யூரியோதைப்ளசு நாராயணி
| யூரியோதைப்ளசு நாராயணி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | இக்தியோபிடே |
| பேரினம்: | |
| இனம்: | யூ. நாராயணி |
| இருசொற் பெயரீடு | |
| யூரியோதைப்ளசு நாராயணி சேசாச்சர், 1939 | |
யூரியோதைப்ளசு நாராயணி (Uraeotyphlus narayani), அல்லது நாராயணன் சிச்சிலியன் என்பது இந்தியாவின் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் சிச்சிலியன் அகணிய உயிரி ஆகும்.
விளக்கம்
[தொகு]இந்த சிற்றினம் வெளிறிய, சதை நிற வயிற்றுப் பகுதியுடன் சாம்பல் நிறத்தில் காணப்படும். இதன் தாடைக்கும் வாலுக்கும் இடையே ஒரு நடுத்தரப் பச்சை நிறக் கோடு செல்கிறது. இதன் கண்கள் தெளிவாகவும், கண்களைச் சுற்றி வெள்ளைப் புள்ளியுடனும் இருக்கும். நாசித்துவாரங்கள் மூக்கின் மேல் பகுதியில் அமைந்து. மேலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரியும். உணர்விழைகள் நாசித்துவாரங்களுக்குக் கீழே அமைந்திருப்பதால், மேலிருந்து பார்க்கும்போது தெரியாது. வாலின் நுனி வெண்மையாகவும், மூக்கின் நுனி மற்றும் கீழ் தாடை ஆகியவை வெண்ணெய் நிறத்திலும் இருக்கும். இது முதன்முதலில் கேரளத்தில் உள்ள கோட்டயத்திலிருந்து விவரிக்கப்பட்டது, மேலும் கர்நாடகாவிலிருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bhatta, G. 1998. A field guide to the caecilians of the Western Ghats, India. Journal of Biosciences, Vol. 23(1): 73-85
