யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
சுகாதார அமைச்சு, இலங்கை | |
---|---|
அமைவிடம் | ஆசுபத்திரி வீதி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம், இலங்கை |
ஆள்கூறுகள் | 9°39′57.50″N 80°00′52.50″E / 9.6659722°N 80.0145833°E |
மருத்துவப்பணி | பொது |
நிதி மூலதனம் | அரசு |
வகை | கல்வி |
இணைப்புப் பல்கலைக்கழகம் | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் |
அவசரப் பிரிவு | ஆம் |
படுக்கைகள் | 1,228 |
பட்டியல்கள் |
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (Jaffna Teaching Hospital) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையாகும். இது வடக்கு மாகாணத்தின் முன்னணி மருத்துவமனையாகவும், கொழும்பில் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும், மாகாணத்தின் ஒரே மருத்துவமனையாகவும் உள்ளது. இந்த மருத்துவமனை வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரே போதனா மருத்துவமனையாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான பிரதான மருத்துவ கற்பித்தல் வசதி இந்த மருத்துனையில் உள்ளது.[1] 2010 நிலவரப்படி இது 1,228 படுக்கைகளைக் கொண்டிருந்தது.[2]
பொது மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை பராமரிப்புடன், இதயவியல், நீரிழிவு நோய், பல் மருத்துவம், தோல் மருத்துவம், குடும்பக் கட்டுப்பாடு, மகளிர் மருத்துவம், நரம்பியல், மகப்பேறியல் (முந்தைய-நேட்டல்), புற்றுநோயியல், கண் மருத்துவம், முடவியல், (ஈ.என்.டி), குழந்தை மருத்துவம் மற்றும் உளநோய் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையான சுகாதார சேவைகளை மருத்துவமனை வழங்குகிறது.[3] இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, அதி-தீவிர சிகிச்சைப் பிரிவு, முன்கூட்டிய குழந்தை பிரிவு, ஒரு ஆரம்ப சுகாதார பிரிவு, ஒரு நோயியல் ஆய்வகம் மற்றும் இரத்த வங்கி சேவை ஆகியவை உள்ளன.[1]
2010 ஆம் ஆண்டில் மருத்துவமனையில் 111,129 நோயாளிகள் சேர்க்கை, 268,922 வெளி நோயாளிகள் மற்றும் 476,616 கிளினிக் வருகைகள் இருந்தன.[3]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Teaching Hospital". யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். Archived from the original on 2011-10-02.
- ↑ "Under Line Ministry Beds 2010" (PDF). Ministry of Health, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-01-23.
- ↑ 3.0 3.1 "2010 Statistics" (PDF). Jaffna Regional Directorate of Health Services. Archived from the original (PDF) on 2012-03-31.