யாழ்ப்பாணம் மறைமாவட்டம் (தென்னிந்தியத் திருச்சபை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாழ்ப்பாணம் மறைமாவட்டம்
Jaffna Diocese of the Church of South India logo.jpg
அமைவிடம்
நாடுஇலங்கை
விவரம்
திருச்சபைஆங்கிலிக்கம்
உருவாக்கம்27 செப்டம்பர் 1947
கதீட்ரல்வட்டுக்கோட்டை புனித தோமையர் பேராலயம்
தற்போதைய தலைமை
யாழ்ப்பாண ஆயர்டானியல் தியாகராஜா
இணையதளம்
csijaffnadiocese.com

யாழ்ப்பாணம் மறைமாவட்டம் (Jaffna Diocese) என்பது இலங்கையின் தென்னிந்தியத் திருச்சபையின் மறைமாவட்டங்களில் ஒன்றாகும். இம்மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் டானியல் தியாகராஜா ஆவார்.

வரலாறு[தொகு]

தென்னிந்தியத் திருச்சபை 1947 செப்டம்பர் 27 அன்று தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதடிசம், பொது ஆட்சிமுறைத் திருச்சபை (பிரெசுபிட்டேரியன்), புராட்டத்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்கள், மற்றும் இந்தியத் திருச்சபைகளின் தெற்கு மறைமாவட்டம், பாக்கித்தான், பர்மா, இலங்கைத் திருச்சபைகளை இணைத்து அமைக்கப்பட்டது.[1][2] தென்னிந்தியத் திருச்சபையின் 22 மறைமாவட்டங்களில் யாழ்ப்பாண மறைமாவட்டமும் ஒன்றாகும். இதன் முதலாவது ஆயராக சபாபதி குலேந்திரன் 1947 அக்டோபர் 10 இல் நியமிக்கப்பட்டார்.[3]

ஆயர்கள்[தொகு]

# ஆயர் பதவிக் காலம்
1வது எஸ். குலேந்திரன்[4] 1947 - 1970
2வது டி. ஜெ. அம்பலவாணர்[5][6] 1971 - 1993
3வது எஸ். ஜெபநேசன்[7][8] 1993 - 2005
4வது டானியல் தியாகராஜா 2006 -

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]