உள்ளடக்கத்துக்குச் செல்

யாருகலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாருகலா
வகைப்பாடுAdivasi
மதங்கள்இந்து
மொழிகள்யெருக்குல மொழி, தெலுங்கு
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா
மக்கள் தொகை519,337
உட்பிரிவுகள்5

யாருகலா அல்லது எருகலா அல்லது எருகுல (Yerukala or Erukala or Erukula) என்பவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாழும் பழங்குடி சமூக குழுவினர் ஆவர்.[1] 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எருகலா பழங்குடியினரின் மக்கள் தொகை 519,337 ஆகும். எருகுலாவின் மொத்த எழுத்தறிவு விகிதம் 48.12% ஆகும். பெரும்பாலானவர்கள் தெலங்காணா மாவட்டங்களில் சிறுபான்மையினருடன் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் இராயலசீமாவில் வாழ்கின்றனர். இவர்களின் தாய் மொழி தமிழ் அடிப்படையிலான யெருக்குல ஆகும். ஆனால் பெரும்பாலானவர்கள் தெலுங்கிற்கு மாறிவிட்டனர். இவர்கள் வழக்கமான குற்றவாளிகள் எனப் பிரித்தானிய ஆதாரங்களினால் அவதூறு செய்யப்பட்டனர்.[2] இதனால் குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் இவர்கள் வைக்கப்பட்டனர். நாடோடி வாழ்க்கை வாழ்பவர்களாக இவர்கள் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chaudhuri, Sarit Kumar; Chaudhuri, Sucheta Sen, eds. (2005). Primitive tribes in contemporary India: concept, ethnography and demography. Vol. 2. Mittal Publications. p. 263. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8324-026-7.
  2. Castes and Tribes of Southern India.
  3. "The agony of Stuartpuram". 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாருகலா&oldid=3578501" இலிருந்து மீள்விக்கப்பட்டது