யாந்தபு
Appearance
யாந்தபு (Yandabo) மியான்மர் நாட்டின் நடுவில், ஐராவதி ஆற்றின்[1]கரையில் அமைந்துள்ளது. பிரித்தானியர்களுக்கும், பர்மியர்களுக்கு இடையே நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் (1824 - 1826) முடிவில், யாந்தபு கிராமத்தில் வைத்து, பிரித்தானிய இந்திய அரசும், பர்மிய அரசும், 24 பிப்ரவரி1826 அன்று போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டதால், அவ்வுடன்படிக்கைக்கு இக்கிராமத்தின் பெயரால் யாந்தபு ஒப்பந்தம் எனப்பெயராயிற்று.
தொழில்கள்
[தொகு]யாந்தபு கிராமம் நானூறு வீடுகள் கொண்டது. இக்கிராமத்தின் முப்பது வீட்டார்கள் மட்பாண்டம் செய்யும் தொழிலும், மற்றவர்கள் வேளாளான்மை, மீன் பிடித்தல், செங்கல் சூளைக்கு களிமண் மற்றும் விறகு சேகரித்தல் தொழில்களை செய்கின்றனர்.[2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]