உள்ளடக்கத்துக்குச் செல்

யூக்ரிப்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூக்ரிப்டைட்டு
Eucryptite
ஆல்பைட்டில் உள்ள யூக்ரிப்டைட்டு மணிகள் (அளவு: 9.3 × 7.0 × 2.8 செ.மீ)
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுLiAlSiO4
இனங்காணல்
நிறம்பழுப்பு, நிறமற்றது,வெண்மை
படிக இயல்புகூரிய முகப் படிகங்கள், கரடுமுரடான படிகத் திரட்டுகள் மற்றும் பாரிய அளவில் அரிதானது
படிக அமைப்புமுக்கோணப் படிகம்
பிளப்பு{1010} மற்றும் {0001} இல் தெளிவில்லை
முறிவுசங்குருவம்
விகுவுத் தன்மைஎளிதில் நொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை6.5
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளி புகும் மற்றும் கசியும்
அடர்த்தி2.67
ஒளியியல் பண்புகள்ஒற்றை அச்சு (+)
ஒளிவிலகல் எண்nω = 1.570 – 1.573 nε = 1.583 – 1.587
இரட்டை ஒளிவிலகல்δ = 0.013
பிற சிறப்பியல்புகள்புற ஊதா சிற்றலை ஒளியில் இளஞ் சிவப்பு முதல் சிவப்பு நிறமாக ஒளிரும்
மேற்கோள்கள்[1][2][3]

யூக்ரிப்டைட்டு (Eucryptite) LiAlSiO4என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் யூக்ரிப்டைட்டு கனிமத்தை Ecp[4]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

இலித்தியம் தாங்கிய அலுமினிய சிலிக்கேட்டு கனிமமாக வகைப்படுத்தப்படும் இக்கனிமம் முக்கோண - சாய்சதுரப் பிழம்புரு படிக அமைப்பில் காணப்படுகிறது. பொதுவாக சிறுமணி முதல் பெரிய வடிவம் வரையில் போலி உருவவியல் ரீதியாக சுபோடுமீனைப் போல காணப்படுகிறது. எளிதில் நொறுங்கக் கூடியதாகவும் சங்குருவத்தில் தெளிவற்ற பிளவும் கொண்டுள்ளது. படிகத்தின் வழியாக ஒளிபுகும் மற்றும் ஒளி கசியும். நிறமற்றது முதல் வெள்ளை நிறமாகவும் பழுப்பு நிறமாகவிம் தோன்றும். 6.5 என்ற மோவின் கடினத்தன்மையையும் 2.67 என்ற ஒப்படர்த்தியும் கொண்டிருக்கும். ஒளியியல் ரீதியாக nω = 1.570 - 1.573 மற்றும் nε = 1.583 - 1.587 என்ற ஒளிவிலகல் குறியீட்டு எண் மதிப்புகளுடன் நேர்மறை ஒற்றை அச்சை கொண்டிருக்கும்.

பொதுவாக ஆல்பைட்டு, சுபோடுமீன், பெட்டலைட்டு, அம்ப்லிகோனைட்டு, லெபிடோலைட்டு மற்றும் குவார்ட்சு ஆகிய கனிமங்களுடன் இணைந்து இலித்தியம் நிறைந்த பெக்மாடைட்டு பாறைகளில் காணப்படுகிறது.[2]

சுபோடுமீன் கனிமத்தின் இரண்டாம் நிலை மாற்ற விளைபொருளாகக் காணப்படுகிறது. முதன்முதலில் 1880 ஆம் ஆண்டு கனெக்டிகட்டின் பிராஞ்ச்வில்லே என்ற இடத்தில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டது. ஆல்பைட்டு கனிமத்தில் பதிக்கப்பட்டு கிடைத்ததால், நன்கு மறைக்கப்பட்ட என்ற பொருளுக்கான கிரேக்க சொல்லில் இருந்து யூக்ரிப்டைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Mindat.org
  2. 2.0 2.1 2.2 Handbook of Mineralogy
  3. Webmineral data
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூக்ரிப்டைட்டு&oldid=4248151" இலிருந்து மீள்விக்கப்பட்டது