யாழன் ஆதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். பல்வேறு இதழ்களில் படைப்புகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. இவருடைய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் இவருடைய செவிப்பறை நூலை பாடப்புத்தகமாக வைத்திருந்தது. கவிதை மட்டுமில்லாமல் அனைத்து இலக்கிய வகைமைகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கின்றது. புதிய தலித் எழுத்தாளர்களைப் பற்றி தலித் முரசில் மாற்றுப் பாதை என்னும் கட்டுரைத்தொடரை எழுதி வருகிறார். சாம்பல் என்னும் குறும்படத்தையும் இவர் இயக்கி இருக்கின்றார்.

இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழன்_ஆதி&oldid=1430790" இருந்து மீள்விக்கப்பட்டது