உள்ளடக்கத்துக்குச் செல்

யுனெஸ்கோவின் புலப்படா பண்பாட்டுப் பாரம்பரியங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2018-இல் உலகம் முழுவதும் நாடுகள் வாரியாக படர்ந்திருக்கும் யுனெஸ்கோ அருவமான பண்பாட்டுப் பாரம்பரியங்கள்

யுனெஸ்கோ அருவமான பண்பாட்டுப் பாரம்பரியங்களின் பட்டியல் (UNESCO Intangible Cultural Heritage Lists), உலகம் முழுவதும் உள்ள முக்கியமான அருவமான பணாட்டுப் பாரம்பரியங்களுக்குச் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்வதையும், அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எனும் யுனெஸ்கோ தனது புலப்படா கலாச்சாரப் பாரம்பரியங்களை நிறுவியது.[1] அருவமான பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவால் பட்டியல் வெளியிடப்படுகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக் குழுவின் உறுப்பு நாடுகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[2] உலகம் முழுவதும் உள்ள மனிதகுலத்தின் பல்வேறு வாய்மொழி மற்றும் அருவமான பொக்கிஷங்களின் தொகுப்பின் மூலம், இந்தத் திட்டம் அருவமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தின் மீது கவனத்தை ஈர்க்க முயல்கிறது. யுனெஸ்கோ இந்த அருவமான பாரம்பரியத்தை பண்பாட்டு பன்முகத்தன்மை மற்றும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டின் ஒரு அத்தியாவசியக் கூறாகவும் களஞ்சியமாகவும் அடையாளம் கண்டுள்ளது.[3][4]

2003ஆம் ஆண்டு அருவமான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான மாநாடு நடைமுறைக்கு வந்தபோது, ​​2008 ஆம் ஆண்டில் இந்தப் பட்டியல் நிறுவப்பட்டது.

2010ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தத் திட்டம் மூன்று பட்டியல்களைத் தொகுக்கிறது. மனிதகுலத்தின் அருவமான கலாச்சாரப் பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவப் பட்டியல் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பட்டியலில் கலாச்சாரப் பழக்கவழக்கங்களும் வெளிப்பாடுகளும், இந்த பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தவும், அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. இரண்டாவது பட்டியலில் அவசரப் பாதுகாப்பு தேவைப்படும் அருவமான கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியல் என்பது ஒரு குறுகிய பட்டியலாகும்; இதில் உள்ள கலாச்சாரக் கூறுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க அவசர நடவடிக்கைகள் தேவை என்று சம்பந்தப்பட்ட சமூகங்களும் நாடுகளும் கருதுகின்றன.[5][6] மூன்றாவது பட்டியல் நல்ல பாதுகாப்பு நடைமுறைகளின் பதிவேடு ஆகும்.

2013ஆம் ஆண்டில், அவசரப் பாதுகாப்பு தேவைப்படும் அருவமான கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் நான்கு கூறுகள் சேர்க்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட சமூகங்களின் பங்கேற்புடன் இந்த பாரம்பரியம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதை உறுதிசெய்ய, உறுப்பு நாடுகள் சர்வதேச ஒத்துழைப்பையும் உதவியையும் திரட்ட உதவுகிறது. அவசரப் பாதுகாப்புப் பட்டியலில் தற்போது 35 அருவமான பண்பாட்டுக் கூறுகள் உள்ளது. அரசுகளுக்கிடையேயான குழு, மனிதகுலத்தின் அருவமான கலாச்சாரப் பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவப் பட்டியலிலும் 25 கூறுகளைச் சேர்த்தது. இது அருவமான பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூகங்களின் கலாச்சாரப் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் மரபுகளுக்கும் அறிவாற்றலுக்கும் அங்கீகாரம் வழங்கவும் உதவுகிறது.

மனிதகுலத்தின் அருவமான பண்பாட்டுப் பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவப் பட்டியல்

[தொகு]

இந்தப் பட்டியல் எந்தவொரு சிறப்புத் தரம் அல்லது பிரத்தியேகத் தன்மையையும் குறிப்பிடுவதோ அல்லது அங்கீகரிப்பதோ இல்லை. ஏப்ரல் 2023 நிலவரப்படி, அனைத்துப் பட்டியல்களையும் சேர்த்து மொத்தம் 676 கூறுகள் இருந்தது. இது 140 நாடுகளைச் சேர்ந்தவையாகும்.[7] பட்டியல்களில் சேர்க்கப்பட்ட பண்பாட்டுக் கூறுகள், மனிதகுலத்தின் அருவமான பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடுகளாகக் கருதப்படுகிறது; இது உலக அளவில் அருவமான பாரம்பரியத்திற்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும். மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவப் பட்டியலில், "கலாச்சார பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தவும், அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவும்" அருவமான கலாச்சார பாரம்பரியக் கூறுகள் இடம்பெற்றுள்ளன.[8]

இந்தியா

[தொகு]

இந்தியாவின் உள்ள யுனெஸ்கோ அருவமான பண்பாட்டுப் பாரம்பரியங்களின் பட்டியலின் விவரம் வருமாறு:

புலப்படாத பண்பாட்டுக் கூறுகள் அறிவிக்கப்பட்ட ஆண்டு பட்டியலில் சேர்த்த ஆண்டு class= குறிப்பு}
கூடியாட்டம் 2001 2008 APA [9]
வேதம் ஓதுதல் 2003 2008 [10]
ராம்லீலா 2005 2008 [11]
இரம்மான் திருவிழா 2009 [12]
சாவ் நடனம் 2010 [13]
கல்பேலியா நடனம் 2010 [14]
முடியெட்டு 2010 [15]
பௌத்த நூல்களை ஓதுதல்: லடாக் 2012 [16]
மணிப்பூரி சங்கீர்த்தனை 2013 [17]
பஞ்சாபில் பாரம்பரிய பித்தளை மற்றும் செம்புப் பாத்திரங்கள் செய்தல் 2014 [18]
யோகக் கலை 2016 [19]
கும்பமேளா 2017 [20]
கொல்கத்தா துர்கா பூஜை: 2021 [21]
கர்பா நடனம் 2023 [22]
தீபாவளி 2025 [23]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Compare: "Convention for the Safeguarding of the Intangible Cultural Heritage 2003". UNESCO. Retrieved 2009-09-05. In order to ensure better visibility of the intangible cultural heritage and awareness of its significance, and to encourage dialogue which respects cultural diversity, the Committee, upon the proposal of the States Parties concerned, shall establish, keep up to date and publish a Representative List of the Intangible Cultural Heritage of Humanity.
  2. "Functions of the General Assembly of the States Parties to the 2003 Convention". Retrieved 30 November 2018.
  3. "UNESCO Issues First Ever Proclamation of Masterpieces of the Oral and Intangible Heritage". UNESCO Press. 2001-05-18. Archived from the original on 3 August 2016.
  4. "The Samba of Roda and the Ramlila proclaimed Masterpieces of the Oral and Intangible Heritage of Humanity". UNESCO Press. 2005-11-25. Retrieved 2009-09-05.
  5. "Intangible Heritage Lists". UNESCO Press. Retrieved 2010-11-16.
  6. "Criteria and timetable of inscription on the List of Intangible Cultural Heritage in Need of Urgent Safeguarding". UNESCO Press. Retrieved 2010-11-16.
  7. "UNESCO – Browse the Lists of Intangible Cultural Heritage and the Register of good safeguarding practices". ich.unesco.org.
  8. "Purpose of the Lists of Intangible Cultural Heritage and of the Register of Good Safeguarding Practices". Intangible Heritage. UNESCO.
  9. "Kutiyattam, Sanskrit Theatre". UNESCO Culture Sector. Archived from the original on June 28, 2009. Retrieved 2009-09-07.
  10. "The Tradition of Vedic Chanting". UNESCO Culture Sector. Archived from the original on June 28, 2009. Retrieved 2009-09-07.
  11. "Ramlila – the Traditional Performance of the Ramayana". UNESCO Culture Sector. Archived from the original on June 28, 2009. Retrieved 2009-09-07.
  12. "Ramman, religious festival and ritual theatre of the Garhwal Himalayas, India". UNESCO Culture Sector. Retrieved 2013-01-14.
  13. "Chhau dance". unesco.org. Retrieved 2010-11-18.
  14. "Kalbelia folk songs and dances of Rajasthan". UNESCO Culture Sector. Retrieved 2013-01-14.
  15. "Mudiyettu, ritual theatre and dance drama of Kerala". UNESCO Culture Sector. Retrieved 2013-01-14.
  16. "Buddhist chanting of Ladakh: recitation of sacred Buddhism texts in the trans-Himalayan Ladakh region, Jammu and Kashmir, India". UNESCO Culture Sector. Retrieved 2013-01-14.
  17. "Sankirtana, ritual singing, drumming and dancing of Manipur". UNESCO Culture Sector. Retrieved 2015-07-12.
  18. "Traditional brass and copper craft of utensil making among the Thatheras of Jandiala Guru, Punjab". UNESCO Culture Sector. Retrieved 2015-07-12.
  19. "Yoga". UNESCO Culture Sector. Retrieved 2016-12-02.
  20. "Kumbh Mela". UNESCO Culture Sector. Retrieved 2017-12-07.
  21. "Durga Puja in Kolkata". unesco.org. Retrieved 2021-12-15.
  22. "Garba of Gujarat". UNESCO Culture Sector. Retrieved 2023-12-06.
  23. "Deepavali - UNESCO Intangible Cultural Heritage". ich.unesco.org (in ஆங்கிலம்). Retrieved 2025-12-11.