யாமின் அகுமதுசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முகமது யாமின் அகுமதுசாய் (Mohammad Yamin Ahmadzai (பிறப்பு: 25 சூலை,1992) இவர் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்துவீச்சாளர் ஆவார். இவர் லக்மான் மாகாணத்தில் பிறந்தவர் ஆவார். 2018 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கான் அணியின் முதல் தேர்வுத் துடுப்பட்டப் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் ஆப்கானித்தான் சார்பாக முதல் இலக்கினை இவர் கைப்பற்றினார்.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

2010 ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கிண்ணத் துடுப்பாட்டக் கோப்பையில் இவர் விளையாடினார். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆப்கானித்தான் அணியில் இவர் இடம் பெற்றார். மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட ஆங்காங் துடுப்பாட்ட அணி மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பப்புவா நியூ அணிக்கு எதிராக நடைபெற்ற போடியில் இவர் விளையாடினார்.[1] மேலும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் அணியினை வெற்றி பெற உதவினார்.[2]

2011 ஆம் ஆண்டில் ஃபைசல் பேங்க் இருபது20 தொடரில் ஆப்கான் சீட்டாஸ் அணி சார்பாக விளையாடினார். இந்தத் தொடரில் முல்தான் டைகர்ஸ் அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் அறிமுகமானார்.இந்தப் போட்டியில் ஒரு ஓவர்கள் வீசி 17 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.பின் மட்டையாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஒரு ஓட்டங்களை எடுத்தார்.[3]

மேலும் இவர் குவைத் இ அசாம் தொடரில் ஹபிப் பேங்க் லிமிடட் எனும் பாக்கித்தான் அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[4]

2015 ஆம் ஆண்டில் ஓமன் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20தொடரில் இவர் அறிமுகமானார்.[5] 2015 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.டிசம்பர் 25 இல் ஷார்ஜாவில் நடைபெற்ற முதல் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[6]

தேர்வு போட்டிகள்[தொகு]

2018 ஆம் ஆண்டில் வங்காளதேச துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.சூன் 14 இல் பெங்களூருவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் துவக்க ஓவர்களை வீசிய இவர் 19 ஓவர்களை வீசி 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 7 ஓவர்களை மெய்டனாக வீசினார். ஷிகர் தவான், கே. எல். ராகுல் மற்றும் ரவிச்சந்திரன் அசுவின் ஆகியோரின் இலக்கினைக் கைப்பற்றினார்.[7] மட்டையாட்டத்தில் 9 பந்துகளைச் சந்தித்த இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அசுவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 15 பந்துகளில் 1 ஓட்டம் எடுத்து இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 226 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[8][9]

சான்றுகள்[தொகு]

  1. "Youth One-Day International Matches played by Yamin Ahmadzai". CricketArchive. பார்த்த நாள் 30 September 2011.
  2. "Other matches played by Yamin Ahmadzai". CricketArchive. பார்த்த நாள் 30 September 2011.
  3. "Player profile: Yamin Ahmadzai". ESPNcricinfo. பார்த்த நாள் 30 September 2011.
  4. "Quaid-e-Azam Trophy, Pool A: Karachi Blues v Habib Bank Limited at Karachi, Oct 15-18, 2016". ESPN Cricinfo. பார்த்த நாள் 15 October 2016.
  5. "Afghanistan tour of United Arab Emirates, 1st T20I: Afghanistan v Oman at Abu Dhabi, Nov 29, 2015". ESPN Cricinfo. பார்த்த நாள் 29 November 2015.
  6. "Afghanistan tour of United Arab Emirates, 1st ODI: Afghanistan v Zimbabwe at Sharjah, Dec 25, 2015". ESPN Cricinfo. பார்த்த நாள் 25 December 2015.
  7. "Afghanistan take historic first Test wicket". Australian Associated Press. பார்த்த நாள் 14 June 2018.
  8. "Afghanistan pick four spinners for inaugural Test". ESPN Cricinfo. பார்த்த நாள் 29 May 2018.
  9. "Afghanistan Squads for T20I Bangladesh Series and on-eoff India Test Announced". Afghanistan Cricket Board. பார்த்த நாள் 29 May 2018.

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=யாமின்_அகுமதுசாய்&oldid=2721599" இருந்து மீள்விக்கப்பட்டது