யூகரிடா
யூகரிடா புதைப்படிவ காலம்: | |
---|---|
![]() | |
மெகானைசிடிபானென்சு நார்வேஜிகா-கிரில் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
உயிரிக்கிளை: | கணுக்காலி
|
Subphylum: | குருசுடாசியா
|
வகுப்பு: | மலகோசுட்ராக்கா
|
Subclass: | இயூமலகொசுட்ராக்க
|
Superorder: | இயூக்கரீடா கால்மேன், 1904 [1]
|
வரிசை | |
|
யூகரிடா (Eucarida) என்பது மலகோசுடிரக்கா வகுப்பின் பெரும் வரிசை ஆகும். இதில் பத்துகாலிகள், கிரில், அங்கசுடிடோன்டிடா வரிசையினைச் சேர்ந்த உயிரிகள் உள்ளன.[2] இவை அனைத்தும் மார்பக பிரிவுகளை இணைக்கும் மேலோடு, காம்பில் தாங்கிய கண்கள் உள்ளிட்ட சிறப்புப் பண்களைக் கொண்டுள்ளன.[3]
வரிசைகள்
[தொகு]யூகரிடா பின்வரும் மூன்று வரிசைகளை உள்ளடக்கிய ஒரு மாறுபட்ட, ஏராளமான சிற்றினங்களைக் கொண்ட குழுவாகும்.
யூபௌசியேசியா
[தொகு]யூபௌசியேசியாவினைச் சேர்ந்த சிற்றினங்கள் பொதுவாக கிரில் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் கடல் இறால் போன்றவை. இவற்றின் நீந்துக் கால்கள் (வயிற்று இணைப்புகள்) இவை நீச்சல் வீரர்களாகச் செயல்பட உதவுகின்றன. இவை பெரும்பாலும் மிதவைவாழிகளை உணவாகக் கொள்கின்றன. இந்தக் குழுவில் 90 சிற்றினங்கள் உள்ளன. இவற்றில் அந்தாட்டிக்கா கிரில் யூப்கொளசியா சூப்பர்பா உயிர்த்திரள் 500 மில்லியன் டன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[4]
பத்துக்காலிகள்
[தொகு]பத்துக்காலிகள் எனும் டெக்கபோடா என்பது 15,000 சிற்றினங்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இதில் 5 இணை மார்பகக் கால்களும் செதில்களை உள்ளடக்கிய நன்கு வளர்ந்த மேலோடும் உள்ளது.[5] இவற்றில் நண்டு, இறால், சிங்கிஇறால்கள் போன்ற உயிரிகள் அடங்கும். பத்துக்காலிகளின் செவுள் கட்டமைப்பின் அடிப்படையில் டென்ட்ரோபிரான்சியாட்டா (இறால்) மற்றும் பிளியோசைமாட்டா என இரண்டு துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவை கரிடியா (இறால்), இசுடெனோபோடைடா (சண்டையிடும் இறால்), அனோமுரா, பிராச்சியுரா (நண்டு) போன்ற பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.[6][7]
அங்கசுடிடொன்டிடா
[தொகு]அங்கசுடிடொன்டிடே என்ற ஒரே ஒரு குடும்பத்தைக் கொண்ட ஓர் அழிந்துபோன வரிசையும் உள்ளது. இது அங்கசுடிடோன்டசு, சிராமிடோன்டசு ஆகிய இரண்டு பேரினங்களைக் கொண்டுள்ளது.[8] இவை முதலில் யூரிப்டெரிட்களாக கருதப்பட்டன. ஆனால் பின்னர் பத்துக்காலிகளுடனா இவற்றின் சாத்தியமான உறவு நிறுவப்பட்டது.[8][9]
தொகுதிவரலாறு
[தொகு]மலகோசிட்ராகாவின் தொகுதி வரலாறு குறித்து விவாதத்திற்குரியது.[6] குறிப்பாக, யூகாரிடாவின் ஒற்றைத்தொகுதி மரபு உயிரினத் தோற்றம் கேள்விக்குள்ளாகியுள்ளது.
- ஒற்றைத் தொகுதி மரபு உயிரினத் தோற்றம்: யூகாரிடா உயிரிக்குழு பெராகரிடா உட்கோடாகவோ, மலகோசிட்ராகா[6][10][7][11] அல்லது மைசிடா (பலதொகுதி மரபு உயிரினத் தோற்ற சைசோபோடா) உட்கோடாக உள்ளது.[12]
- பலதொகுதி மரபு உயிரினத் தோற்றம்: சில வகைப்பாடியலாளர்கள் யூகாரிடாவை பெராகரிடாவுடன் இணைந்த ஒரு உட்கோட்டினை முன்மொழிந்துள்ளனர்.[13]
- பலதொகுதி மரபு உயிரினத் தோற்றம்: சிலர் யூஃபௌசியாசியாவை மைசிடாவுடன் குழுவாகக் கொண்டு சைசோபோடா, அல்லது யூஃபௌசியேசியாவை காப்லோகாரிடாவுடன் பத்துக்காலி அடித்தளத்துடன் பெராகரிடாவை உருவாக்கியுள்ளனர்.[14][15][16][16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Eucarida Calman, 1904". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- ↑ WoRMS (2010). "Eucarida". World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் February 7, 2011.
- ↑ L. A. Borradaile; F. A. Potts; L. E. S. Eastman & J. T. Saunders (1961). "The Class Crustacea". In Gerald A. Kerkut (ed.). The Invertebrata (4th ed.). Cambridge University Press. pp. 340–419.
- ↑ Joel W. Martin; George E. Davis (2001). An Updated Classification of the Recent Crustacea (PDF). Natural History Museum of Los Angeles County. pp. 1–132. Archived from the original (PDF) on 2013-05-12. பார்க்கப்பட்ட நாள் 2011-02-07.
- ↑ Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans". [Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf.
- ↑ 6.0 6.1 6.2 Frederick Schram (1986). Crustacea. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-503742-1.
- ↑ 7.0 7.1 M. A. Wills (1998). "A phylogeny of recent and fossil Crustacea derived from morphological characters". In Richard A. Fortey; Richard H. Thomas (eds.). Arthropod Relationships. Volume 55 of Systematics Association Series. Springer Science+Business Media. pp. 189–210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-75420-3.
{{cite book}}
: Text "Springer" ignored (help) - ↑ 8.0 8.1 Gueriau, Pierre; Charbonnier, Sylvain; Clément, Gaël (2014-09-01). "Angustidontid crustaceans from the Late Devonian of Strud (Namur Province, Belgium): Insights into the origin of Decapoda". Neues Jahrbuch für Geologie und Paläontologie - Abhandlungen 273 (3): 327–337. doi:10.1127/0077-7749/2014/0434. https://www.researchgate.net/publication/265211942.
- ↑ T. A. Hegna, J. Luque, and J. A. Wolfe (2020). The fossil record of the Pancrustacea. In M. Thiel, G. C. B. Poore (eds.). Evolution and Biogeography of the Crustacea (PDF). Vol. 8. Oxford University Press. pp. 21–52. Archived (PDF) from the original on June 25, 2021.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ R. Siewing (1963). "Studies in malacostracan morphology: results and problems". In H. B. Whittington; W. D. Rolfe (eds.). Phylogeny and Evolution of Crustacea. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. pp. 85–103.
- ↑ Trisha Spears; Ronald W. DeBry; Lawrence G. Abele; Katarzyna Chodyla (2005). "Peracarid monophyly and interordinal phylogeny inferred from nuclear small-subunit ribosomal DNA sequences (Crustacea: Malacostraca: Peracarida)". Proceedings of the Biological Society of Washington 118 (1): 117–157. doi:10.2988/0006-324X(2005)118[117:PMAIPI]2.0.CO;2. http://decapoda.nhm.org/pdfs/10231/10231.pdf.
- ↑ L. Watling (1999). "Towards understanding the relationship of the peracaridan orders: the necessity of determining exact homologies". In Frederick R. Schram; J. Carel von Vaupel Klein (eds.). Crustaceans and the Biodiversity Crisis. Proceedings of the Fourth International Crustacean Congress, Amsterdam: The Netherlands, July 20–24, 1998, Vol. I. Brill Publishers. pp. 73–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-11387-9.
- ↑ Stefan Richter; Gerhard Scholtz (2001). "Phylogenetic analysis of the Malacostraca (Crustacea)". Journal of Zoological Systematics and Evolutionary Research 39 (3): 113–136. doi:10.1046/j.1439-0469.2001.00164.x.
- ↑ Georg Ossian Sars (1870). Carcinologiske Bidrag til Norges Fauna over de ved Norges Kysters forekommende Mysider. Vol. 1. Oslo: Brøgger & Christies Bogtrykkeri.
{{cite book}}
: Text "Christiana" ignored (help) - ↑ Simon N. Jarman; Stephen Nicol; Nicholas G. Elliott; Andrew McMinn (2000). "28S rDNA evolution in the Eumalacostraca and the phylogenetic position of krill". Molecular Phylogenetics and Evolution 17 (1): 26–36. doi:10.1006/mpev.2000.0823. பப்மெட்:11020302.
- ↑ 16.0 16.1 K. Meland; E. Willassen (2007). "The disunity of "Mysidacea" (Crustacea)". Molecular Phylogenetics and Evolution 44 (3): 1083–1104. doi:10.1016/j.ympev.2007.02.009. பப்மெட்:17398121. http://decapoda.nhm.org/pdfs/31293/31293.pdf.
