தைலம் (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யூகலிப்டஸ் மரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தைலம் (மரம்)
Eucalyptus terticornis buds, capsules and foliage.jpeg
Buds, capsules and foliage of Eucalyptus terticornis
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்anked_ordo = Rosids
வரிசை: Myrtales
குடும்பம்: Myrtaceae
துணைக்குடும்பம்: Myrtoideae
சிற்றினம்: Eucalypteae
பேரினம்: Eucalyptus
L'Hér.
Species

About 700; see the List of Eucalyptus species

Distribution.eucalyptus.png
Natural range
வேறு பெயர்கள்

Aromadendron Andrews ex Steud.
Eucalypton St.-Lag.
Eudesmia R.Br.
Symphyomyrtus Schauer[1]

தைல மரம் (Eucalyptus, யூகலிப்டஸ் மரம்)என்பது மிர்டேசியே (Myrtaceae) என்ற குடும்பவகையைச் சேர்ந்த தாவரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்டு அதிக விளைச்சலைத் தரும், எரிபொருள்மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிப்பட்டது. தைலமரங்களில் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடையவை. வறண்ட மற்றும் சமவெளிப்பகுதிகளில் வளரும் யூகலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றவை. இம்மரம் 8 மணி நேரத்திற்கு தேவையான நீரைதானே உறிஞ்சி எடுத்து ஆவியாக்கி விடுகிறது. இந்த மரம் நிலத்தின் அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரையும் கணிசமான அளவு குறைத்து விடுகிறது.

பண்புகள்[தொகு]

தைல மரம் விரைவாகவும், உயரமாகவும் ( 20 முதல் 50 மீ வரை) வளரக்கூடியது. மேலும் 2 மீ சுற்றளவு கொண்ட இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் நன்றாக உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது. இதன் இலைகள் கடினத் தன்மையும், நேர்குத்தாகத் தொங்கும் இயல்பையும் உடையவை. இம்மரமானது ஜீலை - ஆகஸ்ட் மாதங்களில் பூக்கும் பருவத்திற்கு வரும்.

மர வளர்பியல் பண்புகள்[தொகு]

தைலமரம் பல்வேறு வகையான மண் மற்றும் காலநிலைகளுக்கேற்ப வேகமாக வளரக்கூடிய, அதிக மறுதாம்பு வாய்ப்புள்ள மர வகையாகும். தைல மரம் வறட்சிதாங்கும் தன்மையுடையதாக அறியப்பட்டாலும் இம்மரத்தின் வளர்ச்சிக்கு ஆண்டு மழையளவு குறைந்த பட்சம் 800 மி.மீ. தேவை. இம்மரமானது வண்டல், சரளை, சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரக்கூடியது. மண்ணின் ஆழம் 1.0 மீ - க்கு குறைவாக இருக்கக்கூடாது. அதிக உவர் மற்றும் களர் நிலங்களிலும் வளராது அதே போல் மண்ணின் அமிலகாரத்தன்மை 6 லிருந்து 8 வரை இருக்க வேண்டும். அதிக மண் அரிப்பு மற்றும் நீர் தேக்க நிலங்கள் கூடாது.

பயிரிடும் முறைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Eucalyptus L'Hér.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2009-01-27). பார்த்த நாள் 2010-02-28.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தைலம்_(மரம்)&oldid=1828427" இருந்து மீள்விக்கப்பட்டது