யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணம் 34

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணம் 34
விபத்தின் சுருக்கம்
நாள்1936, டிசம்பர் 27
சுருக்கம்விமானிகள் பிழை
இடம்ரைஸ் கேனியன், லாஸ் ஏஞ்சலசு மாவட்டம்,,  கலிபோர்னியா,  ஐக்கிய அமெரிக்கா
பயணிகள்9
ஊழியர்3
உயிரிழப்புகள்12 (அனைவரும்)
தப்பியவர்கள்0
வானூர்தி வகை"போயிங் 247டி"
இயக்கம்யுனைடெட் ஏர்லைன்ஸ்
வானூர்தி பதிவுNC13355
பறப்பு புறப்பாடுசான் பிரான்சிஸ்கோ,  கலிபோர்னியா,  ஐக்கிய அமெரிக்கா
சேருமிடம்லாஸ் ஏஞ்சலசு,  கலிபோர்னியா,  ஐக்கிய அமெரிக்கா

யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணம் 34 (United Airlines Trip 34) எனப்படும் இது, 1936-ஆம் ஆண்டு, டிசம்பர் 27-ஆம் நாளன்று, காலை வழமையாக திட்டமிட்டப்படி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வந்த "போயிங் 247டி" (Boeing 247D) (பதிவு எண்:NC13355) வகையை சார்ந்த வானூர்தி ஒன்று, அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, சான் பிரான்சிஸ்கோ முதன்மை நகரிலிருந்து - அதே மாநிலத்தின் மற்றொரு மாபெரும் நகரமான லாஸ் ஏஞ்சலசுக்கு மேற்கொண்ட பறப்பு ஆகும். அன்றைய பறப்பின்போது காலை 7:38 மணியக்கு விமானிகள் பிழையின் காரணமாக விபத்துக்குள்ளானது. இப்பயணத்தின்போது சேவைப் பணியாளர்கள் மூவர்களும், பயணிகள் 9 பேர்களுமாக மொத்தம் 12 பேர்கள் இருந்துள்ளனர். இணை விமானியின் தவறான காலநிலை கணிப்பால் நிகழ்ந்த இவ்வானூர்தி விபத்தில், பணியாளர்கள் மூவரும், பயணிகள் 12 பேர்களும் (பயணித்த அனைவரும்) கொல்லப்பட்டனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "The Info List - United Airlines Trip 34". www.theinfolist.com ((c) 2014 -2015). பார்த்த நாள் 2016-09-08.