யாதோன் கி பாரத்
| யாதோன் கி பாராத் | |
|---|---|
| இயக்கம் | நசீர் உசேன் |
| தயாரிப்பு | நசீர் உசேன் |
| கதை | சலீம்-ஜாவேத் நசீர் உசேன் |
| இசை | ராகுல் தேவ் பர்மன் |
| நடிப்பு | தர்மேந்திரா விஜய் அரோரா தாரிக் கான் சீனத் அமான் நீது சிங் அஜித் (இந்தி நடிகர்) கேப்டன் ராஜூ |
| ஒளிப்பதிவு | முனிர் கான் |
| படத்தொகுப்பு | பாபு லவாண்டே குருதத் ஷிராலி |
| கலையகம் | நசீர் உசேன் பிலிம்சு |
| விநியோகம் | நசீர் உசேன் பிலிம்சு யுனைடெட் புரொட்யூசர்சு |
| வெளியீடு | 1973 |
| ஓட்டம் | 168 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி |
| மொத்த வருவாய் | ₹5.5 கோடி |
யாதோன் கி பாரத் (Yaadon Ki Baaraat மொ.பெ. நினைவுகளின் ஊர்வலம்) என்பது 1973ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழித் திரைப்படமாகும். இதனை நசீர் உசேன் இயக்கித் தயாரித்துள்ளார். சலீம்-ஜாவேத், நசீர் உசேன் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். இதில் தர்மேந்திரா, விஜய் அரோரா, தாரிக் கான், சீனத் அமான், நீது சிங், அஜித் (இந்தி நடிகர்), கேப்டன் ராஜூ ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல் மசாலாத் திரைப்படமாக இது பரவலாகக் கருதப்படுகிறது.[1][2] பின்னர் இது தமிழ் மொழியில் நாளை நமதே, தெலுங்கு மொழியில் அன்னதம்முல அனுபந்தம், மலையாளம் மொழியில் ஹிமம் ஆகிய பெயர்களில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[3][4]
கதைச்சுருக்கம்
[தொகு]சங்கர், விஜய், ரத்தன் ஆகிய மூன்று சகோதரர்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அவர்களது தந்தைக் குற்றவாளி சகாலின் கொள்ளையைக் கண்டு விடுவதால், சகால் தம்பதியரைக் கொன்றுவிடுகிறான். அதன்பின் மூன்று சகோதரர்களும் பிரிந்து வெவ்வேறு இடங்களில் வளர்கின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு சங்கர் ஒரு குற்றவாளியாகவும், விஜய் இளைஞனாகவும், ரத்தன் பாடகராகவும் வாழ்கின்றனர். தற்செயலாக சிறுவயதில் பாடிய “யாதோன் கி பாராத்” பாடல் அவர்களை மீண்டும் ஒன்றிணைக்கிறது. பின்னர் அவர்கள் பெற்றோரின் கொலைக்குப் பழிவாங்கி ஷகாலை தோற்கடிக்கின்றனர்.
நடிகர்கள்
[தொகு]- தர்மேந்திரா – சங்கர்
- விஜய் அரோரா – விஜய்
- தாரிக் கான் – ரத்தன் / மொன்டோ
- சீனத் அமான் – சுனிதா
- ரவீந்திர கபூர் – உஸ்மான்
- நீது சிங் – நடனக் கலைஞர்
- அஜித் (இந்தி நடிகர்) – ஷகால்
- இம்தியாஸ் கான் – ரூபேஷ்
- சத்யேன் கப்பு – ஜாக்
- அனாமிகா – ஜாக்கின் மகள்
- ஆசு– சங்கர், விஜய், ரத்தன் ஆகியோரின் தாய்
- நசீர் கான் – சங்கர், விஜய், ரத்தன் ஆகியோரின் தந்தை
- ஜலால் ஆகா – சலீம்
- மாஸ்டர் ராஜேஷ் – இளம் சங்கர்
- மாஸ்டர் ரவி – இளம் விஜய்
- ஆமிர் கான் – இளம் ரத்தன்
- ராம் அவ்தார் – வணிகர்
- மூல்சந்த் – வணிகர்
- ஜகதீஷ் ராஜ்
தயாரிப்பு
[தொகு]இத்திரைப்படத்தின் மூலம் நசீர் உசேனின் மருமகன்களான தாரிக் கான் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் திரைப்பட அறிமுகம் பெற்றனர். தாரிக் கான் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்தார். பின்னர் இந்தித் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்த ஆமிர் கான், சிறுவயது ரத்தன் கதாபாத்திரத்தில் குழந்தை நடிகராகத் தோன்றினார்.
இசை
[தொகு]திரைப்படத்தின் இசையை ராகுல் தேவ் பர்மன் அமைத்துள்ளார். பாடல்களுக்கு மச்ரூக் சுல்தான்புரி பாடல்வரிகள் எழுதியுள்ளார்.
| பாடல் | பாடகர்கள் |
|---|---|
| யாதோன் கி பாராத் நிக்லி ஹை ஆஜ் தில் கே த்வாரே (ஆண் குரல்) | கிஷோர் குமார், முகமது ரபி |
| யாதோன் கி பாராத் நிக்லி ஹை ஆஜ் தில் கே த்வாரே (பெண் குரல்) | லதா மங்கேஷ்கர், பத்மினி கோலாப்புரே, பூர்ணிமா (பாடகர்) |
| லேகர் ஹம் தீவானா தில் | ஆஷா போஸ்லே, கிஷோர் குமார் |
| மேரி சோனி மேரி தமன்னா | ஆஷா போஸ்லே, கிஷோர் குமார் |
| ஆப் கே கம்ரே மேன் கொயி ரெஹ்தா ஹை | ஆஷா போஸ்லே, கிஷோர் குமார், ராகுல் தேவ் பர்மன் |
| சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ | ஆஷா போஸ்லே, முகமது ரபி |
வரவேற்பு
[தொகு]இத்திரைப்படம் வெளியானபோது மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்று 1973ஆம் ஆண்டின் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.[5] 5.5 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டிய இத்திரைப்படம், பின்னர் வந்த பல இந்தித் திரைப்படங்களுக்கு முன்மாதிரியாகக் கருதப்பட்டது.
விருதுகள்
[தொகு]பரிந்துரைகள்
[தொகு]- சிறந்த நடிகர் – தர்மேந்திரா
- சிறந்த இசையமைப்பாளர் – ராகுல் தேவ் பர்மன்
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ Kaushik Bhaumik, "An Insightful Reading of Our Many Indian Identities" பரணிடப்பட்டது 2 ஆகத்து 2017 at the வந்தவழி இயந்திரம், The Wire, 12/03/2016
- ↑ Chaudhuri, Diptakirti (2015-10-01). Written by Salim-Javed: The Story of Hindi Cinema's Greatest Screenwriters. Penguin UK. p. 58. ISBN 9789352140084. Archived from the original on 30 October 2023. Retrieved 9 July 2017.
- ↑ "Life & Style / Metroplus : Where has all the magic gone?" இம் மூலத்தில் இருந்து 30 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231030014424/https://www.thehindu.com/features/metroplus/where-has-all-the-magic-gone/article3661883.ece.. The Hindu (2012-07-20). Retrieved on 2012-11-03.
- ↑ "60 Bollywood Films Remade in South Indian Film Industry - Koimoi". Archived from the original on 23 April 2023. Retrieved 14 October 2023.
- ↑ "Boxofficeindia.com". Boxofficeindia.com. Archived from the original on 2013-10-10. Retrieved 2012-03-16.