யுரேனோசர்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேனோசர்சைட்டு
Uranocircite
யுரேனோசர்சைட்டு
பொதுவானாவை
வகைபாசுபேட்டுக் கனிமம்
வேதி வாய்பாடுBa(UO2)2(PO4)2•10H2O
இனங்காணல்
படிக அமைப்புநாற்கோணம்
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2]

யுரேனோசர்சைட்டு (Uranocircite) என்பது Ba(UO2)2(PO4)2•10H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு யுரேனியத் தாதுவாகும். இதை யுரேனோசர்சைட்டு-II என்ற பெயராலும் அழைப்பர். பன்னாட்டு கனிமவியல் கழகம் 2012 ஆம் வெளியிட்ட புதிய கனிமங்களின் பட்டியலில் யுரேனோசர்கைட்டு-I மதிப்பிழந்திருந்தது. பாசுபேட்டுக் கனிமம் என்று வகைப்படுத்தப்படும் யுரேனோசர்சைட்டு மஞ்சள் முதல் பச்சை வரையிலான நிறங்கொண்டு பேரியம் கலந்த கனிமமாக உள்ளது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2 என்ற மதிப்பை இக்கனிமம் வெளிப்படுகிறது.

செருமனியின் பால்கென்சுடைனில் கண்டுபிடிக்கப்பட்டதால் கிரேக்க மொழியில் பால்கன் என்று பொருள்படும் யுரேனோசர்சைட்டு எனப் பெயரிடப்பட்டது. யுரேனோசர்சைட்டில் சுமார் 45% யுரேனியம் உள்ளது மற்றும் இது முக்கியமாக செருமனியின் சாக்சனியிலுள்ள பெர்கனில் வெட்டி எடுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனோசர்சைட்டு&oldid=2992399" இலிருந்து மீள்விக்கப்பட்டது