யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரத் தவில்காரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரத் தவில்காரர் (1904 – 1951) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்[தொகு]

காமாட்சி சுந்தரம், யாழ்ப்பாணம் நகரில் நாகலிங்கம் பிள்ளை எனும் தவிற்கலைஞருக்கு மகனாக 1904 ஆம் ஆண்டு பிறந்தார். தனது அண்ணன் சின்னத்துரையிடம் தவில் கற்றுக்கொண்டார்.

இசை வாழ்க்கை[தொகு]

புகழ்பெற்ற நாதசுவரக் கலைஞர்களான அண்ணாசாமிப் பிள்ளை, சாவகச்சேரி அப்புலிங்கம் – சண்முகம், நல்லூர் முருகய்யா பிள்ளை, திருச்சேறை முத்து கிருஷ்ண பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை, திருவீழிமிழலை சகோதரர்கள் ஆகியோருக்கு இவர் தவில் வாசித்துள்ளார்.

இணுவில் சின்னத்தம்பிப் பிள்ளை, யாழ்ப்பாணம் வி. தெட்சணாமூர்த்தி ஆகியோர் காமாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர்கள் ஆவர்.

மறைவு[தொகு]

1951 ஆம் ஆண்டு தனது 47 ஆம் வயதில் காலமானார்.

உசாத்துணை[தொகு]