யானைப்பாகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஷ்ரிஹ் அல்-அக்வாமில் இருந்து (1825) யானையை செலுத்திச் செல்லும் இந்தியாவின் யானைப்பாகனின் படம்.
சாம்போனியட் ரிசர்வ், ஆச்சே
தாய்லாந்தின் யானை இயற்கை பூங்காவில் இளம் யானையுடன் யானைப்பாகன்
ஒரு இளம் யானை மற்றும் அதன் யானைப்பாகன், கேரளம், இந்தியா

யானைப்பாகன் (Mahout) என்பவர் யானையை பராமரித்து, சவாரி செய்து, தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பயிற்சியாளர் ஆவார். [1] பழங்காலத்திலிருந்தே குமுகாயம் மற்றும் போர்ப்படை பயன்பாட்டிற்காக யானைப்பாகன்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பாரம்பரியமாக, யானைகளை பராமரிப்பதில் பல தலைமுறை அனுபவமுள்ள இனக்குழுக்களில் இருந்து யானைப்பாகன்கள் வருகின்றனர். யானைப்பாகன் தனது யானையை அதன் பணி வாழ்க்கை அல்லது சேவை காலம் முழுவதும் அதனுடன் இருப்பார். [2] யானைப் பாகன்கள் சிலசமயம் தங்கள் யானையின் மீது வைத்துள்ள அம்பாரியில் சவாரி செய்வார்கள்.

சொற்பிறப்பியல்[தொகு]

யானைப் பாகனைக் குறிப்பிடும் மாவுத்தன் என்ற சொல்லானது இந்தி சொற்களான மஹவுத் (महौत) மற்றும் மஹாவத் (महावत) ஆகியவற்றிலிருந்து உருவானது. மேலும் அது முதலில் சமசுகிருத சொல்லான மகாமாத்திராவிலிருந்து (महामात्र) உருவானது.

மற்றொரு சொல் கார்னாக் அல்லது கோர்னாக் ஆகும் இது போர்த்துக்கேயம் வழியாக பல ஐரோப்பிய மொழிகளில் நுழைந்தது. இந்த சொல்லானது கரி (யானை) நாயகா (தலைவன்) என்ற இரு சொற்களின் சேர்கையான சமசுகிருத சொல்லான கரிநாயகா என்பதிலிருந்து வந்தது. தெலுங்கில் யானைகளைப் பராமரிப்பவரை மாவடி என்பர் ; இந்த சொல்லும் சமசுகிருதத்தில் இருந்து வந்தது. தமிழில் பயன்படுத்தப்படும் சொல்லான பாகன் என்பதற்கு "யானையை பராமரிப்பவர்" என்று பொருளாகும். மேலும் இதற்கு சிங்களத்தில் குரவநாயக்க, மலையாளத்தில் பாப்பான் என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பர்மாவில், இத் தொழில் u-si என்று அழைக்கப்படுகிறது; தாய்லாந்தில் குவான்-சாங் (ควาญช้าง), வியட்நாமில் quản tượng என்று அழைக்கப்படுகிறது.

உபகரணங்கள்[தொகு]

படம் 6. மொகலாயப் பேரரசில் யானை சவாரிகளில் பயன்படுத்தப்பட்ட பழங்கால எஃகு அங்குசம்
காஞ்சிபுரத்தில் உள்ள கோவில் யானையை கழுவும் பாகன்

யானைகளைப் பயிற்றுவிப்பதற்கும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் கருவிகளாக சங்களிக்கள், அங்குசம் ஆகியவை யானைப்பாகன்களால் பயன்படுத்தப்படும் பொதுவான கருவிகளாகும். [3]

இந்தியாவில், குறிப்பாக கேரளத்தில், யானைகளைக் கட்டுப்படுத்த பாகன்கள் மூன்று வகையான சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். தோட்டி (கொக்கி), இது 3.5 அடி நீளம் மற்றும் சுமார் 1 அங்குல தடிமன்; வலிய கோல் (நீண்ட கோல்), இது 10.5 அடி நீளமும், சுமார் 1 அங்குலம் தடிமன்; மற்றும் சிறு கோல் ஆகியவை ஆகும். [4]

சமூகம்[தொகு]

யானைகளும், அதனால் பாகன்களும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நீண்டகாலமாக ஒருங்கிணைந்தவையாகும். அரசின் அமைச்சர்களின் வேண்டுகோளுக்கிணங்க விலங்குகள் வழங்கப்படுகின்றன, சில சமயங்களில் அன்பளிப்பாகவும் வழங்கப்படுகின்றன. பாரம்பரிய தொழில்களுக்கு மேலதிகமாக, இன்று பாகன்கள் பல நாடுகளில் வனத்துறை சேவைகள் மற்றும் மரம் வெட்டும் தொழில், சுற்றுலா துறையில் பணிபுரிகின்றனர்.

கலாச்சாரம்[தொகு]

சுற்றுலா பயணிகளுக்கு யானை சவாரி வழங்கும் பாகன்

சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையில் 2018 ஆம் ஆண்டு வரை "யானைகள் வேலை மற்றும் விளையாட்டு" என்ற நிகழ்ச்சி இடம்பெற்றது. அங்கு யானைகளை பராமரிப்பாளர்கள் "மாவுத்ததர்" என்று குறிப்பிடப்பட்டனர். மேலும் தென்கிழக்கு ஆசியாவில் யானைகள் பாரம் சுமக்கும் விலங்குகளாக எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை விளக்கினர். யானைகளுக்கான வாய்மொழி கட்டளைகள் யாவும் இலங்கையின் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றான சிங்களத்தில் உள்ளன.

1952 ஆம் ஆண்டய ஜீன் கெல்லி திரைப்படமான சிங்கின் இன் தி ரெயினின் "மழை நடனம்" வரிசையின் பின்னணியில் "யானைப்பாகன்" சிகரெட்டுகளை விளம்பரப்படுத்தும் ஒரு கடை காட்சி முக்கியமாக இடம்பெற்றது. ஜோன் அர்மாட்ராடிங்கின் " டிராப் தி பைலட் " பாடலின் வரிகளிலும் "மாவுத்" என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

ஜார்ஜ் ஆர்வெல்லின் ஒரு கட்டுரையான " சூட்டிங் ஆன் எலிபெண்ட் " என்ற கட்டுரையில் யானைக்கும் அதன் பாகனுக்கும் உள்ள உறவு விவாதிக்கப்படுகிறது. [5]

குறிப்புகள்[தொகு]

 

  1. "Mahout". Absolute Elephant Information Encyclopedia. Archived from the original on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
  2. The Elephant Tourism Business. https://books.google.com/books?id=XTELEAAAQBAJ&pg=PR28&dq=Mahout,+a+Keeper+and+Driver+of+an+Elephant&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&sa=X&ved=2ahUKEwiejPGH-MHyAhVWFVkFHcjJB6YQ6AF6BAgHEAM. 
  3. Fowler, Mikota, eds. Biology, Medicine and Surgery of Elephants. John Wiley & Sons, 2008, p. 54.
  4. Ajitkumar, Anil, Alex, eds., Healthcare Management of Captive Asian Elephants பரணிடப்பட்டது 2015-06-30 at the வந்தவழி இயந்திரம் Kerala Agricultural University, 2009, p. 165
  5. Orwell, George. Collini, Stefan. ed (in en). Selected Essays. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-880417-8. https://books.google.com/books?id=VxUOEAAAQBAJ&pg=PA4. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைப்பாகன்&oldid=3351617" இலிருந்து மீள்விக்கப்பட்டது