யாழ்ப்பாணத் தமிழ்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
யாழ்ப்பாணத் தமிழ் என்பது இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் வழக்கில் உள்ள தமிழைக் குறிக்கும். இது பேச்சு வழக்கு எழுத்து வழக்கு என்னும் இரண்டையும் உள்ளடக்கியது. இது தமிழ் மொழியின் பல்வேறு வட்டார வழக்குகளுள் ஒன்று. சில வேளைகளில் யாழ்ப்பாணத் தமிழையே இலங்கைத் தமிழ் என்று சிலர் கருதி வந்திருந்தாலும், இது இலங்கையில் வழங்கும் பல்வேறு வட்டார வழக்குகளுள் ஒன்று மட்டுமே. அத்துடன், யாழ்ப்பாணப் பகுதிக்கு உள்ளேயே பேச்சு வழக்கில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. தீவுப்பகுதியில் பேசப்படும் தமிழை இதற்கு ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.