யூரிசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யூரிசைட்டுUricite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுC5H4N4O3
இனங்காணல்
நிறம்மஞ்சள் கலந்த வெண்மையாக, நிறமற்றதாக, இலேசான பழுப்பு நிறமாக
படிக அமைப்புஒற்றைச் சாய்வு
மோவின் அளவுகோல் வலிமை1-2
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி1.85 (கணக்கிடப்பட்டது)
ஒளியியல் பண்புகள்ஈரச்சு
மேற்கோள்கள்[1][2][3]

யூரிசைட்டு (Uricite) என்பது C5H4N4O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் மிகவும் அரிய ஒரு கனிமமாகும். யூரிக் அமிலத்தினுடைய கரிமக் கனிம வடிவமாக இது கருதப்படுகிறது. மென்மையான மஞ்சள் கலந்த வெண்மை நிற கனிமமான இது ஒற்றைச் சரிவு படிகத்திட்டத்தில் படிகமாகிறது.

கண்டுபிடிப்பும் தோற்றமும்[தொகு]

1973 ஆம் ஆண்டு மேற்கு ஆத்திரேலியாவின் [1] இயூக்லா பிரதேசத்தில் உள்ள டிங்கோ டோங்கா குகையில் காணப்பட்ட வௌவால் எச்சத்தில் முதன்முதலாக யூரிசைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. நீரிலி வடிவ யூரிக் அமிலம் இடம்பெற்றிருப்பதால் கனிமத்திற்கு இப்பெயரை சூட்டினார்கள். பைபாசுமாமைட்டு, புருசைட்டு, சிங்கெனைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து டிங்கோ டோங்கா குகையில் இது காணப்பட்டது [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரிசைட்டு&oldid=2573348" இருந்து மீள்விக்கப்பட்டது