யூடித் யங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யூடித் யங்
பிறப்புசெப்டம்பர் 15, 1952
இறப்புமே 23, 2014
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்ஆர்வார்டு பல்கலைக்கழகம், மின்னசோட்டா பல்கலைக்கழகம்
விருதுகள்மரியா கோயெப்பர்ட்-மேயர் விருது

யூடித் உரூபின் யங் (Judith (Rubin) Young) (செப்டம்பர் 15, 1952 – மே 23, 2014)[1] ஓர் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளரும்.[2] கல்வியியலாளரும் ஆவார். இவருக்கு அமெரிக்க இயற்பியல் கழகம் 1986 இல் உலகின் தலைசிறந்த இளம் இயற்பியலாளராகத் தேர்வு செய்து முதல் மரியா கோயெப்பர்ட்-மேயர் விருதை வழங்கியது.[3][4][5] "இவரது முன்னோடிப் பால்வெளிக் கட்டமைப்பு ஆராய்ச்சி மிகத் தொடக்கநிலை CO உமிழ்வுப் பரவல் படம் வரைதலும் பிறகு தொடர்ந்து விரிவான மூலக்கூறு வளிமப் பரவலும் சார்ந்த அளக்கையும் அண்மைப் பால்வெளிகளின் விண்மீன்கள் உருவாக்கமும் அடங்கும்."[6]

வாழ்க்கை[தொகு]

இவர் நிக் இசட். சுகோவில்லியுடன் பால்வெளிகளின் தண்வளிம, கரிம ஓராக்சைடு உள்ளடக்கத்தை கண்டறியும் ஆய்வில் கலந்துகொண்டார்.[5] இந்த இருவரும் பால்வெளிகளில் ஒளியும் வளிமமும் ஒரேவிகிதத்தில் பரவியுள்ளதைக் கண்டறிந்தனர்.[5] வளமான ஆராய்ச்சிதிறம் வாய்ந்த இளம்பெண் அறிவியலாள ரான இவருக்கு 1982 இல் அமெரிக்க வானியல் கழகம் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை வழங்கி சிறப்பு செய்தது.[3][5]

இவர் ஆம்கெர்சுட்டில் உள்ல மசாசூசட் பலகலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் பேராசிரியராக உள்ளார்.[7] ஐவர் 130 க்கும் மேலாக ஆய்வுகளை வெளியிட்டுள்ளார்; 5 முனைவர் பட்ட மாணவருக்கும் 15 பட்ட மாணவருக்கும் ஆய்வு வழிகாட்டியாக இருந்துள்ளார்.[8] இவர் வானியலாளர் வேரா உரூபின், கணித உயிரியற்பியலாளர் இராபெர்ட் உரூபின் ஆகியோருக்கு மகளாக வாழ்சிங்டன் டி.சி நகரில் பிறந்தார்.[9] இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வானியலில் தகைமையுறு இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.[7][8] இவர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் இருந்து இயற்பியலில் முதுவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார்.[8] இவர் 1989 இல் இணைப்பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.[7] இவர் தன் சூரியச் சக்கர ஆய்வுத் திட்ட்த்துக்காக பெயர்பெற்றவர்.[10] இத்திட்ட நோக்கம் வானியல் அறிவை அடித்தட்டு மக்கள் வரைக் கொண்டுசென்று உமாசு வளாக விளையாட்டுக் களங்களில் பரப்புவதாகும் UMASS campus.[8][10] இவர் வானியகலுக்காக மட்டுமன்றி, உமாசு வளாகத்திலும் தான் வாழும் களமக்களிடமும் ஆற்றிய பணிகளுக்காகவும் புகழ்பெற்றவர்.[7][8]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் பெயர்பெற்ற வானியலாளராகிய வேரா உரூபின் குழந்தைகளில் ஒருவராவார்.[11][12]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://digitalcommons.unl.edu/cgi/viewcontent.cgi?article=1121&context=libraryscience
 2. Larsen, Kristine (23 July 1928). "Vera Cooper Rubin". பார்த்த நாள் 1 July 2016.
 3. 3.0 3.1 Oakes, E.H. (2007). Encyclopedia of World Scientists. Facts on File Science Library. Facts On File, Incorporated. பக். 792. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4381-1882-6. https://books.google.com/books?id=uPRB-OED1bcC&pg=PA792. பார்த்த நாள்: 1 July 2016. 
 4. "Maria Goeppert Mayer Award" (1 July 2016). பார்த்த நாள் 1 July 2016.
 5. 5.0 5.1 5.2 5.3 "Obituary: Judy Young, Astronomer Who Built Campus Sunwheel" (28 May 2014). பார்த்த நாள் 1 July 2016.
 6. Teske, Richard G. (23 May 2014). "Judith S. Young (1952 - 2014)". பார்த்த நாள் 1 July 2016.
 7. 7.0 7.1 7.2 7.3 "Obituary: Judy Young, Astronomer Who Built Campus Sunwheel". Office of News & Media Relations | UMass Amherst. https://www.umass.edu/newsoffice/article/obituary-judy-young-astronomer-who-built. 
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 "Judith S. Young (1952 - 2014) | American Astronomical Society".
 9. "Vera Rubin – The Gruber Foundation". பார்த்த நாள் December 26, 2016.
 10. 10.0 10.1 "A Megalith for the Millennium » American Scientist".
 11. "A Woman's Place in the Cosmos (washingtonpost.com)".
 12. Overbye, Dennis (2016-12-27). "Vera Rubin, 88, Dies; Opened Doors in Astronomy, and for Women" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2016/12/27/science/vera-rubin-astronomist-who-made-the-case-for-dark-matter-dies-at-88.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூடித்_யங்&oldid=2896327" இருந்து மீள்விக்கப்பட்டது