யாஸீன் மௌலானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கைக்குரிய
ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா றஹிமஹுல்லாஹ்
பட்டம்ஷைகுல் அரப்
பிறப்பு1889
இலங்கை திக்குவல்லை, இலங்கை
இறப்பு1966
இந்தியா தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இலங்கையர்
இனம்இலங்கை முஸ்லிம்
காலம்20-ஆம் நூற்றாண்டு, நவீன காலம்
பிராந்தியம்இலங்கை
பணிஅறிஞர், புத்தக ஆசிரியர், சூபி மகான், கவிஞர்
மதப்பிரிவுஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் (சூஃபி)
சட்டநெறிஷாஃபி மத்ஹப்
சமய நம்பிக்கைஅஷ்அரி
முதன்மை ஆர்வம்அரபு, அர்வி (அரபு-தமிழ்), தமிழ், அகீதா, ஃபிக்ஹ், தஃப்ஸீர், சூஃபியம்
சூபித்துவம் order]]ஹக்கிய்யதுல் காதிரிய்யா
குருஅஷ்செய்கு செய்யித் முஹம்மத் மெளலானா(றஹ்)
செல்வாக்கு செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • கலீல் அவ்ன் மெளலானா, பேராசிரியர் அக்தர் இமாம்

ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா (1307-1386 AH/1889-1966 AD) , (ஆங்கிலம் : Jamaliyya Seyyid Yaseen Mowlana , அரபு: جمالية أسسيد ياسين مولانا ), இருபதாம் நுாற்றாண்டில் இலங்கையில் வாழந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும்,எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார். இவர் இலங்கை மற்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக மறுலமர்ச்சிக்குப் பங்காற்றிய ஒருவராகக் கருதப்படுகின்றார்.[1]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் யாஸீன் மெளலானா அவர்கள் கி.பி.1899 (ஹிஜ்ரி-1386)இல் இலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் திக்குவல்லை நகரில் பிறந்தார். இவர்களது தந்தையார் ஜமாலிய்யா ஸெய்யித் முஹம்மது மௌலானா அல் ஹாஷிமிய் (ரஹ்) ஆவார். இவரது தாயார் செய்யிதா உம்மு ஹபீபா கண்ணே ஆவார். யாஸீன் மெளலானா அவர்களின் பெற்றோர் இறைத்துாதர் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் 32ஆம் வழித்தோண்றலும் மற்றும் அஷ்செய்க் அப்துல் காதர் ஜீலானி(ரஹ்) அவர்களின் 19ஆவது வழித்தோண்றலிலும் வந்தவர்கள் ஆவார். அஷ்செய்கு ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் முஹம்மத் மெளலானா அல் காதிரிய் அவர்கள் ஈராக் நாட்டின் பக்தாத்தை சேரந்தவர்.இவர்கள் ஈராக் இராணுவத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றினார்கள்.இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றதன் பின்னர், முதலில் இந்தியா பின்னர் இலங்கைக்கும் வந்தார்கள். 123வருடங்கள் வாழ்ந்த இவர்கள்,கி.பி.1951இல் மரணமடைந்தார்கள்.இவர்கள் தமிழ்நாட்டின் சம்பைப்பட்டிணத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.[2]

கல்வி[தொகு]

யாஸீன் மெளலானா தனது ஆரம்பக்கல்வியை வெலிகமை புஹாரி மத்ரஸாவிலும்,மாத்தறையில் ஒரு கல்விக்கூடத்திலும் கற்றார். தனது தாயாரின் மறைவுக்கு பின்னர் 11வது வயதில் உயர் கல்விக்காக இந்தியா சென்றார்கள். இந்தியாவின் மேலைப்பாலயத்தில் அமைந்துள்ள மஉனுல் அஸ்பியா கல்விக்கூடத்தில், யூசுப் வலீயுல்லாஹ்(ரஹ்) மற்றும் அஹ்மத் அலி (ரஹ்) ஆகியோரிடம் கற்றார்கள்.மேலும், பலவரக்காட்டில் வாழ்ந்த மார்க்க மேதை அலவிய்யுல் ஜெமீலிய் (ரஹ்) அவர்களிடமும் கற்றார்கள். பின்னர் லாஹுர் இஸ்லாமியக் கல்லுாரியில் உயர்கல்வியைக் கற்று, மெளலவி பாஸில் பட்டம் பெற்றுக்கொண்டார்கள்.[3]பின்னர் தேவ்பந்த் கல்விக்கூடத்தில் கற்று,மெளலவி பாஸிலே அஉலா பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

பிந்திய வாழ்க்கை[தொகு]

யாஸீன் மெளலானா அவர்கள் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த காழி சதகதுல்லாஹில் காஹிரி அவர்களின் இரண்டாவது மகளை திருமணம் முடித்தார்கள். தனது தந்தையின் உத்தரவின் பேரில் இலங்கையின் வெலிகம,வெலிபிட்டியைச் சேரந்த தாஸிம் மெளலானா அவர்களின் முதலாவது மகளையும் இலங்கையிலும் திருமணம் முடித்தார்கள்.தனது தந்தை அஷ்செய்கு ஜமாலிய்யா ஸெய்யித் முஹம்மது மௌலானா அல் ஹாஷிமிய் (ரஹ்) அவர்களிடம் இருந்து காதிரிய்யா,ஷாதுலிய்யா,ஜிப்ரிய்யா,நக்ஷபந்தியா ஆகிய நான்கு தரீக்காகளுக்கும் கிலாபத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.யாஸீன் மெளலானா அவர்கள் இலங்கையிலும்,தமிழ்நாட்டிலும் பல இடங்களுக்குச் சென்று மக்களை இறைவன்பால் அழைத்தார்கள்.இவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் பல தரீக்காக்களைச் சேரந்த மக்கள் தமக்கிடையே பிளவுபட்டிருந்தனர். இந்நிலையில் 'எல்லாம் ஒன்று எல்லோரும் ஒன்று' கருத்தின் அடிப்படையில் மக்களிடையே ஒற்றுமையை போதித்தார்கள்.காதிரிய்யா சூபி வழியமைப்பின் கிளையான 'ஹக்கிய்யதுல் காதிரிய்யா' என்ற சூபி வழியமைப்பை இவர்கள் தோற்றுவித்தார்கள்.

அலுத்காமம் ஜம்மியதுல் உலமாவின் தலைவராகவும்,அகில இலங்கை உலமா போர்ட் தலைவராகவும்,முன்னால் சிலோன் அரசாங்க இலாகாவின் அறபுப் பரீட்சைப் பிரிவின் தலைவராகவும்,அகில வெலிகமாம் முஸ்லிம் லீக் தலைவராகவும்[4] யாஸீன் மெளலனா அவர்கள் செயற்பட்டார்கள். இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றிய முக்கிய ஒருவராகக் கருதப்படுகின்ற அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்களுடன்,யாஸீன் மெளலானா அவர்கள் இணைந்து செயற்பட்டார்கள். அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்கள் 'இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி(Ceylon Muslim Scholarship Fund)' எனும் நிதியத்தை ஆரம்பித்தார். இந்நியத்திற்கு உதவ வேண்டும் என பணம் படைத்தவர்களை ஊக்குவித்தோடு, இந்நிதியத்தை திறம்பட நடாத்திச் செல்வதற்கு அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்களுக்கு, யாஸீன் மெளலான அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.[5] இலங்கை அரசாங்க மத்ரஸா புணர்நிர்மாண சங்கத்தின் (Madrasa Reorganization Committee)தலைவராகவும், ஆலோசகராகவும் கடமையாற்றிய யாஸீன் மெளலானா அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபுப் பிரிவின் அப்போதைய தலைவராக இருந்த பேராசிரியர் எஸ்.ஏ. இமாம் அவர்களுடன் இணைந்து அறபு அறிவின் விருத்திற்கும், அறபுக் கல்லுாரிகளுக்கான பாடத்திட்டத்தை அமைப்பதற்கும் பெரும் பங்காற்றினார்கள்.[6] 1961ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை வானொலியில் ஹலாலும் ஹராமும்,அறபு இலக்கிய வளர்ச்சி மற்றும் மத்ஹபுகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்புகளில் தொடர் சொற்பொழிவுகளை யாஸீன் மெளலானா அவர்கள் நடாத்தி வந்தார்கள்.[7] ''மௌனதுர் ரஹ்மான் பீ தத்ரீஸில் குர்ஆன்'' எனும் பெயரில் குர்ஆன் மதுரஸாக்களை நாட்டின் பல பாகங்களிலும் நிறுவினார்கள்.

மரணம்[தொகு]

ஒவ்வொரு வருடமும் தமது மாணவர்களை (தீட்சதர்களை) சந்திப்பதற்கு யாஸீன் மெளலானா அவர்கள் இந்தியா செல்வது வழக்கமாக இருந்தது. அவ்வகையில் 1966ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்றார்கள். இந்தியாவிற்கு சென்ற வேளையில் யாஸீன் மெளலானா அவர்களின் உடல் நிலை மோசமாக இருந்தது.இந்தியாவில் உள்ள தனது மாணவர்களை சந்தித்திட்டுவிட்டு, திருமுல்லையில் உள்ள தமது வீட்டினை சென்றடைந்தார்கள். யாஸீன் மெளலானா அவர்கள் 1966ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி திருமுல்லையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

பங்களிப்புகள்[தொகு]

யாஸீன் மெளலானா அவர்கள் பல்வேறுபட்ட தலைப்புக்களில்,பல நுால்களை எழுதியுள்ளார்கள்.

  • அறபு-தமிழ் காமூஸ் அகராதி[8]
  • அல் இக்துத் தராரிய் பீ ஷரஹிஸ் ஸஹீஹி லில் இமாமில் புகாரி - புகாரி ஷரீப் ஹதீஸ் நுாலுக்கான விளக்கவுரை (அரபு) நான்கு பாகங்கள்.
  • இரட்சண்ணிய பிரபந்தம் - (றிஸாலாதுல் கௌதிய்யாவுக்கான தமிழாக்கம் )
  • இஹ்ஸானுல் வாஸில் பீ ஷரஹி இன்ஸானுல் காமில் - இன்ஸானுல் காமிலுக்கான விளக்கவுரை (அரபு)
  • யவானிஉ அதுமாருந்நிஉமாஉ - (ஆத்மீக அனுபவங்களை விபரிக்கும் அரபு நூல்)
  • கலிமா விருட்சக் கனிந்த கனி
  • பரீததுன் நளரிய்யா பீ தக்மீஸி கஸீததின் முளரிய்யா - (இமாம் பூஸிறி (ரஹ்) முலரிய்யவுக்கான தக்மீஸ் )
  • ராதிபதுல் ஹக்கிய்யா
  • பக்திப் பா மாலை
  • நப்ஹது மத்ஹில் ஜமீல் அபில் ஹஸன் அலிய்யில் ஜலீல் (அரபுப் பாக்கள்)

மேற்கோள்கள்[தொகு]

  1. ஏகத்துவ, மெய்ஞானசபை (மே 2018). குதுபுகள் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் யாஸீன் மெளலானா அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) (இரண்டாம் பதிப்பு ). மணப்பாறை ரோடு,திருச்சி-620009: அவ்னிய்யா பதிப்பகம். பக். 51-60. 
  2. Shuayb Alim, Dr.Tayka (1996). Arabic, Arwi and Persian in Serandib and Tamil Nadu. Madras: Imamul Arus Trust. பக். 503. 
  3. ஹிஜாஸ், ஹிஸாம் (12 July 2020). "ஈழம் ஈன்றெடுத்த இணையில்லா ஆளுமை ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா". Thinakaran (The Associated Newspapers of Ceylon Ltd). 
  4. "தமிழில் நிகழ்ச்சி நடத்த முஸ்லிம் லீக் தீர்மானம்". Thinakaran. The Associated Newspapers of Ceylon Ltd. 15 February 1952. 
  5. "இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி". Thinakaran. The Associated Newspapers of Ceylon Ltd. 4 October 1946. 
  6. Imam, Dr.Ahthar (Thursday, March 31, 1966). "Mainly About People". Ceylon Daily News (The Associated Newspapers of Ceylon Ltd). 
  7. "இலங்கை வானொலி இன்று". Thinakaran. The Associated Newspapers of Ceylon Ltd. 21 July 1961. 
  8. அப்துஸ்ஸலாம் ஆலிம், என். (SUNDAY SEPTEMBER 25, 2011). "இஸ்லாம் பலாச்சுளையைப் போன்றது". archives.thinakaran.lk. Thinakaran (The Associated Newspapers of Ceylon Ltd). http://archives.thinakaran.lk/Vaaramanjari/2011/09/25/?fn=f1109257&p=1. பார்த்த நாள்: 6 November 2020. 

வெளிஇணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாஸீன்_மௌலானா&oldid=3226248" இலிருந்து மீள்விக்கப்பட்டது