யும்ஜாவ் லீமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யும்ஜாவ் லீமா
லைரெம்பி-இல் ஒருவர்
யும்சாவ் லெய்மா, பண்டைய மணிப்புரி மொழியான மெய்டேய் மாயெக் அபுகிதாவில் எழுதப்பட்டுள்ளது
அதிபதிஎல்ல நேரத்திலும் ஆட்சி செய்யும் ராணித்தாய்
வீடு, குடும்பம், அரசன், ஆட்சி மற்றும் சக்தியின் கடவுள்
வேறு பெயர்கள்
 • யுஜாவ் லைரெம்பி (
 • யும்ஜாவ் லைரெம்மா
வகைமெய்டேய் வழிபாடு
இடம்வீடுகள், அரசாட்சி
குழந்தைகள்அணைத்து மெய்டேய் மன்னர்கள்
நூல்கள்புயாக்கள்
சமயம்பண்டைய கங்க்லைபக் (பண்டைய மணிப்பூர்)
விழாக்கள்லாய் அரோபா
யும்ஜாவ் லீமா

  யும்ஜாவ் லீமா அல்லது யும்ஜாவ் லைரெம்பி அல்லது யும்ஜாவ் லைரெம்மாஎன்பதற்கு வீடு, அரச குடும்பம், ஆட்சி மற்றும் அதிகாரத்தின் தாய் தெய்வம் என்ற பொருள் மெய்தேய் புராணங்களிலும் மதத்திலும் உள்ளது. அவர் எல்லா நேரத்திலும் ஆளும் ராணித் தாயாகக் கருதப்படுகிறார். அவர் வெள்ளை உடையில் மனித உருவம் எடுத்து அரசர்களை ஆசீர்வதிப்பதாக புராணம் கூறுகிறது. லீமாரல் சிதாபியின் தெய்வீக அவதாரங்களில் இவரும் ஒருவர். [1]

சொற்பிறப்பியல்[தொகு]

மெய்டே மொழியில் ( மணிப்பூரி மொழி ), "யும்ஜாவோ" என்றால் பெரிய வீடு என்று பொருள். [2] [3] "யும்ஜாவ்" அல்லது "யிம்ஜாவ்" என்பதைஅரச வீடு என்றும் குறிப்பிடலாம். "லீமா" என்றால் ராணி என்றும், [4] "லைரெம்பி" என்றால் தெய்வம் என்றும் பொருள்படும். [5] "லைரெம்மா" என்பது தெய்வம் என்பதற்கான மற்றொரு சொல்லாகும். [6]

வரலாறு[தொகு]

யும்ஜாவ் லீமா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலின் விளக்கப் படம். மெய்டேய் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது.

பழங்கால காங்கிலிபாக்கின் ( பழமையான மணிப்பூர் ) மெய்டேய் மன்னர் நவோதிங்காங் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) யும்ஜாவோ லைரெம்பிதெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலைக் கட்டினார்.

புராணம்[தொகு]

யும்ஜாவோ லீமா தேவி எனும் தெய்வம், தனது மகனான அரனை ஆசீர்வதிப்பதற்காக வெள்ளை உடையில் மனித உருவில் தோன்றினாள். ஒரு மன்னன் இறக்கும் போது கூட, அவள் அந்த இடத்திற்கு ஒரு மரண உருவத்தில் வந்தாள். அரசர்களின் வாழ்வையும் மரணத்தையும் அவள் கட்டுப்படுத்துகிறாள். அவள் அரசின் வீட்டுத் தலைவியாகவும், அரசர்களின் வழிகாட்டியாகவும் இருக்கிறாள்.

யும்ஜாவ் லீமா

ராசமாதாவுடனான உறவு[தொகு]

மெய்டேய் மக்களின் நம்பிக்கைகளின் படி, யும்ஜாவோ லீமா தேவி ராஜ்யத்தின் ராசமாதவின் (அரச தாய்) தெய்வீக பிரதிநிதித்துவமாகும். அனைத்து சக்திவாய்ந்த ராசத் தாய்மார்களும் அவர்களின் மரணத்திற்குப் பிறகு யும்ஜாவோ லீமா தெய்வத்துடன் ஒருங்கிணைக்கப்படுவதாக நம்பப் படுகிறது. தேவி யும்ஜாவோ லீமா தானே எல்லா நேரத்திலும் ஆட்சி செய்யும் ராணித் தாய் ஆவார். ஒரு ராஜ்யத்தில் மிகவும் சக்திவாய்ந்த நபர் எப்போதும் ராசமாதாஆவார். மேலும் இவர் யம்ஜாவோ லீமா தேவியின் பிரதிநிதித்துவத்தை கொள்வார். பழங்கால காங்கிலிபாக்கில் (பண்டைய மணிப்பூர்), போரில் இருந்து துண்டிக்கப்பட்ட எதிரிகளின் தலைகள் தெய்வத்திற்கு வழங்கப்பட்டது. மெய்டேய் அரசர்கள் தங்கள் தாய்மார்களின் பெயரில் ராஜ்யத்தை ஆட்சி செய்தனர். ராணி தாய்மார்களின் பெயரில் போர்களும் சண்டைகளும் நடத்தப்பட்டன.

யும்ஜாவ் லீமா

வழிபாடு[தொகு]

மன்னரின் நீண்ட ஆயுளுக்காக யும்ஜாவோ லீமா தேவி பிரார்த்தனை செய்யப்படுகிறார். அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இறுதி சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் பொதுவாக மைபாக்களால் செய்யப்படுகின்றன. தேவி யும்ஜாவோ லைரெம்மா முக்கியமாக மெய்டேய் இனத்தைச் சேர்ந்த தாயோபிச்சம் குடும்பத்தால் வழிபடப்படுகிறது. மெய்தி கலாச்சாரத்தின் படி, "நோங்மாய்" வர்க்கம் மைபிஸ் (பூசாரிகள்) சமூகத்தின் நடுநிலையில் உள்ளது. இப்பூசாரிகள் யம்ஜாவோ லைரெம்பி தேவியின் வழிபாட்டைக் கவனித்து வந்தனர்.

கோவில்கள்[தொகு]

யும்ஜாவ் லீமா

யும்ஜாவோ லைரெம்பி கோயில், காங்லா[தொகு]

காங்லாவிற்குள் இருக்கும் "யம்ஜாவோ லைரெம்பி கோவில்" பகாங்பா கோவிலின் இடப்பக்கம் உள்ளது. கட்டமைப்பு ரீதியாக, இரண்டு கோயில்களும் ஒரே கட்டிடக்கலை பாணியைக் கொண்டுள்ளன. கோயிலின் தெற்குச் சுவர் நன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவிலின் மீதமுள்ள மூன்று சுவர்களும் சிறிய அலங்காரங்கள் மட்டுமே கொண்டவை. தெற்குச் சுவரில் லான்சைட்டு வளைவுடன் கூடிய கதவு உள்ளது. ஒரு நிசக்கதவின் இரு பக்கங்களிலும் இரண்டு பொய்க்கதவுகள் உள்ளன. அனைத்து கதவுகளும் (நிச மற்றும் பொய்) சுண்ணாம்புக் கலவையால் கட்டமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் தரைத்தளம் சதுர வடிவில் உள்ளது. அதன் பரப்பளவு 2.43 சதுர மீட்டர் ஆகும்.

இமா இபேம்மா யும்ஜாவோ லைரெம்பி ஷாங்லென்[தொகு]

2011 அக்டோபரில், இம்பால் மாநகரில் உள்ள தங்க்மெய்பாண்ட் நகரில் "இமா இபெம்மா யும்ஜாவோ லைரெம்பி ஷாங்லென்" என்ற பெயரில் லைரெம்பிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டது. [7]

மற்றவை[தொகு]

மற்றவை[தொகு]

யும்ஜாவோ லைரெம்பி நாடக மற்றும் கலாச்சார ஒன்றியம்[தொகு]

"யும்ஜாவோ லைரெம்பி நாடக மற்றும் கலாச்சார ஒன்றியம்" என்பது ஒரு இலாப நோக்கற்ற நாடக தொழிற்சங்கமாகும். இது இம்பாலின் ககேம்பலி ஹுய்ட்ரோம் லைகாயில், 2011ம் ஆண்டில் நிறுவப்பட்டது. [9] [10] [11]

தொடர்புடைய பக்கங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Folk Culture of Manipur - Page 200 - Moirangthem Kirti Singh · 1993
 2. Sharma, H. Surmangol (2006). "Learners' Manipuri-English dictionary.Yumjao". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
 3. Dance-rituals of Manipur, India: An Introduction to "Meitei ... - Page 50 - Louise Lightfoot · 1958
 4. Sharma, H. Surmangol (2006). "Learners' Manipuri-English dictionary.Leima". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
 5. Sharma, H. Surmangol (2006). "Learners' Manipuri-English dictionary.Lairembi". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
 6. Sharma, H. Surmangol (2006). "Learners' Manipuri-English dictionary.Lairemma". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
 7. "Ima Ibemma Yumjao Lairembi Shanglen Inaugurated : 13th oct11 ~ E-Pao! Headlines". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
 8. "Yumjao Lairembi, Arambam". templesofindia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
 9. "Yumjao Lairembi Dramatic And Cultural Union - Saathi Re". www.saathire.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
 10. "SocialPrimes". socialprimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
 11. "Yumjao Lairembi's play wins best production : 03rd feb22 ~ E-Pao! Headlines". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.

நூல் பட்டியல்[தொகு]

 • மணிப்பூரில் தொல்லியல் - பக்கம் 149 - எல். குஞ்சேசுவரி தேவி · 2003
 • வடகிழக்கு இந்திய வரலாற்று சங்கத்தின் செயல்பாடுகள் - வடகிழக்கு இந்திய வரலாற்றுச் சங்கம். அமர்வு · 1988
 • ஓரியண்டல் இந்தோலாஜிக்கல் ஆய்வுகளில் சமீபத்திய ஆராய்ச்சிகள்: மெய்டேயிலாஜி உட்பட - பக்கம் 188 - மொய்ராங்தெம் கீர்த்தி சிங் · 1998
 • மணிப்பூரின் வரலாறு: ஒரு ஆரம்ப காலம் - பக்கம் 263 - வாஹெங்பாம் இபோஹல் சிங் · 1986

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யும்ஜாவ்_லீமா&oldid=3914537" இலிருந்து மீள்விக்கப்பட்டது