யூசுப் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூசுப் அலி எம். ஏ (M. A. Yusuff Ali) - ( இவரது முழுப்பெயர் யூசுப் அலி முசலியம் வீட்டில் அப்துல் காதர் - கேரள பெயரிடும் மரபுகளைப் பார்க்கவும்) என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இந்திய செல்வந்த தொழிலதிபர் ஆவார். சர்வதேச அளவில் உள்ள லூலூ பேரங்காடிகள் மற்றும் பல்கடை அங்காடிகளைக் கொண்டிருக்கும் லூலூ குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநாராக உள்ளார். இந்த நிறுவனத்தின் விற்பனை அளவு ஆண்டிற்கு 7.4 அமெரிக்க பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த நிறுவனம் இந்தியர்களை தனது பல நாடுகள் உள்ள பிற நாடுகளில் அதிகமாகப் பயன்படுத்துகிறது. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, இந்திய செல்வந்தர்களின் பட்டியலில் யூசுப் அலி 21 வதுஇடத்திலும் உலக அளவில் 270 வது (2018 நிலவரப்படி) நபராகவும் உள்ளார். இவர் 5.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உடையவராவார்.[1][2] மேலும் 2018இல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் மத்திய கிழக்கு பிரிவு வெளியிட்ட பட்டியலின்படி அரபு நாடுகளில் தொழில் செய்யும் 100 இந்திய தொழிலதிபர்களில் முதல் இடத்தில் யூசுப் அலி இருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Forbes News". Forbes. 2015. https://www.forbes.com/profile/ma-yusuff-ali/. 
  2. "Forbes Biionaires". Forbes. 2015. https://www.forbes.com/profile/ma-yusuff-ali/. 
  3. East, Forbes Middle. "Top 100 Indian Business Owners In The Arab World 2018". Forbes ME.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூசுப்_அலி&oldid=3023352" இலிருந்து மீள்விக்கப்பட்டது