யூனுஸ் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யூனிஸ் கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
யூனுஸ் கான்

முகம்மது யூனுஸ் கான் (பஷ்தூ, உருது: محمد یونس خان Mohammad Younus Khan, பிறப்பு: நவம்பர் 29, 1977), முன்னாள் பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரரும் பாக்கிஸ்தான் நாட்டுத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவருமாவார்.[1][2] மர்தன் பிரதேசத்தில் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் இடை நிலை மட்டையாளராவார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரே ஆட்டத்தில் 300 ஓட்டங்களைப் பெற்ற மூன்றாவது பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர்.[3] பாக்கிஸ்தான் நாட்டுத் துடுப்பாட்ட அணி, கபீப் வங்கி அணி, நொட்டிங்காம்செயார் அணி, பெசாவார் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ், தென் அவுஸ்திரேலியா, யோக்செயார் அணிகளில் இவர் இடம்பெற்றுள்ளார்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்[1][2]. அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[4] 11 நாடுகளுக்கும் எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு அடித்த ஒரே துடுப்பாட்ட வீரர் எனும் சாதனை படைத்துள்ளார்.[5][6][7]

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பாக்கித்தானிய வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் மற்றும் அதிக நூறுகள் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.[8] மேலும் ஒரு ஆட்டப் பகுதியில் 300 ஓட்டங்களுக்கும் மேல் அடித்த மூன்றாவது பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்[9]. இவரின் தலைமையிலான பாக்கித்தான் அணி 2009 ஐசிசி உலக இருபது20 போட்டியில் கோப்பை வென்றது.[10] ஏப்ரல் 23, 2017 இல் இவர் தேர்வுப் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் இந்தச் சாதனை படைத்த முதல் பாக்கித்தானிய வீரர் மற்றும் 13 ஆவது சர்வதேச வீரர் எனும் சாதனை படைத்தார். இதன்மூலம் இந்தச் சாதனையைப் படைத்த மிகவும் வயதான வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.[11]

மார்ச் 24, 2010 இல் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக இவரையும் முகம்மது யூசுபையும் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இடைநீக்கம் செய்தது.[12] அந்தத் தடை மூன்று மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.[13] பின் அக்டோபர் 22, 2014 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஒரே போட்டியில் தனது 25 ஆவது மற்றும் 26 ஆவது நூறினைப் பதிவு செய்தார். இதன்மூலம் ஒரே போட்டியில் இரு நூறுகளை அடித்த 6 ஆவது பாக்கித்தானிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[14] சூன் 25, 2015 இல் தனது நூறாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இதன்மூலம் நூறு போட்டிகளில் விளையாடிய ஐந்தாவது வீரர் எனும் பெருமை பெற்றார் .அக்டோபர் 13, 2015 இல் 8,833 ஓட்டங்கள் எடுத்து ஜாவெட் மியன்டாட்டின் சாதனையை முறியடித்து அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.[15][16][17]

நவம்பர் 2016 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[18] பின் மே, 2017 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரோடு அனைத்து வடிவ துடுப்பாட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[19]

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இவரை 225,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. ஆனல் இவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். இதில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி 1 ஓட்டஙக்ள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் விளையாடவில்லை.[20]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Younis Khan — Pakistan's greatest ever?".
  2. 2.0 2.1 "Fan-speak: How great is Younis Khan?".
  3. "Cricinfo – Record-eyeing Younis puts team first". Cricinfo (24 பெப்ரவரி 2009). பார்த்த நாள் 24 பெப்ரவரி 2009.
  4. "Who is Pakistan's greatest Test batsman?". ESPNcricinfo. பார்த்த நாள் 12 May 2017.
  5. "Younis completes unique set". ESPNcricinfo. பார்த்த நாள் 5 January 2017.
  6. "Can Younis Khan save Pakistan in Sydney?". DAWN. பார்த்த நாள் 5 January 2017.
  7. "A rare kind of century for Younis". ESPNcricinfo. பார்த்த நாள் 5 January 2017.
  8. "Younis Khan reaches 10,000 Test runs landmark". ESPNcricinfo. பார்த்த நாள் 23 April 2017.
  9. "Record-eyeing Younis puts team first". ESPNcricinfo. பார்த்த நாள் 24 February 2017.
  10. "Younis retires from Twenty20 with a plea". ESPNcricinfo. பார்த்த நாள் 21 June 2017.
  11. "Pakistan's first in the 10,000 club". ESPN cricinfo. http://www.espncricinfo.com/west-indies-v-pakistan-2017/content/story/1076015.html. 
  12. "Rana, Malik get one-year bans, Younis and Yousuf axed from teams". Cricinfo (10 March 2010). பார்த்த நாள் 10 March 2010.
  13. "Younus Khan international cricket ban lifted". BBC. 5 June 2010. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/other_international/pakistan/8723801.stm. பார்த்த நாள்: 29 August 2010. 
  14. "Australia tour of United Arab Emirates, 1st Test: Australia v Pakistan at Dubai (DSC), Oct 22–26, 2014". ESPN Cricinfo. பார்த்த நாள் 22 October 2014.
  15. "Younis breaks Miandad runs record". கிரிக்இன்ஃபோ (13 October 2015). பார்த்த நாள் 15 October 2015.
  16. "Younis Khan's hard-earned hundred".
  17. "Most fourth-innings tons, best average in Pak history".
  18. "Younis Khan announces ODI retirement".
  19. "Saying goodbye with a hug". ESPNcricinfo. பார்த்த நாள் 14 May 2017.
  20. "Younis Khan". Cricinfo. பார்த்த நாள் 4 February 2016.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூனுஸ்_கான்&oldid=2765895" இருந்து மீள்விக்கப்பட்டது