யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டுக் கழகம்
சிறுவர் செயற்பாட்டுக் கழகம் யாழ் இந்துக்கல்லூரியில் இயங்கிவரும் கழகங்களில் ஒன்றாகும். இது இக்கல்லூரியின் மாணவர்களின் நன்மை கருதி பல செயற்பாடுகளை செய்து வருகிறது.
வரலாறு
[தொகு]இக் கழகம் 2000ம் ஆண்டு ஒக்டோபர் 1ம் திகதி அன்று சிறுவர் உள மேம்பாடு கருதி அதிபர் ஏ. சிறிகுமரன் (1996 - 2005) காலத்தில் அல்பிரட் ஜெனீவா என்பவரால் உருவாக்கப்பட்டது. பொறுப்பாசிரியராக திருமதி. சா . அருந்தவபாலன் இருந்தார். இக்கழகத்தின் செயற்பாடாக வலயமட்ட பொதுஅறிவுப் பரீட்சை இவரது காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நா. கு . மகிழ்ச்சிகரன் 2012 இலிருந்து பொறுப்பாசிரியராக உள்ளார். 2009 ஆம் ஆண்டு இக்கழகத்தின் 10வது ஆண்டு இதழ் “கனிவு“ வெளியிடப்பட்டது. 2011-இல் “சங்கமம்“ இறுவட்டு பாடல்கள் வெளியிடப்பட்டது. 2012-இல் ”கண்ணீர் பூக்கள்” எனும் கவிதை இக் கழக அநுசரணையில் வெளியானது. 2013ம் ஆண்டில் இக்கழகத்தின் முகப்புத்தகம் (facebook) மற்றும் ருவிற்றர் (twitter) கணக்குகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
சிறப்பு
[தொகு]யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிறந்த கழகமாக 2009ம் ஆண்டு இக் கழகம் தெரிவு செய்யப்பட்டது. 2013-இல் பாடசாலை குமாரசுவாமி பூங்கா, சிரமதான நடவடிக்கை மூலம் துப்பரவு செய்யப்பட்டது. 2013-இல் கழக அங்கத்தவர்களுக்கு தனிப்பட்ட சீருடை உருவாக்கப்பட்டுள்ளது. 2013-இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூலகத்துக்கு புத்தகங்கள் சேகரித்து வழங்கப்பட்டது. இதைவிட வருடாந்தம் இப் பாடசாலை தவிர 5 பாடசாலைகளில் பொதுஅறிவுப் பரீட்சை மற்றும் கவிதை, கட்டுரை, பேச்சு, குறுநாடகம், சித்திரம் போன்ற போட்டிகளும் நடாத்தி பரிசு வழங்கி வருவதும் குறிப்பிடத் தக்கது. இவை வருடாந்த சிறுவர் தின நிகழ்வின் போது வழங்கப்படுகின்றன.
வெளியிணைப்புகள்
[தொகு]முகநூல் பக்கம்
முகநூல் பக்கம்
டுவிட்டர் பக்கம்
சிறுவர் செயற்பாட்டுக் கழகம்-blogger