யானை கவுனி

ஆள்கூறுகள்: 13°05′28.8″N 80°16′42.5″E / 13.091333°N 80.278472°E / 13.091333; 80.278472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யானை கவுனி
Elephant Gate

யானை கவுனி
புறநகர்ப் பகுதி
யானை கவுனி Elephant Gate is located in சென்னை
யானை கவுனி Elephant Gate
யானை கவுனி
Elephant Gate
யானை கவுனி, சென்னை
ஆள்கூறுகள்: 13°05′28.8″N 80°16′42.5″E / 13.091333°N 80.278472°E / 13.091333; 80.278472
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்33 m (108 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600079
தொலைபேசி குறியீடு+9144xxxxxxxx
அருகிலுள்ள பகுதிகள்பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், மண்ணடி, பேசின் பாலம் மற்றும் கொண்டித்தோப்பு
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
இணையதளம்https://chennaicorporation.gov.in

யானை கவுனி (Elephant Gate) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில்,[1] 13°05′28.8″N 80°16′42.5″E / 13.091333°N 80.278472°E / 13.091333; 80.278472 (அதாவது, 13.091345°N, 80.278475°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், மண்ணடி, பேசின் பாலம் மற்றும் கொண்டித்தோப்பு ஆகியவை யானை கவுனி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காமராசர், பொதுக்கூட்டங்களில் பேசிய இடங்களில் யானை கவுனி பகுதியும் அடங்கும்.[2] யானை கவுனி பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது.[3]

89 வருடங்கள் பழமையான 'யானை கவுனி பாலம்' என்ற பெயரில் ஒரு பாலம், பேசின் பாலம் தொடருந்து நிலையம் மற்றும் சென்னை மத்திய தொடருந்து நிலையம் இவற்றிற்கு இடையே, இரயில்வே தண்டவாளங்களுக்கு மேல் அமைந்திருந்தது.[4] பரபரப்பான நேரங்களில், சுமார் 10,000 வாகனங்கள் இப்பாலத்தைக் கடந்து செல்லும். இதனால் பலவீனமடைந்த, போக்குவரத்தை சீர் செய்ய, இந்தப் பாலம் இடிக்கப்பட்டது.[5] சுமார் 156.12 மீட்டர் நீளத்தில், புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.[6][7][8] பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தென்னக இரயில்வே, சென்னை கோட்டம் இணைந்து, இப்பாலத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றன.[9] சுமார் ரூ.30 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இப்பாலத்தின் செலவுகள், இவ்விரண்டு நிறுவனங்களாலும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.[10]

அரங்கநாதசுவாமி தேவஸ்தானம் கோயில், வைகுண்டப் பெருமாள் மற்றும் தருமராஜர் தேவஸ்தானம் கோயில் ஆகியவை யானை கவுனி பகுதியிலுள்ள முக்கிய கோயில்களாகும்.[11]

திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்காக, சென்னையின் சௌகார்பேட்டையிலுள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலிலிருந்து நிழல் தரும் அலங்காரக் குடைகள் இரண்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சமர்ப்பிக்கப்படும். இதற்காகப் பல குடைகள் தயாரிக்கப்பட்டு, சென்னையிலிருந்து திருப்பதி வழிநெடுகிலும் சில முக்கியமான கோயில்களுக்கு சில குடைகள் தானமாகக் கொடுக்கப்பட்டு, இரண்டு குடைகள் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு வழங்கப்படும். அவ்வாறு அலங்காரக் குடைகள் எடுத்துச் செல்லப்படும் போது, யானை கவுனி பகுதியைத் தாண்டும் நிகழ்வை பல பகுதிகளிலிருந்தும் மக்களில் பெரும்பாலானோர் 'குடை (யானை) கவுனி தாண்டி விட்டதா?' என்ற கேள்வியுடன் தெரிந்து கொள்வது இன்றும் வாடிக்கையாக உள்ளது.[12]

References[தொகு]

  1. முருகேசன், கு; முருகேசன், கே; Subramanyam, C. S. (2011) (in ta). சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு: வாழ்வும் சிந்தனையும். Bharathi Puthakalayam. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89909-68-0. https://books.google.co.in/books?id=YtX2nkRS6TEC&pg=PA219&dq=%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%2588+%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AE%25BF&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwjWm5yh-8n8AhUB8zgGHRjXBxcQ6AF6BAgEEAM#v=onepage&q=%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%2588%2520%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AE%25BF&f=false. 
  2. (in ta) Vaazhvai Sollitharum Nooru Nigazhvugal- Incidents Those Teach Life- in Tamil. Bharathi Puthakalayam. https://books.google.co.in/books?id=4FaufdCrFJUC&pg=PA50&dq=%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%2588+%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AE%25BF&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwjWm5yh-8n8AhUB8zgGHRjXBxcQ6AF6BAgJEAM#v=onepage&q=%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%2588%2520%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AE%25BF&f=false. 
  3. "Arulmigu Ekambareswarar Temple, Poonga Nagar, Chennai - 600003, Chennai District [TM000169].,Ekambareswarar,Ekambareswarar,Kamakshiamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
  4. "Live Chennai: Know the latest regarding the 89 year old Elephant gate bridge in Chennai?,Know the latest regarding the 89 year old Elephant gate bridge in Chennai?". www.livechennai.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
  5. "Post Elephant Gate Bridge demolition, Basin Bridge witnesses severe traffic menace". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-01-14.
  6. Special Correspondent (2022-07-29). "Elephant Gate bridge to be ready in three months". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-14.
  7. Madhavan, D. (2021-04-17). "New bridge at Elephant Gate coming up at a brisk pace". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
  8. Staff Reporter (2022-01-19). "Elephant Gate bridge work to get over by July, says Minister". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
  9. Radhakrishnan, Swedha. "Elephant Gate bridge work forces motorists to take long route". DT next (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
  10. மாலை மலர் (2020-04-29). "யானை கவுனி பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
  11. "District Wise Temple list". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
  12. Correspondent, Vikatan. "மெட்ராஸ் வரலாறு : யானை கவுனியில் கடன் வாங்கிய திருப்பதி ஏழுமையான் - சுவார்ஸ்ய கதை". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யானை_கவுனி&oldid=3644355" இலிருந்து மீள்விக்கப்பட்டது