யாழூர் துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாழூர் துரை
YaloorDurai.JPG
பிறப்புஆறுமுகம் தர்மலிங்கம் (ஐயாத்துரை)
அக்டோபர் 15, 1946
இறப்புமார்ச்சு 21, 2012
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்♂ஆறுமுகம் ♀சிவகாமி

ஆறுமுகம் தர்மலிங்கம் (ஐயாத்துரை) (அக்டோபர் 15, 1946 - மார்ச்சு 21, 2012) யாழூர் துரை என்ற புனைபெயரில் எழுதி வந்த ஈழத்து எழுத்தாளரும், நாடக இயக்குனருமாவார். யாழ்ப்பாண மண்ணை மையப்படுத்திப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். "கண்ணீர்த் தேசம்" என்ற சிறுகதைத் தொகுப்பை இவர் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆறுமுகம்-சிவகாமி ஆகியோருக்குப் பிறந்தவர். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலையின் பத்திரிகை விற்பனைப்பகுதியை நீண்ட காலமாக இயக்கி வந்தவர். புலம்பெயர்ந்து தமிழ்நாடு சென்னையில் வசித்து வந்தவர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழூர்_துரை&oldid=2716322" இருந்து மீள்விக்கப்பட்டது