உள்ளடக்கத்துக்குச் செல்

யானர் டாக்

ஆள்கூறுகள்: 40°30′6.6″N 49°53′28.51″E / 40.501833°N 49.8912528°E / 40.501833; 49.8912528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யானர் டாக்
இரவில் யானர் டாக்
இரவில் யானர் டாக்
யானர் டாக் is located in அசர்பைஜான்
யானர் டாக்
யானர் டாக்
ஆள்கூறுகள்: 40°30′6.6″N 49°53′28.51″E / 40.501833°N 49.8912528°E / 40.501833; 49.8912528
நாடு அசர்பைஜான்

யானார் டாக் (Yanar Dagh, அசர்பைஜான்: Yanar Dağ, மொ.'burning mountain') என்பது இயற்கை எரிவளியால் உண்டான தீ ஆகும். இது அஜர்பைஜானின் தலைநகரான பக்கூவிற்கு அருகில் அப்சரோன் தீபகற்பத்தில் உள்ள ஒரு மலைப்பாதையில் தொடர்ச்சியாக எரிந்து வரும் நெருப்பு ஆகும். இந்தத் தீப்பிழம்பின் காரணமாக அசர்பைசான் 'நெருப்பு நிலம்' என்று அழைக்கப்படுகிறது. மெல்லிய நுண்துளைகள் உள்ள மணல் அடுக்கிலிருந்து 3 மீட்டர்கள் (9.8 அடி) உயரத்திற்குத் தீப்ப்ழம்புகள் காற்றில் பறக்கின்றன.[1] நிர்வாக ரீதியாக, யானார் டாக அஜர்பைஜானின் அப்ஷெரோன் மாவட்டத்தைச் சேர்ந்தது.

புதைசேற்று எரிமலைகள் போலல்லாமல், யானார் டாக் தீச் சுடர் மிகவும் சீராக எரிகிறது, ஏனெனில் இங்கு நிலத்தடியிலிருந்து நிலையாக வாயு வெளியேற்றம் உள்ளது.[2] 1950 களில் ஒரு மேய்ப்பனால் தற்செயலாக தீயிட்ட போது யனார் டாக் சுடர் கவனிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.[2] சேறோ அல்லது திரவக் கசிவோ இல்லை. இதன் அருகிலுள்ள கோபுஸ்தான் அல்லது கோபஸ்தானின் சேற்று எரிமலைகளிலிருந்து இது வேறுபட்டதாக உள்ளது.

இது அஜர்பைஜான் அரசு சுற்றுலாமுகமையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

கிமு முதல் ஆயிரமாண்டில், மனிதர்களுக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திக்கு இடையிலான இணைப்பாக ஜோராஸ்ட்ரிய சமயத்தில் நெருப்பு ஒரு முதன்மை இடத்தை வகித்தது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mud Volcanoes: Land of fire". Azerbaijan International. பார்க்கப்பட்ட நாள் November 23, 2010.
  2. 2.0 2.1 Mark Elliot. "Azerbaijan with Georgia".
  3. O'Hare, Maureen (2018-10-31). "The fire that's been burning for 4,000 years". CNN Travel (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானர்_டாக்&oldid=4090518" இலிருந்து மீள்விக்கப்பட்டது