யுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுவன்
பிறப்புஅஜ்மல் கான்
சென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010-தற்போது வரை

யுவன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், இவர் குறிப்பாக தமிழ் படங்களில் தோன்றியுள்ளார். இவர் இயக்குனர் ஃபெரோஸ் கானின் மகன். எம். அன்பழகனின் சாட்டை (2012) படதின் மூலமாக இவருக்கு திருப்புமுனை ஏற்பட்டது.[1]

தொழில்[தொகு]

இயக்குனர் ஃபெரோஸ் கானின் மகன் அஜ்மல் கான் திரைப்படங்களில் படங்களில் பணியாற்ற ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் இவரது தந்தையின் தம்பி அர்ஜுனாவில் (2010) உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் இவர் தனது தந்தையின் பாசக்கார நண்பர்கள் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் இவரது பெயர் அஜ்மல் கான் என்று குறிப்பிடப்பட்டது. இந்த படம் குறைந்த அரங்குகளில் வெளியானது. படமானது விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[2][3] சாட்டை (2012) படத்தில் பள்ளி மாணவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பு வாழ்வில் முன்னேற்றம் கண்டார். படம் நேர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது. அதே நேரத்தில் தி இந்து பத்திரிகையின் விமர்சகர் "யுவன் தனது முக பாவங்களில் மேலும் கடினமாக உழைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.[4] இவரது அடுத்தடுத்த படங்களில் திஷா பாண்டேயின் ஜோடியாக கீரிபுள்ள, சரண்யா மோகனுடன் காதலைத் தவிர வேரொன்றும் இல்லை மற்றும் ஸ்ரீ ராமுடன் இணைந்து நடித்த கம்மர் கட்டு என்ற திகில் படம் வணிகரீதியாக குறைவான வரவேற்பைப் பெற்றது மேலும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[5][6] இந்த காலகட்டத்தில், இவர் ராசு மதுரவனின் சொகுசு பேருந்து படத்தில் பணியாற்றினார், ஆனால் இயக்குனர் இறந்ததைத் தொடர்ந்து படம் நிறுத்தப்பட்டது. அதேபோல் ஜாக்கி என்ற மற்றொரு பெயரிலான படமும் தயாரிப்புக்கு இடையில் நிறுத்தப்பட்டன.[7]

2016 ஆம் ஆண்டில், யுவன் 1700 ஆம் ஆண்டு காலத்தில் நடக்கும் வரலாற்றுப் படமான இளமி என்ற திரைப்படத்தில் பணியாற்றினார். அதில் ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்கும் ஒரு இளைஞனாக இவர் நடித்தார்.[8] இப்பாத்திரத்திற்காக, அவர் உடல் எடை ஏற்றி, காளைகளுடன் பயிற்சி பெற்றார்.[9][10][11] இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் பிரகதி குருபிரசாத்துடன் ஜோடியாக யுவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனப்பட்டது. இருப்பினும், இந்த படம் பின்னர் கைவிடப்பட்டது.[12]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2011 பாசக்கார நண்பர்கள் அருண் ஜோசப்
2012 சாட்டை பழனிமுத்து
2013 கீரிபுள்ள கீரி
2014 காதலைத் தவிர வேறொன்றும் இல்லை அன்பு
2015 கம்மர்கட்டு ரமேஷ்
2016 இளமி கருப்பு
2017 அய்யனார் வீதி செந்தில்
2017 விளையாட்டு ஆரம்பம் யுவன் மேலும் கதை
2019 அடுத்த சாட்டை பழனிமுத்து

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவன்&oldid=3146534" இருந்து மீள்விக்கப்பட்டது