யாதும் ஊரே யாவரும் கேளிர்
| யாதும் ஊரே யாவரும் கேளிர் | |
|---|---|
![]() சுவரிதழ் | |
| இயக்கம் | வெங்கட கிருஷ்ண ரோகந்த் |
| தயாரிப்பு | எஸ். இசக்கி துரை |
| கதை | வெங்கட கிருஷ்ண ரோகந்த் |
| இசை | நிவாஸ் கே. பிரசன்னா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | வெற்றிவேல் மகேந்திரன் |
| படத்தொகுப்பு | ஜான் ஆபிரகாம் |
| கலையகம் | சந்திரா ஆர்ட்ஸ் |
| விநியோகம் | சக்தி பிலிம் பேக்டரி |
| வெளியீடு | 19 மே 2023 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
யாதும் ஊரே யாவரும் கேளிர் (Yaadhum Oore Yaavarum Kelir) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தின் வழியாக வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குநராக அறிமுகமானார். [1] இப்படத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். மகிழ் திருமேனி, விவேக், ரகு ஆதித்யா, மதுரா, கனிகா, ரித்விகா, மோகன் ராஜா, கரு. பழனியப்பன், சின்னி ஜெயந்த், வித்யா பிரதீப், இமான் அண்ணாச்சி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.[2]
படத்தின் தலைப்பானது புறநானூற்றின் பாடல்களில் ஒன்றான பொதுவியல் 192, "பெரியோர் சிறியோர்!" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. இந்தப் படம் 2023 மே 19 அன்று வெளியானது. [3]
தயாரிப்பு
[தொகு]2019 சூனில், படத்திற்கு தற்காலிகமாக VSP 33 என்று பெயரிடப்பட்டது. மேலும் அமலா பால் கதாநாயகியாக நடிப்பார் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.[4] [5] பின்னர், அமலா பால் இந்தப் படத்திலிருந்து விலகினார், [6] எனவே மேகா ஆகாஷ் அமலா பாலுக்கு பதிலாக ஒப்பந்தம் பெய்யப்பட்டார். [7] [8] பின்னர், படத்தின் தலைப்பு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் படம் திருவாரூர் மற்றும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. படத்தை சந்திரா ஆர்ட்ஸ் என்ற பதாகையின் கீழ் எஸ். எசக்கி துரை தயாரித்தார். படத்தின் ஒளிப்பதிவை வெற்றிவேல் மகேந்திரனும், படத்தொகுப்பை ஜான் ஆபிரகாமும் மேற்கொண்டார்.
இசை
[தொகு]இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்தார். [9] சேதுபதி படத்திற்குப் பிறகு இசையமைப்பாளரும் நடிகர் விஜய் சேதுபதியும் இரண்டாவதாக இப்படத்தில் இணைந்தனர். நிவாஸ் கே. பிரசன்னாவுடன் சிலம்பரசன் "முருகா" பாடலைப் பாடினார். [10] [11]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "முருகா" | சிலம்பரசன், நிவாஸ் கே. பிரசன்னா, எம். சி. சாய் (ராப் பகுதி) | 4:50 | |||||||
| 2. | "இமைத்திடாதே" | மால்வி சுந்தரேசன் | 3:42 | |||||||
| 3. | "வான் மேல்" | மால்வி சுந்தரேசன் | 5:31 | |||||||
| 4. | "ஆத்ம நேசர்" | மால்வி சுந்தரேசன் | 4:07 | |||||||
| 5. | "சோக்காரி" | தர்சனா கே. டி., ரம்யா நம்பீசன், லலிதா, நிவாஸ் கே. பிரசன்னா | 4:27 | |||||||
மொத்த நீளம்: |
22:38 | |||||||||
வெளியீடு
[தொகு]திரையரங்கம்
[தொகு]முதலில், படம் 2022 திசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டது.[12] ஆனால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு 2023 மே 19 அன்று வெளியானது. [13] [14]
வரவேற்பு
[தொகு]தினமணியின் கே. ராம் குமார் இந்த படத்திற்கு 2.5/5 புள்ளிகளை வழங்கி, "அகதிகள் எதிர்கொள்ளும் சிக்கலை விவரிக்கும் இயக்குனரின் நோக்கம் நல்ல நோக்கம்; அவர் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இது ஒரு சிறந்த படமாக இருந்திருக்கும்" என்று எழுதினார். [15]
"மோசமான திரைக்கதை காரணமாக உணர்ச்சிபூர்வமான இப்படத்தில் பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை" என்று கூறி, தினமலரின் ஒரு விமர்சகர் படத்திற்கு 2.5/5 புள்ளிகளை வழங்கினார். [16]
சினிமா விகடனின் ஒரு விமர்சகர் கலவையான விமர்சனத்தை அளித்து, "உரையாடல்கள் நன்றாக எழுதப்பட்டுள்ளன; அந்த உரையடல்கள் சிறந்த திரைக்கதையுடன் இணைந்திருந்தால், படம் வேறொரு நிலைக்கு உயர்ந்திருக்கும்" என்று கூறினார்.[17] சினிமா எக்ஸ்பிரஸின் அவினாஷ் ராமச்சந்திரன் படத்திற்கு 2.5/5 புள்ளிகளை வழங்கினார், மேலும் "அதன் அனைத்து குறைபாடுகளையும் மீறி, யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் உண்மையிலேயே நேர்மையான ஒன்று உள்ளது" என்று எழுதினார். [18]
மாலை மலரைச் சேர்ந்த ஒரு விமர்சகர் படத்திற்கு 2.75/5 புள்ளிகளை வழங்கினார், "அகதிகளையும், அவர்களின் வாழ்க்கையைக் காட்ட முயன்ற இயக்குனரின் முயற்சி பாராட்டப்பட வேண்டும்" என்று கூறினார். [19]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vijay Sethupathi's 'Aadhum Oore Yaavarum Kelir' gets release date". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 4 May 2023. Archived from the original on 7 May 2023. Retrieved 7 May 2023.
- ↑ "2018 review: Love for humankind at the heart of this flood-time Kerala Story". தி நியூஸ் மினிட் (in ஆங்கிலம்). 5 May 2023. Archived from the original on 5 May 2023. Retrieved 7 May 2023.
- ↑ "Vijay Sethupathi's Yaadhum Oore Yaavarum Kelir gets release date". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 4 May 2023. Archived from the original on 7 May 2023. Retrieved 7 May 2023.
- ↑ "Amala Paul Joins Vijay Sethupathi On VSP 33". The Hans India (in ஆங்கிலம்). 15 June 2019. Archived from the original on 7 May 2023. Retrieved 7 May 2023.
- ↑ "Vijay Sethupathi and Amala Paul starrer VSP 33 goes on floors". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 14 June 2019. Archived from the original on 7 May 2023. Retrieved 7 May 2023.
- ↑ "I was thrown out: Amala Paul". தி டெக்கன் குரோனிக்கள். 28 June 2019. Archived from the original on 11 May 2023. Retrieved 7 May 2023.
- ↑ "Vishnu Vishal tweets in support of Amala Paul". தி நியூஸ் மினிட் (in ஆங்கிலம்). 1 July 2019. Archived from the original on 7 May 2023. Retrieved 7 May 2023.
- ↑ "Megha Akash replaces Amala Paul in Vijay Sethupathi's upcoming romantic drama, VSP 33". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 26 June 2019. Archived from the original on 9 May 2023. Retrieved 7 May 2023.
- ↑ "Imaithidathe". சுபாட்டிபை (in ஆங்கிலம்). 6 May 2023. Archived from the original on 8 May 2023. Retrieved 8 May 2023.
- ↑ "STR sings for VJS' Yaadhum Oore Yaavarum Kelir". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 26 January 2021. Archived from the original on 11 May 2023. Retrieved 8 May 2023.
- ↑ "Watch: Energetic first single 'Muruga' from 'Yaadhum Oore Yaavarum Kelir' is out". The News Minute (in ஆங்கிலம்). 20 March 2021. Archived from the original on 10 April 2021. Retrieved 14 May 2023.
- ↑ "Vijay Sethupathi's Yaadhum Oore Yaavarum Kelir to have December release". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 October 2022. Archived from the original on 7 May 2023. Retrieved 7 May 2023.
- ↑ "ஒரே நாளில் மோதும் விஜய் சேதுபதி - விஜய் ஆண்டனி படங்கள்! | Vijay sethupathi - Vijay Antony movies releasing on a day". தினமலர். 13 May 2023. Archived from the original on 13 May 2023. Retrieved 14 May 2023.
- ↑ "Vijay Sethupathi's Yaadhum Oore Yaavarum Kelir to hit the screens on THIS date". OTT Play (in ஆங்கிலம்). Archived from the original on 7 May 2023. Retrieved 7 May 2023.
- ↑ "அகதி மக்களின் வலிகளை பேசும் யாதும் ஊரே யாவரும் கேளிர்: திரைவிமர்சனம்". Dinamani. 19 May 2023. Archived from the original on 19 May 2023. Retrieved 19 May 2023.
- ↑ "யாதும் ஊரே யாவரும் கேளிர் - விமர்சனம் {2.5/5} : யாதும் ஊரே யாவரும் கேளிர் - அடையாளத்தைத் தேடி… - Yaadhum oore yaavarum kelir". தினமலர். Archived from the original on 19 May 2023. Retrieved 19 May 2023.
- ↑ டீம், விகடன் (19 May 2023). "யாதும் ஊரே யாவரும் கேளிர்: இலங்கை அகதியாக விஜய் சேதுபதி; அரசியலும் சட்டச் சிக்கல்களும்! படம் எப்படி?". Vikatan. Archived from the original on 19 May 2023. Retrieved 19 May 2023.
- ↑ "Yaadhum Oore Yaavarum Kelir Movie Review: Asks the right questions even if it takes a prosaic route". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 19 May 2023. Archived from the original on 19 May 2023. Retrieved 19 May 2023.
- ↑ "yaadhum oore yaavarum kelir". www.maalaimalar.com. 19 May 2023. Archived from the original on 19 May 2023. Retrieved 20 May 2023.
