussmann-Holder, M. Mezouar (2015). "Pressure-temperature phase diagram of multiferroic EuTiO3". Physical Review B 92 (6): 064102. doi:10.1103/PhysRevB.92.064102. Bibcode: 2015PhRvB..92f4102P.
- ↑ Z. Guguchia, H. Keller, A. Bussmann-Holder, J. Köhler, R. K. Kremer (2013). "The low temperature magnetic phase diagram of EuxSr1−xTiO3". European Physical Journal B 86 (10): 409–412. doi:10.1140/epjb/e2013-40632-y. Bibcode: 2013EPJB...86..409G.