உள்ளடக்கத்துக்குச் செல்

யூகி சேது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூகி சேது
பிறப்புசென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1986–தற்போது
வாழ்க்கைத்
துணை
அமிர்தா கல்யாணி

யூகி சேது திரைப்படங்கள் குறித்தான முனைவர் பட்டம் பெற்றவர்.[1] இதனால் முனைவர்.யூகி சேது எனவும் அழைக்கின்றனர்.[2] இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என எண்ணற்ற தொழில்களை செய்பவர். பஞ்சதந்திரம், ரமணா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

பெயர் மாற்றம்

[தொகு]

யூகி சேதுவின் இயற்பெயர் சேதுராமன் என்பதாகும். கிருஷ்ண தேவராயரின் காலத்தில், தெனாலி ராமன் போன்றோர் இருந்த அவையில் மதியூகி என்ற அமைச்சரும் இருந்தார். அந்தப் பெயரை மாற்றியிட்டு தனது பெயராக்கிக் கொண்டார் சேதுராமன்.

திரை வாழ்க்கை

[தொகு]

இவர் சென்னையில் பிறந்தவர். திரைப்பட இயக்கத்திற்கான பட்டையப் படிப்பில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இவருடைய முதல் குறும்படம் 1984ஆம் சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்றது.

1987ல் கவிதை பாட நேரமில்லை என்ற படத்தினை இயக்கினார். 1991ல் மாதங்கள் ஏழு என்ற படத்தின் மூலம் நடிகனாக அறிமுகம் ஆனார். கமலஹாசனின் படங்களான பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், அன்பே சிவம் போன்ற படங்களிலும், ரமணா படத்திலும் சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.

யூகி சேது எழுதி, இயக்கிய முதல் படமான 'கவிதை பாட நேரமில்லை' 1987ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் வரும் 'காதல் என்ன காதல்' என்ற பாடல் உதடுகள் ஒட்டாமலே பாடுவதாக எழுதப்பட்டது. பிறகு, 1991ஆம் ஆண்டு வெளியான 'மாதங்கள் ஏழு' என்ற படத்தில் தான் யூகி சேது முதல் முதலில் நடிகராக அறிமுகமானார்.

முனைவர் பட்டம்

[தொகு]

முனைவர் படிப்பிற்காக திரைப்படத்தில் அழகியல் என்ற கருப்பொருளில் ஆய்வு மேற்கொண்டு பட்டமும் பெற்றுள்ளரார்.

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூகி_சேது&oldid=3954152" இலிருந்து மீள்விக்கப்பட்டது