யூதர் திருக்கோயில்
Appearance
யூதர் திருக்கோயில் அல்லது யூதர்களின் கோயில், என்பது யூதர்களுக்கு இருந்த எருசலேம் கோவில்களைக் குறிக்கலாம். இவை:
- முதல் கோவில், இது பபிலோனியர்களால் கி.மு 586இல் இடிக்கப்பட்டது.
- இரண்டாம் கோவில், இது உரோமையர்களால் கி.பி 70இல் இடிக்கப்பட்டது.
- மூன்றாம் கோவில் என்பது எசேக்கியேல் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்காலத்தில் வரவிருக்கும் எருசலேம் கோவில் ஆகும்.
யூதர்களுக்கு கோவில் ஒன்று இப்போது இல்லை. உரோமையர்களால் சுமார் கி.பி 70-இல் இடிக்கப்பட்ட இரண்டாம் கோவில். இதுவரை மீண்டும் கட்டப்படவில்லை, இக்கோவில் மீண்டும் கட்டப்பட்டால் அதே இடத்தில், அதே போன்றே கட்டப்பட வேண்டும் என்பது யூதர்களின் நம்பிக்கை. இக்கோவில் இருந்த இடத்தில் இப்போது பாறைக் குவிமாடம் உள்ளது. யூதர்கள் கோவிலில் பலி செலுத்துவர், ஆனால் தொழுகைக்கூடத்தில் இறைவேண்டல் மட்டுமே நடக்கும். இவர்கள் வழிபாடு நடத்து இடம் இப்போது தொழுகைக்கூடம் என அழைக்கப்படுகின்றது.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |