யாப்பென் மனுக்கோடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாப்பென் மனுக்கோடியா (Manucodia jobiensis) என்பது நடுத்தர அளவிலான, அதாவது 34 செமீ நீளம் கொண்ட, பசிய நீலம், கறுப்பு மற்றும் ஊதா நிறம் கொண்டதும் உருவமைப்பில் காகத்தைப் போன்றும் காணப்படும் சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இதன் கண்கள் செந்நிறமாயும், மார்புக்கு மேலாயும் கழுத்திலும் காணப்படும் இறகுகள் ஓரளவு வெடித்துப் பிரிந்தவை போன்றும் காணப்படும். இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகள் உருவமைப்பில் ஒத்திருப்பினும், பெண் பறவையானது ஆண் பறவையை விடச் சற்றுச் சிறிதாயும் நிறம் மங்கியதாயும் காணப்படும்.

யாப்பென் மனுக்கோடியாப் பறவை இனமானது மென் தோள் மனுக்கோடியா இனத்தை உருவமைப்பில் ஒத்திருப்பினும் ஒப்பீட்டளவிற் சிறியதான வால் மற்றும் கழுத்து இறகுகள் என்பவற்றின் மூலம் அதிலிருந்து வேறுபடுத்தி அறியப்படுகிறது. ஏனைய மனுக்கோடியாப் பறவைகளைப் போன்றே இதுவும் தனியொரு பறவையுடன் மாத்திரமே கலவியில் ஈடுபடுவதாகும்.

யாப்பென் மனுக்கோடியாக்கள் இந்தோனேசியாவின் யாப்பென் தீவு மற்றும் வடக்கு நியூகினி என்பவற்றின் தாழ்நிலக் காடுகளிற் பரவிக் காணப்படுகின்றன. இவ்வினம் அங்கு காணப்படும் மிகப் பொதுவான பறவையினங்களில் ஒன்றாகும். இதன் உணவுப் பழக்கத்தில் முதன்மையாக பழங்கள், பூச்சியினங்கள் என்பன அடங்குகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளித் தொடுப்புகள்[தொகு]

  1. [[பன்னாட்டு பறவை வாழ்க்கை]] (2012). "Manucodia jobiensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாப்பென்_மனுக்கோடியா&oldid=3477071" இலிருந்து மீள்விக்கப்பட்டது